எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளும், தடங்கல்களும் வருகிறதா? அப்போ இந்த தீபத்தை இப்படி ஏத்தி பாருங்க. தடைகள் எல்லாம் தவிடு பொடியாகி நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும்.

prayer sozhi deepam
- Advertisement -

பிறக்கும் குழந்தை முதல் வயதான முதியவர் வரை தங்களுடைய ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒரு முயற்சியை செய்து கொண்டு தான் இருக்கிறோம். உயிர் வாழ தேவையான மூச்சுக்காற்றை கூட நம்முடைய முயற்சியால் தான் உள்ளெழுத்து வெளியில் விடுகிறோம். இது சாதாரண விஷயமாக இருந்தாலும் இந்த முயற்சி இல்லாவிட்டால் நம்மால் உயிர் வாழ முடியாது. இதே போல் தான் நம்முடைய வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும் நாம் பல முயற்சிகளை செய்து வருகிறோம். அந்த முயற்சிகளில் தடைகளோ, தடங்கலோ ஏற்பட்டால் அதனால் மன உளைச்சல் ஏற்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நமக்கு ஏற்படக்கூடிய தடைகள்களையும், தடங்கல்களையும் சரி செய்வதற்குரிய தீப பரிகார முறையை தான் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் ஏதாவது ஒன்றில் தடை ஏற்பட்டால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதே அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தடைகளிலும், தடங்கல்களும் ஏற்பட்டால் அவரிடம் எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. இதே அந்த வீட்டில் இருக்கும் நபர்கள் அனைவருக்கும் இந்த தடைகள் ஏற்பட்டால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு உதவக்கூடிய தீப பரிகாரத்தை பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு பிரவுன் நிறத்தில் இருக்கக்கூடிய சோழி தேவைப்படும். இது அனைத்து ஸ்டேஷனரி கடைகளிலும் கிடைக்கும். அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் கடற்கரை ஓரங்களில் இருக்கும் கடைகளில் கிடைக்கும். எந்தவித உடைபாடுகளும், விரிசல்களும் இல்லாத சோழியாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு சிவப்பு நிற காட்டன் துணியை வாங்கி வந்து அதை நன்றாக துவைத்து காய வைத்து, பிறகு அதை சுத்தமான பன்னீரில் அலசி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த துணியை நாம் திரி போடுவதற்கு பயன்படுத்த வேண்டும். புதிதாக ஒரு பெரிய அகல் விளக்கை வாங்கி வந்து தண்ணீரில் போட்டு நன்றாக ஊற வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்திற்கு வளர்பிறையில் வரக்கூடிய நல்ல நாளாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்த நாளன்று விடியற் காலையில் எழுந்து வீட்டையும், தன்னையும் சுத்தப்படுத்திக் கொண்டு, வீட்டு பூஜை அறையில் பிரம்ம முகூர்த்த வேளையில் ஒரு அகல் விளக்கில் கடுகு எண்ணெயை ஊற்றி அதில் நாம் வாங்கி வைத்திருக்கும் சோழி ஐந்தையும் போட வேண்டும். பிறகு சிவப்பு நிற துணியை திரியாக திரித்து அதில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் அணையா விளக்காக தொடர்ந்து ஏழு நாட்கள் வீட்டில் எரிய வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு நாம் அகண்ட தீபம் ஏற்றி வழிபட்டோம் என்றால், நம் வீட்டிலும் நம்மிடமும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகிவிடும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து நம்முடைய முயற்சிகளில் இருக்கக்கூடிய தடைகளும், தடங்கல்களும் விலகி முயற்சிகள் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: பச்சரிசியை இப்படி வைத்தால் வீட்டில் பண என்றைக்குமே நிலையாக நிலைத்து நிற்பதோடு, பணவரவையும் அதிகரிக்கும்..

இந்த தீப பரிகாரத்தை நாமும் நம் இல்லத்தில் செய்து நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலக்கி நம்முடைய முயற்சிகளை வெற்றி அடைய செய்வோம்.

- Advertisement -