நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம். கஷ்டங்கள் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்று கூட கூறலாம். ஒரு சிலருக்கு கஷ்டங்கள் தற்காலிகமாக வந்து செல்லும். இன்னும் சிலருக்கோ நிரந்தரமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்படிப்பட்ட கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் துவாதசி நாள் அன்று அம்மனை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கஷ்டங்களை விளக்கும் வழிபாடு
ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் வழிபாட்டிற்குரிய தெய்வங்களாக திகழ்கின்றன. அந்த வகையில் துவாதசி என்பது அம்மனை வழிபாடு செய்வதற்கு உரிய திதியாக கருதப்படுகிறது. அம்மனை நாம் சாதாரணமாக வழிபாடு செய்தாலே சிறப்பான பலன் கிடைக்கும். அதிலும் சிறப்பான முறையில் வழிபாடு செய்தோம் என்றால் இன்னும் கூடுதல் பலனே கிடைக்கும். முழு நம்பிக்கையோடு அவளை நினைத்து நாம் செய்யக்கூடிய இந்த ஒரு வழிபாடு நம்முடைய வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தையுமே நீக்கிவிடும்.
ஜூலை மாதம் ஏழாம் தேதி துவாதசி திதி வருகிறது. இது வளர்பிறை துவாதசி. மேலும் அன்றைய தினம் திங்கட்கிழமை. இவை அனைத்தும் சேர்ந்து வரக்கூடிய நாளில் நாம் அம்மன் வழிபாட்டில் ஈடுபடும் பொழுது அம்மனின் அருளால் அனைத்து விதமான கஷ்டங்களும் தீரும். இந்த வழிபாட்டை நாம் ஆலயத்திலும் அமர்ந்து செய்யலாம், வீட்டில் செய்யலாம். அன்றைய நாள் முழுவதும் செய்து கொண்டிருக்க வேண்டிய ஒரு அற்புதமான வழிபாடாக தான் இந்த வழிபாடு திகழ்கிறது.
காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மனின் படத்திற்கு சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அம்மனுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு அல்லது நின்று கொண்டு “ஓம் சக்தி பராசக்தி” என்னும் மந்திரத்தை நம்மால் இயன்ற அளவு கூற வேண்டும்.
அதேபோல் அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபாடு செய்துவிட்டு அங்கேயே அமர்ந்தும் இந்த மந்திரத்தை நாம் கூறலாம். இவ்வாறு கூறி முடித்த பிறகு நம்மால் இயன்ற தான தர்மங்களை செய்யும் பொழுது நம்முடைய கஷ்டங்கள் மட்டுமல்லாமல் நம்முடைய கர்ம வினைகளையும் அந்த அம்மனின் அருளால் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் இந்த மந்திரத்தை கூறலாம் என்பது கூடுதல் சிறப்பு.
இதையும் படிக்கலாமே: இன்று 6-7-2025 ஆனி மாத வளர்பிறை ஏகாதேசி
எளிமையான இந்த வழிபாடு அம்மனின் பரிபூரண அருளைப் பெறச் செய்வதோடு நம்முடைய கஷ்டங்களையும் தீர்த்து வைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.