நாம் படக்கூடிய, கஷ்டத்தை நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர் படக் கூடாது என்றால், குலதெய்வத்தை இப்படி வழிபாடு செய்ய வேண்டும்.

amman
- Advertisement -

எல்லா குடும்பத்தில் இருப்பவர்களும் நினைப்பது இதுதான். நாம் படக்கூடிய கஷ்டத்தை நம் பிள்ளைகள் படக்கூடாது என்று தான் எல்லா பெற்றவர்களும் நினைப்பார்கள். நம்முடைய இந்த சந்ததி தான் கஷ்டப்படுகிறது. இதற்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையாவது தலைதூக்காதா என்ற ஏக்கம் நிச்சயம் எல்லோரிடத்திலும் இருக்கும். கண்ணீரும் கஷ்டமும் சேர்ந்து கலங்கி நிற்கும் குடும்பத்திற்கு கூட ஒரு விடிவு காலம் பிறக்க வேண்டுமென்றால் இந்த முறையில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு பாருங்கள். நிச்சயமாக இந்த தலைமுறைக்கு மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையில் வரக்கூடிய உங்களுடைய சந்ததியினர் கூட சந்தோசமாக வாழ்வார்கள்.

மாதம்தோறும் அம்மாவாசை முடிந்த பின்பு, அம்மாவாசைக்கு மூன்றாவது நாள் கடைக்கு சென்று நீங்கள் புதியதாக கல்லுப்பை உங்கள் வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். வாங்கி வந்த கல் உப்பு பாக்கெட்டை ஒரு மஞ்சள் பையில் போட்டு உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலை அல்லது வடமேற்கு மூலையில் வைத்து விடுங்கள். குலதெய்வத்தை நினைத்து உங்கள் கர்ம வினைகள் அனைத்தும் உங்களோடு அழிந்து போகவேண்டும் என்று இந்த உப்பை வாங்கி வாருங்கள்.

- Advertisement -

மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசைக்கு அடுத்த மூன்றாவது நாள் திரிதியை திதி அன்று இந்த உப்பை வாங்க வேண்டும். வாங்கிவந்த உப்பை வீட்டில் சேகரித்து வரவேண்டும். மாதமாதம் இது அப்படியே தொடரட்டும். உங்கள் குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் எப்போது செல்கிறீர்களோ, அப்போது நீங்கள் சேகரித்த உப்பு பாக்கெட்டை எடுத்துக் கொண்டு போய் குலதெய்வ கோவிலில் கொடுக்க முடிந்தால் கொடுத்துவிடலாம்.

அப்படி உங்களால் குலதெய்வ கோவிலில் அந்த உப்பை கொடுக்க முடியவில்லை என்றால், கோவிலில் குளத்தில் உப்பை கரைத்து விட முடியும் என்றால், உப்பு பாக்கெட்டுகளை பிரித்து, அந்த குளத்து தண்ணீரில் கல் உப்பைக் கொட்டி உங்கள் கையைக் கொண்டு கரைத்து விடுங்கள். ‘என்னுடைய கஷ்டம் என்னோட போகட்டும். என்னுடைய குலதெய்வம் எனக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கு கஷ்டத்தைக் கொடுக்க கூடாது.’ என்று மனதார நினைத்து அந்த உப்பை குளத்தில் கரைத்து விடலாம்.

- Advertisement -

குளத்திலும் கரைக்க முடியாத சூழ்நிலை இருந்தால், கோவில் வட்டாரத்தில் எங்காவது ஒரு இடத்தில் ஒரு பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி அந்த தண்ணீரில் இந்த உப்பைக் கொட்டி உங்கள் கைகளைக் கொண்டு நன்றாக கரைத்து விடுங்கள். அதன் பின்பு அந்த தண்ணீரை கோவில் வளாகத்திற்கு வெளியே பக்கத்தில் ஏதாவது ஒரு கால் படாத இடத்தில் ஊற்றி விட்டு வந்து விடுங்கள்.

எத்தனை முறை இப்படி செய்வது. எத்தனை பாக்கெட்டுகளை இப்படி வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்துவது, என்ற சந்தேகம் நிச்சயம் எழும். அது அவரவர் விருப்பம் தான். 6 மாதத்திற்கு, 6 உப்பு பாக்கெட்டுகளை சேகரித்து வைத்து கொண்டு, குலதெய்வ கோவிலுக்கு சென்று கரைத்தாலும் போதும். ஒருவரிடம் உங்களால் உப்பு பாக்கெட்டுகளை வாங்கி சேகரித்து, 12 பாக்கெட்டுகளை குலதெய்வ கோவிலுக்கு கொண்டு செல்ல முடியுமென்றால் அது உங்கள் சவுகரியம். ஒரே ஒரு உப்பு பாக்கெட்டை வாங்கி, என்னால் இந்த பரிகாரத்தை செய்ய முடியும் என்றாலும் செய்து பலன் பெறலாம்.

ஆக மொத்தத்தில் கஷ்டமும் கண்ணீரும் உங்களோடு தொலைந்து போக வேண்டும் என்றால் மேல் சொன்ன பரிகாரத்தை உங்கள் கையால் ஒரே ஒரு முறையாவது, ஒரு பாக்கெட் கல் உப்பை கொண்டு செய்து பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் நம்பமுடியாத நிறைய மாற்றங்களை உணர்வீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -