இந்த சட்னியை எதில் செய்தீர்கள் என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள முற்றிலும் வித்தியாசமான ஆரோக்கியம் தரும் சட்னி ரெசிபி.

kathrikai-chutney
- Advertisement -

இந்த சட்னியை பார்த்தால் காரச் சட்னி, வெங்காய சட்னி, போல இருக்கிறது. ஆனால் அது கிடையாது. கத்திரிக்காயை வைத்து செய்யக்கூடிய ஆரோக்கியம் தரும் அருமையான சட்னி இது. சில பேர் கத்திரிக்காயை உணவோடு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் உடலுக்கு தேவையான ஏராளமான சத்து கத்தரிக்காயில் அடங்கியிருக்கிறது. அந்த கத்திரிக்காயை இப்படி சட்னியாக அரைத்து கொடுத்து விட்டால், இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடுவார்கள். கத்திரிக்காய் சாப்பிடாதவர்களை கூட, சாப்பிட வைக்க இந்த சட்னி ரெசிபி உங்களுக்கு உதவியாக இருக்கும். வாங்க அந்த அருமையான சட்னியை எப்படி அரைப்பது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

கத்திரிக்காய் சட்னி செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, வர மிளகாய் 8, உளுந்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் கருகாமல் வறுத்து எடுக்க வேண்டும். தனித்தனியாக போட்டு கூட வறுத்து எண்ணெயை வடிகட்டி, மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்த வர மிளகாய், வறுத்த உளுந்தம் பருப்பு, அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அதே கடாயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் – 2 போட்டு, கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும். அதன் பின்பு நறுக்கிய கத்திரிக்காய் – 3 போட்டு வதக்க வேண்டும். கத்தரிக்காய்களை கொஞ்சம் பொடியாக நறுக்கி போட்டு வதக்குங்கள். கத்தரிக்காய் முழுமையாக நிறம் மாறி முழுவதும் வெந்து கிடைக்க வேண்டும். அதாவது கத்திரிக்காயை நசுக்கி பார்த்தால் சாஃப்ட்டாக இருக்க வேண்டும்.

கத்திரிக்காய் எண்ணெயில் வதங்கும் போது, வேக வில்லை என்றால் சுவை நன்றாக இருக்காது. வெங்காயம் 1/2 கப் அளவு எடுத்துக் கொண்டால், அதே 1/2 கப் கத்திரிக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும். கத்தரிக்காயும் வெங்காயமும் சம அளவு போட்டு சட்னி அரைக்கும்போது இதனுடைய சுவை சரியாக வரும்.

- Advertisement -

கத்தரிக்காய் வதங்கி வந்தவுடன் நறுக்கிய தக்காளி பழம் – 1, சின்ன நெல்லிக்காய் அளவு – புளியைப் போட்டு, மீண்டும் வதக்க தொடங்குங்கள். தக்காளிப் பழம் வதங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவல் சேர்த்து, எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து விட்டு, தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளவும். இப்போது கடாயில் வதக்கி இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆற வேண்டும். சூடாக அரைக்கக் கூடாது.

சட்னியை அரைக்கும் முறை:
மிக்ஸி ஜாரில் முதலில் வரமிளகாய், உளுந்து வறுத்து போட்டு இருக்கிறோம் அல்லவா அதை தண்ணீர் ஊற்றாமல் கொறகொறப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியில் ஆற வைத்திருக்கும் கத்தரிக்காய் வெங்காயம் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, 90% சதவீதம் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த சட்னியை தனியாக ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: இட்லி தோசைக்கு சட்னி அரைக்கும் நேரத்தில் சட்டுனு இந்த சூப்பரான குருமா ரெடி பண்ணிடலாம். இந்த குருமா சுவைக்கு முன்னாடி சிக்கன் குருமாவே தோற்றுப் போய்டும்.

இதற்கு 2 ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து போட்டு சுட சுட இட்லி தோசை சப்பாத்திக்கு பரிமாறினால் அருமையாக இருக்கும். சுட சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலும் இது நல்ல சுவையை கொடுக்கும் ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -