உன்னை காண ஒவ்வொரு
நொடியும் காத்துக்கொண்டிருந்த
என் மனம், ஏனோ இன்று
உன்னை இனி ஒருமுறை கூட
காணக்கூடாது என்று
இறைவனிடம் பிராத்திக்கிறது…

இதையும் படிக்கலாமே:
நட்பின் பிரிவில் காதலின் வலியும் – காதல் கவிதை
காதலிக்கும் சமயத்தில் காதலர்கள் சண்டை இட்டு சில மணி நேரங்கள் பிரிந்திருப்பர். ஆனால் அந்த சில மணி நேர பிரிவை கூட அவர்களால் முழுமையாக ஏற்க முடியாது. எப்போதும் தன் இணையின் நினைவுகளோடே அவர்கள் அங்கும் இங்கு திரிந்து கொண்டிருப்பர். நிலைமை அப்படி இருக்கையில், உண்மையாக காதலித்த ஆணும் பெண்ணும் முழுமையாக பிரிகையில் அவர்களுக்குள் தோன்றும் வலியும் வேதனையும் ஏராளம்.
காதலர்கள் பிரிவதற்கு இருவருமே காரணம் என்றாலும் கூட அதில் ஒருவர் தான் முக்கிய காரணமாக இருப்பார். உதாரணத்திற்கு, தாய் தந்தைக்காக சிலர் தங்கள் காதலை விட்டு கொடுப்பர். அது போன்ற சூழலில் அந்த காதல், மனதிற்குள்ளேயே புழுங்கி செத்துப்போகிறது. அதன் பிறகு தன் காதலன் முகத்தையே அல்லது காதலி முகத்தையே பார்க்கும் சக்தி அவர்களிடம் இருப்பதில்லை.

அன்னையர் தின கவிதைகள், குழந்தை கவிதை, தமிழ் கட்டுரை, காதல் கவிதைகள் என பல தகவலைகள் இங்கு உள்ளன.