இப்படி ஒரு கத்தரிக்காய் குருமாவை இதுக்கு முன்னாடி நீங்க சாப்பிட்டு இருக்கவே முடியாது. புதுவிதமான இந்த ரெசிபிய மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

- Advertisement -

கத்திரிக்காயை வைத்து புளிக்குழம்பு, வதக்கல், பஜ்ஜி, சாம்பார் பெரும்பாலும் இப்படித் தான் செய்வார்கள். ஆனால், முற்றிலும் புது விதமான தேங்காய், மிளகாய், மற்ற மசாலா பொருட்களை சேர்த்து அரைத்து ஊற்றி, காரசாரமான கத்தரிக்காய் குருமாவை, இதுவரை நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள். இந்த புதுவிதமான டிஷ் எப்படி செய்யறதுன்னு இப்பவே இந்த பதிவின் மூலம் தெரிஞ்சுக்கலாமா? இந்த இரகசியத்தை நீங்க மட்டும் தெரிஞ்சுக்கோங்க! வேற யாருக்கும் சொல்லிடாதீங்க இதை எப்படி செஞ்சிங்கன்னு யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.

bringal-cutting

Step 1:
முதலில் 1/4 கிலோ அளவு கத்தரிக்காயை எடுத்துக்கொண்டால், 1/2 மூடி தேங்காய்த் துருவல் நமக்கு தேவைப்படும். கத்தரிக்காயை கொத்துக் கொத்தாக வெட்டிக் கொள்ள வேண்டும். எண்ணேய் கத்திரிக்காய்க்கு வெட்டுவோம் அல்லவா, அப்படி வெட்டிக் கொள்ளலாம். உங்களுக்கு அது பிடிக்காது என்றால் கொஞ்சம் தடிமனான சைஸில், நீளவாக்கில் வெட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 2:
அடுத்தபடியாக துருவி வைத்திருக்கும் தேங்காயை மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு வரமிளகாய் – 15, சோம்பு – 1 ஸ்பூன், பூண்டு – 6 பல், முந்திரிப்பருப்பு – 6, 1/2 ஸ்பூன் அளவு உப்பு, இவைகளை சேர்த்து அந்த தேங்காய் துருவலில், கொஞ்சம் தண்ணீர் விட்டு மைய மொழுமொழுவென்று பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை மிக்ஸி ஜாரில் அப்படியே இருக்கட்டும். (உங்கள் வீட்டு காரத்திற்கு ஏற்ப மிளகாயை கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். ஆனால் இந்த குருமாவுக்கு காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால்தான் சுவை அதிகரிக்கும். இந்தக் கூட்டு மாவை அரைத்து குருமா வைத்து விட்டு மிளகாய் தூள் எல்லாம் காரத்திற்கு சேர்க்கவே கூடாது.)

coconut2

Step 3:
அடுத்தபடியாக கத்தரிக்காயை கொத்துக்கொத்தாக வெட்டி வைத்திருந்தால், அந்த கத்திரிக்காய் கொத்துக்களின் இடையில், இந்த மசாலாவை நிரப்பி விட வேண்டும்.

- Advertisement -

Step 4:
இப்போது அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து விட்டு, 5 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதில் சோம்பு – 1/2 ஸ்பூன், பிரியாணி இலை – 1, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, கருவேப்பிலை ஒரு கொத்து இவைகளை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, வெட்டி மசாலாவை நிரப்பி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை கடாயில் போட்டு, மசாலாவையும் மொத்தமாக கடாயில் கொட்டி விட வேண்டும். இந்தக் குருமா கிரேவி பதத்திற்கு இருக்க வேண்டும். மிக்ஸி ஜாரை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கழுவி கடாயில் சேர்த்து கொள்ளுங்கள்.

coconut-paste

இப்போது அந்த கத்திரிக்காயானது, இந்த தேங்காய் மசாலா வோடு சேர்ந்து கொதித்து, நன்றாக வேக ஆரம்பிக்கும். பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் வரை மிதமான தீயில் இந்தக் குருமாவை பச்சை வாசம் போகும் வரை வேக விட வேண்டும். ஏனென்றால் இந்த குருமாவில் மிளகாய்த்தூள் மற்ற மசாலா பொருட்களை எதையும் பொடியாக சேர்க்கவில்லை. அரைத்து ஊற்றி இருப்பதால் பச்சை வாசம் போவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும் அவ்வளவுதான்.

- Advertisement -

கத்தரிக்காய் ரொம்பவும் குழைந்து போகக்கூடாது. வெடுக்கென்று கடித்து சாப்பிடும் அளவிற்கு பக்குவமாக வேகவைத்து, குருமாவை இறக்குவதற்கு முன்பாக நான்கைந்து பச்சை முந்திரி பருப்புகளை உடைத்து மேலே தூவி தேவைப்பட்டால், கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி பாருங்கள் இதனுடைய சுவையே ஒரு தனித்துவமாகத்தான் இருக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்த 2 பொருள் உங்க வீட்ல இருக்குதா! அப்படினா இந்த பிரேக் ஃபாஸ்ட்ட டக்குனு 10 நிமிஷத்துல செஞ்சிடலாமே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -