மீன் வறுவலை போல கத்தரிக்காயை இப்படி வறுத்து பாருங்கள், யாருமே வேண்டாம் என்று ஒதுக்கி வைக்க மாட்டார்கள்.

brinjal-round-fry2
- Advertisement -

பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு கத்திரிக்காய் என்றால் அலர்ஜி! இதனால் நிறைய பேர் அதனை ஒதுக்கி வைத்து விடுவது உண்டு. கத்தரிக்காயில் இருக்கும் சத்துக்கள் தெரிந்தால் அதனை ஒதுக்கி வைக்க நிச்சயமாக உங்களுக்கு மனம் வராது. கத்திரிக்காயில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும். நீர்சத்து அதிகம் இருப்பதால் உஷ்ணத்தை தணிக்கும். நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி உடல் எடை குறைய உதவி புரியும். வயிற்று உபாதைகளை தடுக்கும் ஆற்றலும் கத்திரிக்காய்க்கு உண்டு.

brinjal

உடலை கட்டுக்கோப்புடன், மென்மையுடன் கூடிய பலத்துடன் வைத்துக் கொள்ள அடிக்கடி கத்திரிக்காயை சாப்பிடுவது நல்லது. கத்திரிக்காயை சில வகைகளில் செய்து கொடுக்கும் பொழுது அதனை தவிர்ப்பது இல்லை, ஆனால் பொதுவாக அலர்ஜி என்று ஒதுக்கி வைத்து விடுவது உண்டு. இந்த முறையில் கத்திரிக்காயை வறுத்து கொடுத்தால் நிச்சயம் யாரும் வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள், அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வதற்கும் மீன் வறுவல் செய்வது போல மிக சுலபமாகவே இருக்கும். அதை எப்படி செய்வது? என்பதை அறிந்து கொள்ள மேலும் இந்த பதிவை பின் பின்தொடருங்கள்..

- Advertisement -

‘கத்திரிக்காய் வருவல்’ செய்ய தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 1 கப், கால் கப் – அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் – மிளகாய்த் தூள், அரை டீஸ்பூன் – கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – சிட்டிகை அளவிற்கு, உப்பு – தேவையான அளவிற்கு, மிளகு தூள் – கால் டீஸ்பூன், அரை மூடி – எலுமிச்சை பழச்சாறு, ஒரு டீஸ்பூன் – எண்ணெய்.

brinjal-round-fry

‘கத்திரிக்காய் வறுவல்’ செய்முறை விளக்கம்:
முதலில் கத்திரிக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து வட்டவட்டமாக மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். கத்திரிக்காயை பொருத்தவரை நறுக்கியதும் கறுத்துப் போய்விடும். எனவே கத்திரிக்காய் நிறம் மாறாமல் இருக்க கொஞ்சம் தண்ணீரில் 2 டீஸ்பூன் பால் சேர்த்து ஊற வைத்து விடுங்கள். நறுக்கியதும் உடனே இப்படி ஊற வைத்து விட்டால் கறுத்துப் போகாமல் அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -

பின்னர் வறுவலுக்கு தேவையான மசாலா பொருட்களை தயார் செய்ய வேண்டும். முதலில் அரிசி மாவு கால் கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் அவற்றுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைத்ததை சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகுத்தூள் சேர்ப்பது உங்கள் விருப்பம் தான். உங்களுக்குப் பிடிக்காவிட்டால் அதனை தவிர்த்து விடுவது நல்லது. தேவையான அளவிற்கு உப்பும், அரை மூடி அளவிற்கு எலுமிச்சைப்பழ சாறும் கலந்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

brinjal-round-fry1

இதில் தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து கெட்டியாக நன்கு மசாலாவை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மசாலாவை வட்ட வட்டமாக நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயின் மீது தடவி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தோசை வார்க்கும் இரும்பு தோசை கல்லின் மீது அல்லது நான் ஸ்டிக் பேனில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு கத்தரிக்காய்களை போட்டு பொன்னிறமாக முறுகலாக வறுத்து எடுங்கள். கத்திரிக்காய் லேசாக சுருங்கியதும் திருப்பி போட்டு வறுக்க வேண்டும். இந்த முறையில் கத்திரிக்காய் வறுவல் செய்து கொடுத்தால் எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -