நாளை (03.09.2023) வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று விநாயகரை இந்த முறைப்படி வழிபட்டால் நம்முடைய கடன்களும், கஷ்டங்களும் கரைந்து விடும்.

pillaiyar valipadu
- Advertisement -

தன்னை நம்பி வணங்கும் பக்தர்கள் அனைவரின் சங்கடங்களையும் தீர்ப்பதற்காகவே அவதரித்தவர் தான் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானுக்கு வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி நாளை வரப்போகிறது. இந்த மகா சங்கடஹர சதுர்த்தியை வீட்டில் இருக்கும் அனைவரும் கடைப்பிடித்தால் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து சந்தோஷங்கள் ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாளை வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி நாளன்று எப்படி விநாயகரை வழிபட்டால் கஷ்டங்களும், கடன்களும் தீரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

மாதாமாதம் வளர்பிறை சதுர்த்தி தேய்பிறை சதுர்த்தி என்று இரண்டு சதுர்த்திகள் வரும். அதில் தேய்பிறை சதுர்த்தியை தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். அதே சங்கடஹர சதுர்த்தி ஆவணி மாதத்தில் வரும் பொழுது தான் அதை நாம் மகா சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். சங்கடங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்காக விநாயகரை சங்கடஹர சதுர்த்தி நாளன்று வழிபட்டால் அவர் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. வருடம் முழுவதும் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தியை தவறவிட்டாலும் வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த மகா சங்கடஹர சதுர்த்தியை யாரும் தவறவிடாமல் முறையாக விநாயகரை வணங்கினால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தமாக நீராடி, வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி உங்களுடைய விரதத்தை நீங்கள் துவங்க வேண்டும். உங்களின் உடல் நலனுக்கேற்றவாறு உங்களுடைய விரதமுறையை நீங்கள் அனுஷ்டிக்கலாம். முடிந்த அளவிற்கு கருப்பு நிற ஆடையை அணிவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் அல்லது சிவப்பு நிற ஆடையை அணிவதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

மாலை நேரத்தில் வழிபாட்டை நாம் ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு நாம் வழிபாட்டை மேற்கொள்வதற்கு ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை இஞ்சி இடிக்கும் கல்லிலோ அல்லது அம்மிக் கல்லிலோ வைத்து பொடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். அடுத்ததாக அதில் சிறிதளவு ஜவ்வாதை சேர்த்து நன்றாக பிணைந்து மஞ்சளில் பிள்ளையார் பிடிப்பது போல் பிள்ளையாரை பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிள்ளையாரை பிடிக்கும் பொழுது நம்முடைய கஷ்டங்களும், கடன்களும் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிள்ளையாரை பிடிக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நாம் கல் உப்பை தான் பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

இந்தப் பிள்ளையாரை ஒரு தாம்பாலத்தில் வெற்றிலையை வைத்து அதன் மேல் வைக்க வேண்டும். பிறகு பிள்ளையாருக்கு சந்தனம் குங்குமம் வைத்து, பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அவருக்கு அகலில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். அவருக்கு பிடித்த நைவேத்தியமாக கொழுக்கட்டை, லட்டு, எள்ளுருண்டை, சக்கரை பொங்கல் என்று ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு விநாயகரின் மந்திரத்தையோ அல்லது விநாயகரின் பெயரையோ 108 முறை கூறியவாறு அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறகு தூப தீப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கற்பூரம் காட்டிய பிறகு ஒரு சுத்தமான கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொண்டு, நாம் செய்து வைத்திருக்கும் இந்த கல்லுப்பு விநாயகரை எடுத்து அதில் போட்டு கரைக்க வேண்டும். அவ்வாறு கரைக்கும் பொழுது நம்முடைய கஷ்டங்களும், கடன்களும் கரைந்து விட்டது என்று முழு நம்பிக்கையுடன் கரைக்க வேண்டும். கரைத்த இந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளும், தடங்கல்களும் வருகிறதா? அப்போ இந்த தீபத்தை இப்படி ஏத்தி பாருங்க. தடைகள் எல்லாம் தவிடு பொடியாகி நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும்.

இந்த வழிபாட்டை நாம் மகா சங்கரா சதுர்த்தி நாள் அன்று தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல், மாதா மாதம் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று இதை செய்து வந்தோம் என்றால் நம்முடைய பிரச்சினைகள் விரைவில் கரைந்து மகிழ்ச்சியுடன் வாழலாம்.

- Advertisement -