நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு ரூபத்தில் கஷ்டங்கள் என்பது வந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு கஷ்டம் போக மற்றொரு கஷ்டம் வரத்தான் செய்யும். அதனால்தான் கஷ்டம் இல்லாத வாழ்க்கையே இல்லை என்று கூறுவதும் உண்டு. அப்படிப்பட்ட கஷ்டங்களை நீக்க வேண்டும் என்றால் அதை சமாளித்து அதில் இருந்து வெளியே வருவதற்குரிய மன தைரியம் என்பது வேண்டும். அந்த தைரியத்தை வழங்கி கஷ்டத்தை தீர்ப்பதற்குரிய வழியையும் காட்டக்கூடிய தெய்வங்களும் ஒருவராக திகழ்பவர் தான் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபாடு செய்ய நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆஞ்சநேயர் வழிபாடு
காரிய தடையை விலக்கி மன தைரியத்தை தந்து நம்முடைய வாழ்நாளில் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்குவதற்கு உரிய வழியை காட்டக்கூடிய தெய்வமாக ஆஞ்சநேயர் திகழ்கிறார். ஆஞ்சிநேயருக்கு உகந்த கிழமையாக வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக சனிக்கிழமையில் நாம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்பொழுது நவகிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் நீங்கி கஷ்டங்கள் விலகக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். அப்படி நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு ஆஞ்சநேயரை எந்தெந்த முறைகளில் வழிபாடு செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போக வேண்டும் என்றால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்ற வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டிருப்போம். அந்த வெண்ணையை வாங்கி ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் சாற்ற வேண்டும் என்று கூறுவார்கள். இன்னும் சிலரோ அதற்கு வசதி இல்லை என்று வெண்ணையை ஆஞ்சநேயரின் வாயில் மட்டும் வைப்பது போல வாங்கி தருவார்கள். அந்த அளவிற்கு கூட எனக்கு வருமானம் இல்லை ஆனால் நான் அதிகளவில் கஷ்டப்படுகிறேன் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று ஒரே ஒரு வெற்றிலையில் வெண்ணெயை வைத்து ஆஞ்சநேயருக்கு நெய்வேத்தியமாக சமர்ப்பித்து அவரை வழிபாடு செய்வதன் மூலமும் வெண்ணெய் காப்பு சாற்றியதற்குரிய பலன் கிடைத்து நம்முடைய கஷ்டங்கள் கரைந்து போகும்.
இந்த முறையில் நாம் வெற்றிலை மாலையும் சாற்றலாம். வெற்றிலையில் சிறிதளவு வெண்ணையை தடவி அதை மாலையாக கட்டி ஆஞ்சநேயருக்கு சமர்ப்பணம் செய்வதன் மூலமும் நம்முடைய கஷ்டங்கள் தீரும். அதோடு மட்டுமல்லாமல் இப்படி வெற்றிலையில் வெண்ணையை தடவி 108 வெற்றிலை என்ற எண்ணிக்கையில் ஆஞ்சநேயருக்கு 108 போற்றிகள் கூறி அந்த வெற்றிலையால் அர்ச்சனை செய்தாலும் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த முறைகளில் ஏதாவது ஒரு முறையை 9 வாரங்கள் தொடர்ச்சியாக நாம் ஆஞ்சநேயரின் ஆலயத்தில் செய்து 9 முறை ஆஞ்சநேயரை வலம் வருவதன் மூலம் ஆஞ்சநேயரின் அருளால் நமக்கு நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.
இதையும் படிக்கலாமே:தீரா கஷ்டத்திற்கு தீர்வு தரும் பிரியாணி இலை பரிகாரம்
அனுதினமும் ராம நாமத்தை கூறிக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயருக்கு வெண்ணையை இந்த முறையில் சாற்றி வழிபாடு செய்ய ஆஞ்சநேயரின் அருளால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.