எந்த நாள் நரசிம்மரை வழிபடுகிறோமோ இல்லையோ இந்த ஒரு நாள் கண்டிப்பான முறையில் நாம் வழிபட்டோம் என்றால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

narashimhar valipadu
- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுவோம். ஒவ்வொரு தெய்வத்திற்கு என்று தனி சிறப்பு மிகுந்த நாட்களும் இருக்கின்றன. அப்படிப்பட்ட நாட்களில் அந்த தெய்வத்தை நாம் வழிபட்டோம் என்றால் அதன் பலன் நமக்கு மிகவும் அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று நாம் நரசிம்மரை எந்த நாளில் வழிபட்டால் நம்முடைய பிரச்சினைகளும், கஷ்டங்களும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

உக்கிரமான தெய்வமாக கருதப்படும் நரசிம்மரை நாம் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறுகிறோம். ஆதலால் பொதுவாக நரசிம்மரை சனிக்கிழமையில் வழிபட வேண்டும் என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். சனிக்கிழமை வழிபடுவதால் எந்த தவறும் இல்லை இருப்பினும் அவருக்கு மிகவும் சிறப்பாக கருதப்படக் கூடிய நாளாக திகழக் கூடியது தான் பிரதோஷம். சிவபெருமானுக்கு விசேஷமாக இருக்க கூடிய பிரதோஷ நாளன்று நாம் நரசிம்மரை வழிபடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

- Advertisement -

நரசிம்மரின் கோபம் தனிய பெற்ற நாளாக பிரதோஷ நாள் இருக்கிறது. மேலும் உக்கிர நரசிம்மர் லஷ்மி நரசிம்மராக சாந்தரூபமாக மாறிய நேரம் பிரதோஷ நேரம் ஆகும். ஆதலால் நாம் எந்த அளவுக்கு பிரதோஷ நாளன்று சிவபெருமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே போல் நரசிம்மருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பிரதோஷ நாள் அன்று பிரதோஷ நேரத்தில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து அர்ச்சனை செய்து நாம் வழிபடுவதன் மூலம் நம்முடைய பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் நரசிம்மருக்குரிய மந்திரங்களை கூறுவதன் மூலம் அவருடைய அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மந்திரங்கள் தெரியாதவர்கள் “ஓம் நமோ நாராயணா” என்று உச்சரித்தாலே நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அப்படி இல்லை என்றால் “ஓம் லக்ஷ்மி நரசிம்மரே போற்றி” என்றும் கூறலாம்.

பிரதோஷ நாளன்று நாம் மனதார லட்சுமி நரசிம்மரை வழிபடுவதன் மூலம் நம்முடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எதிரிகளால் ஏற்படக்கூடிய தொல்லைகள் அனைத்தும் விலகும். நரசிம்மரின் அருளோடு லஷ்மி தாயாரின் அருளும் நமக்கு கிடைப்பதால் செல்வ செழிப்பு மேலோகும்.

இதையும் படிக்கலாமே: வியாழக்கிழமை இந்த தண்ணீரில் முகம் கழுவினால், அடகு வைத்த நகையை சீக்கிரம் மீட்டு எடுக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நகையை மீட்க முடியாமல் தடுக்கும் தரித்திரத்தை விளக்க எளிய பரிகாரம்.

பிரதோஷ நாளான அற்புதமான நாளில் சிவபெருமானை வழிபடுவதோடு, நரசிம்மரையும் சேர்த்து வழிபட்டு அனைத்து கஷ்டங்களில் இருந்தும் விலகி மகிழ்ச்சியுடன் வாழலாம்

- Advertisement -