காதலில் தோல்வியுற்ற மனம் – சோக கவிதை

Love kavithai

உடைந்த என் உள்ளத்தில்
ஒரு கோடி சிதில்களாய் நீ உறைகிறாய்..
என் கனவும் உன் மீது
காதல் வயப்படுமோ என்று
கண் விழித்து தவிக்கிறேன் தூக்கமின்றி..

love failure kavithai image

உன் நினைவை மறக்க மூலை சொல்கிறது
உன்னை மட்டுமே நினைக்க என் நெஞ்சம் துடிக்கிறது..
நீருக்குள் மூழ்கிய தாமரையாய்
நான் வெளியே சிரித்து, உள்ளே
உன் நினைவென்னும் போதையில் மூழ்கி தவிக்கிறேன்..

உன்னை காதலித்த பாவத்திற்காக
மது என்னும் பரிகாரத்தை தினம் தினம் செய்கிறேன்
ஆனால் உன் நினைவு மட்டும் என்னுள் இருந்து
நீங்கிய பாடு இல்லை..

என் படுக்கை தலையணையில் தான் எத்தனை ஈரங்கள்
அதில் ஒரு துளியேனும் உன் உள்ளத்தில் இருந்திருந்தால்
உன்னோடு நான் இன்று கை கோர்த்து உறங்கி இருப்பேன்..

love failure kavithai in english

காதலில் தோல்வியுற்ற ஒருவனின் இதயம் நிச்சயம் உடைந்து தான் போகும். காதலிக்கும் போது எப்படி தூக்கம் வராதோ அதே போல தான் காதல் தோல்வியுற்ற ஒருவனுக்கும் தூக்கம் என்பது இல்லமால் போகும். அவன் சோகத்தின் சதியில் இருப்பான். அதை உணர்த்துவதே இந்த கவிதை. இது போன்ற மேலும் பல காதல் தோல்வி கவிதைகள், காதல் கவிதைகள் என்ன பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.