யாருக்கு தான் கஷ்டம் இல்லை? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் என்பது இருக்கும். ஏழ்மையில் இருப்பவர்களுக்கு ஒரு விதமான கஷ்டம் என்றால் பணக்காரனாக இருக்கக்கூடியவருக்கு ஒரு விதமான கஷ்டம் என்பது இருக்கும். இந்த உலகத்தில் கஷ்டமில்லாமல் வாழக்கூடிய நபர்கள் என்று யாருமே இருக்க முடியாது. யாரையுமே சொல்லவும் முடியாது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியாக பிரச்சனைகளும் கஷ்டங்களும் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாகவோ அல்லது ஒரு கஷ்டம் முடிவதற்குள் மற்றொரு கஷ்டம் வந்து வாழவே சிரமப்படக்கூடிய நபர்கள் தங்களின் இக்கட்டான சூழ்நிலையில் தங்களுடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வாராஹி மந்திரம்
தீர்க்க முடியாத கஷ்டங்கள், பிரச்சினைகள் இருக்கிறது. அது தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உக்கிர தெய்வங்களை வழிபடுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. நினைத்த உடனேயே அவர்களை வழிபாடு செய்யவும் முடியாது. அவர்களை நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்றால் முதலில் அவர்களின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அந்த வழிபாட்டை நாம் செய்வதற்குள் நமக்கு பலவிதமான தடைகள் வரும். அந்த தடைகளையும் தாண்டி நம்பிக்கையுடன் அந்த தெய்வத்திடம் சரணாகதி அடைந்து விட்டோம் என்றால் நம் வாழ்வில் நாம்மாள் சமாளிக்கவே முடியாத இக்கட்டான செயலையும் நாம் சமாளித்து வெளியே வந்துவிடலாம்.
அந்த வகையில் உக்கிர தெய்வங்கள் ஒருவராக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். பெண் உக்ர தெய்வம், ஆண் உக்ர தெய்வம் என்று தெய்வங்கள் இருந்தாலும் பெண் தெய்வங்களுக்கு அதிக அளவில் வீரிய தன்மை இருக்கிறது என்று கூறப்படுகிறது. உக்கிர தெய்வங்கள் மட்டும் அல்ல சாதாரண எந்த தெய்வமாக இருந்தாலும் நம்மளுடைய நியாயமான வேண்டுதலையும் கோரிக்கையையும் முன்வைத்து சரணாகதி அடைந்தால் மட்டுமே தான் அந்த வேண்டுதலும் கோரிக்கையும் பிரச்சினைகளும் கஷ்டங்களும் தீரும். அந்த வகையில் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும்.
நம்மை வாழ விடாமல் கஷ்டப்படுத்தக் கூடிய எதிரிகள் யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அவர்களை விரட்டியடிக்க கூடிய அற்புதமான தெய்வமாக தான் வாராகி அம்மன் திகழ்கிறாள். அப்படிப்பட்ட வாராகி அம்மனை நாம் பஞ்சமி திதியில் வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். பஞ்சமி திதி மட்டும் வழிபாடு செய்யாமல் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை தினமும் 108 முறை வாராகி அம்மனை நினைத்து கூறினாலேயே வாராஹி அம்மனின் அருள் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று கூறப்படுகிறது.
சுத்தமாக இருக்கக்கூடிய நபர்கள் தான் கூற வேண்டும். அசைவம் சாப்பிட்டிருந்தால் இந்த மந்திரத்தை கூறக்கூடாது. அதனால் காலையிலேயே தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் பொழுது இந்த மந்திரத்தை 108 முறை கூறலாம். வீட்டு பூஜையறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூற ஆரம்பிக்கலாம். இந்த மந்திரத்தை கூறும்பொழுது வாராகி அம்மனுக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். வீட்டில் எதுவுமே இல்லை என்றாலும் ஒரு டம்ளர் தண்ணீரையாவது நெய்வேத்தியமாக வைத்து தான் இந்த மந்திரத்தை கூற வேண்டும். மந்திரத்தை கூறி வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த தண்ணீரை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பருக வேண்டும்.
மந்திரம் :
” கேதநீ மல்லிகா ளஸோகா வாராஹீ தரணீத்ருவா
நாராஸிம்ஹீ மஹோக்ராஸ்யா பக்தாநா மார்தி நாஸிநீ.. “
இதையும் படிக்கலாமே: சகல சௌபாக்கியத்தை அருளும் விநாயகர் மந்திரம்
வராகி அம்மனின் அற்புதமான இந்த மந்திரத்தை முழுமனதோடு தினமும் கூறி வழிபாடு செய்பவர்களுக்கு வாராஹி அம்மனே பக்கபலமாக இருந்து கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.