நவராத்திரியின் கடைசி நாளான இன்று துர்காஷ்டமி. இன்றைய நாளில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான கஷ்டங்களும் தீரும் என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய இந்த துர்காஷ்டமி நாளில் நாம் துர்க்கை அம்மனை முழுமனதோடு எந்த முறையில் வழிபட்டாலும் நம்முடைய கஷ்டங்கள் தீர்வதற்குரிய வாய்ப்பை அவள் அருள். அப்படிப்பட்ட துர்காஷ்டமி நாளான இன்று துர்க்கை அம்மனை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டம் தீர துர்க்கை மந்திரம்
துர்க்கை அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் எலுமிச்சை தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பல பெண்களும் இதை தங்களுடைய வழக்கமான வழிபாட்டு முறைகளிலேயே சேர்த்து வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட துர்க்கை அம்மனுக்குரிய செவ்வாய்க்கிழமை அன்று துர்காஷ்டமி வருவது என்பது கூடுதல் சிறப்பை தரும். மற்ற நாட்களில் வழிபாடு செய்யாதவர்கள் கூட இந்த ஒரு நாளை தவிர விடாமல் வழிபாடு செய்யும்பொழுது துர்க்கை அம்மனின் பரிபூரணமான அருளைப் பெற முடியும்.
துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் மந்திர வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்த ஒன்றாக திகழ்கிறது. துர்க்கை அம்மனுக்குரிய துர்காஷ்டமி வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கை அம்மனை நினைத்து மந்திர வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்குவதோடு செல்வ செழிப்புடன் வாழ்வதற்குரிய வாய்ப்புகளும் வந்து சேரும்.
அந்த வகையில் இன்று இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிக்குள் துர்க்கை அம்மனை நினைத்து இந்த ஒரு மந்திர உச்சாடலை நாம் செய்ய வேண்டும். இந்த மந்திர உச்சாடலை செய்பவர்கள் கண்டிப்பான முறையில் குளித்திருக்க வேண்டும். அசைவத்தை தவிர்த்து இருக்க வேண்டும். ஒருவேளை தெரியாமல் அசைவம் சாப்பிட்டிருக்கும் பட்சத்தில் இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பிறகு மந்திர வழிபாட்டில் ஈடுபட வேண்டும். பெண்கள் தீட்டு சமயத்தில் இந்த மந்திர வழிபாட்டை செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டு பூஜை அறையில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்தில் சென்று கூட இந்த மந்திர உச்சாடலை செய்யலாம். வீட்டு பூஜை அறையில் அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தங்களுடைய வலது கையில் இரண்டு ஏலக்காயை வைத்துக்கொண்டு விஷ்ணு துர்க்கையை மனதார நினைத்து தங்களுடைய கஷ்டங்களை அனைத்தும் தீர வேண்டும் என்று கூறிவிட்டு பின்வரும் இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 20 நிமிடம் கூற வேண்டும்.
20 நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் விஷ்ணு துர்க்கையிடம் தங்களின் அருளால் அனைத்து விதமான செல்வ செழிப்புகளையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த இரண்டு ஏலக்காயையும் எடுத்து தங்களுடைய பணத்துடன் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமான குறிப்பு ஏலக்காய் வாசனை மிகுந்ததாக இருக்க வேண்டும். பழைய வாசனையற்ற ஏலக்காயை பயன்படுத்துவதால் எந்தவித பலனும் கிடைக்காது.
மந்திரம்
” ஓம் க்லீம் விஷ்ணு துர்காயை நமஹ “
இதையும் படிக்கலாமே: ஆயுத பூஜை பரிகாரம். வழிபாடு செய்ய வேண்டிய நல்ல நேரம்
எளிமையான இந்த மந்திர உச்சாடலை மிகவும் சக்தி வாய்ந்த செவ்வாய்க்கிழமை துர்க்காஷ்டமி அன்று கூறுபவர்களுக்கு துர்க்கை அம்மனின் அருளால் அனைத்து விதமான பண கஷ்டங்களும் மனக்கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.