காட்டுமன்னார்கோயில் காத்தாயி அம்மன் கோயில் சிறப்புக்கள்

kathayee-amman

இந்த பூமியில் தனித்து வாழ பிறந்தவன் அல்ல மனிதன். தனது பிறப்பு முதல் இறப்பு வரை பிறரின் அனுசரணை மற்றும் உதவி தேவையாக தான் இருக்கிறது. இவற்றில் ஒரு சில உதவிகளை எந்த ஒரு மனிதனுக்கும் அந்நியர்கள் எவரும் செய்ய முடியாது. உடன்பிறந்தவர்கள், பங்காளிகள் மற்றும் இதர உறவினர்கள் மட்டுமே செய்ய முடியும். அந்த வகையில் ஒருவருக்கு உறவினர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் காட்டுமன்னார்கோயில் “அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில்” பற்றிய சில சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

MathuraKaliamman

காத்தாயி அம்மன் கோயில் வரலாறு

மிகவும் பழமையான இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த கோயிலின் தெய்வங்களாக குருங்குடில் “காத்தாயி அம்மன், பச்சை வாழியம்மை, பூங்குறத்தியம்மை” ஆகிய மூன்று அம்மன் தெய்வங்கள் இருப்பது இக்கோயிலின் சிறப்பாகும். சோழ மன்னர்கள் தங்களின் குலதெய்வமாக இந்த அம்மன்களை வழிபட்டு வந்துள்ளனர்

“முதலாம் குலோத்துங்க சோழன்” மதுரையை ஆட்சி புரிந்து கொண்டிருந்த “வமிசேகர பாண்டியன்” மன்னனுடன் போரிட முற்பட்டான். எத்தகைய போரில் ஈடுபடவும் சிறிதும் விருப்பமில்லாத வமிசேகர பாண்டியன் தான் வழிபடும் மதுரை சொக்கநாதராகிய சிவபெருமானிடம் இதை பற்றி முறையிட்டான் பாண்டிய மன்னன் மீது இரக்கம் கொண்ட சிவபெருமான் ஒரு குறவன் வேடத்தில் சென்று முதலாம் குலோத்துங்க மன்னனிடம் போரிட்டார். போரில் தோல்வியை தழுவிய குலோத்துங்கன் வேடன் வேடத்தில் வந்திருப்பது சிவபெருமான் என்றறிந்து அவர் பாதம் பணிந்தான்.

MathuraKaliamman

பிறகு சிவபெருமான் போரினால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூறி பாண்டியனுடன் போரை தவிர்த்து வாழுமாறும், மறுபிறவியிலும் குலோத்துங்கன் மன்னனாகவே பிறக்க ஆசீர்வதித்து மறைந்தார். மறுபிறவியில் சோழ குலத்தில் இரண்டாம் குலோத்துங்க மன்னனாக பிறந்து, தான் முன்பு வழிபட்ட அம்மன் தெய்வங்களை வழிபடலானான். குலோத்துங்கனுக்கு எதிராக அவனது பங்காளிகள் பல தொந்தரவுகளை கொடுத்து வந்தனர். இதை அறிந்த மன்னன் நேராக அம்மன் கோயிலுக்கு அம்மனிடம் தனது பங்காளிகள் தனது ஆட்சிக்கு தொந்தரவு விளைவிப்பது குறித்து வருந்தினான். இதை கேட்ட அம்பிகை குறத்தி வடிவத்தில் மன்னனின் பங்காளிகளிடம் சென்று பலவகையில் பேசி மன்னனுக்கும் அவனது பங்காளிகளுக்கும் ஒரு இணக்கத்தை ஏற்படுத்தினாள். இதனால் மிகவும் மகிழ்ந்த மன்னன் அம்பிகைக்கு குறத்தி வடிவில் ஒரு சிலை வடித்து இக்கோயிலின் காத்தாயி அம்பாள் சிலைக்கருகில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

- Advertisement -

காத்தாயி அம்மன் கோயில் சிறப்புக்கள்

ஒரே கருவறையில் மூன்று அம்மனின் தெய்வங்களின் விக்கிரகங்கள் இக்கோயிலில் இருப்பது அபூர்வ அம்சமாகும். இங்கு சிவபெருமான் உருவ வடிவில் காட்சியளிக்கிறார். இவரின் சந்நிதி தட்சிணாமூர்த்திக்குரிய தென் திசை நோக்கி இருப்பதால் வியாழக்கிழமைகளில் கல்வி, கலைகளில் சிறக்க தீபமேற்றி வழிபடுகின்றனர்.

amman

இக்கோயிலின் ஒரு அம்மன் தெய்வமான குழந்தையம்மனை வழிபடும் பெண்களுக்கு சுக பிரசவத்தில் குழந்தை பிறக்கும் எனவும், குழந்தை பிறந்த பின்பு தாய் – சேய் நலமாக இருக்க அம்மன் அருள்புரிவதாக பக்தர்களின் திடமான நம்பிக்கை ஆகும். பங்காளிகள் மற்றும் சகோதரர்கள் உடனான உறவு சிறக்க, சண்டை மற்றும் மனஸ்தாபங்களால் பிரிந்திருக்கும் சகோதர்கள் ஒன்று சேர இங்கு வந்து அம்மன் தெய்வங்களை வழிபடுவதால் பலன் கிடைப்பதாக கூறுகிறார்கள் பக்தர்கள்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் காட்டுமன்னார்கோயில் என்கிற ஊரில் அமைந்திருக்கிறது. காட்டுமன்னார்கோயில் செல்ல கடலூர் நகரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும். மாலை 4 மணி முதல் ஈரவ்வு 8.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கிறது.

கோயில் முகவரி

அருள்மிகு காத்தாயி அம்மன் கோயில்
காட்டுமன்னார்கோயில்
கடலூர் மாவட்டம் – 608 301

தொலைபேசி எண்

9942444928

இதையும் படிக்கலாமே:
திருநரையூர் ராமநாத சுவாமி கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kathayee amman temple in Tamil. it is also called kathayi amman story in Tamil or Kurathi amman koil cuddalore in Tamil or Kuladhai amman koil in Tamil and Kulandhaiamman kaatumannarkoil in Tamil.