உக்கிர தெய்வங்களின் வரிசையில் இருக்கக்கூடிய தெய்வமாக கருதப்படுபவர் தான் லட்சுமி நரசிம்மர். உண்மையான பக்திக்கு அடிபணியக்கூடியவராக திகழ் பவர் தான் லட்சுமி நரசிம்மர். முழு மனதோடு யார் ஒருவர் லட்சுமி நரசிம்மரை கூப்பிட்டாலும் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அவர்களுடைய கஷ்டத்தை தீர்க்கக் கூடியவராக தான் திகழ்கிறார். அப்படிப்பட்ட லட்சுமி நரசிம்மருக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நரசிம்ம பெருமாள் இவரை உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் என்று நாம் அழைக்கிறோம். லட்சுமி நரசிம்மரை நாம் வழிபடும் பொழுது மகாலட்சுமியின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் லட்சுமி நரசிம்மர். அப்படி நம்முடைய பிரச்சினைகள் தீர்வதற்கு நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான தீப வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த தீப வழிப்பாட்டை சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். வாராவாரம் சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று லட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் நெய் தீபம் ஏற்றும்பொழுது எத்தனை எண்ணிக்கையில் ஏற்றுகிறோமோ அதற்கேற்றார் போல் பலன் நமக்கு கிடைக்கும். அந்த பலன்களை பற்றி பார்ப்போம்.
இரண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். நான்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆறு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய நோய்கள் குணமாகும். ஏழு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும். எட்டு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் மாங்கல்ய பலம் உண்டாகும்.
பத்து நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தொழிலில் வெற்றி கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும். பதிமூன்று நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டால் பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும். பதினைந்து நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பதினேழு நெய் தீபங்களை ஏற்று வழிபட்டால் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நாற்பத்தி எட்டு நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டால் சொந்தத் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதோடு வாழ்வில் நல்ல உயர்வும் ஏற்படும். நூற்றியெட்டு நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
இவ்வாறு தீபத்தை ஏற்றிய பிறகு பின்வரும் பாடலை மனதார லட்சுமி நரசிம்மரை பார்த்து கூறி வர நாம் எந்த காரியத்தை நினைத்து தீபம் ஏற்றினோமோ அந்த காரியம் நமக்கு எளிதில் நடைபெறும்.
பாடல்
பக்தி அற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தை போக்குபவனே!
லக்ஷ்மி நரசிம்மனே! உனது திருவடியை சரணடைகிறேன்.
இதையும் படிக்கலாமே: கர்மா குறைகிறது என்பதற்கான அறிகுறிகள்
மிகவும் எளிமையான இந்த பாடலில் இருக்கக்கூடிய கருத்தை உணர்ந்து மனதார லட்சுமி நரசிம்மருக்கு நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நலமான வாழ்க்கையை வாழ முடியும்.