வீட்டிற்கு முன் கற்றாழை செடி பூ பூத்தால் அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா? உங்களுக்கும் இந்த அனுபவம் இருந்திருக்குமே!

- Advertisement -

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த கற்றாழை செடி வீட்டில் இருப்பது பேரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இந்த செடியை பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் வைத்து வளர்ப்பது உண்டு. ரொம்பவும் சுலபமாக சிரமம் இல்லாமல் வளர்க்கக்கூடிய செடி என்பதால் இது இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் தெரிந்த இந்த கற்றாழை செடியில் பூ பூக்கும் என்பதே பலருக்கு தெரியாமல் இருக்கிறது. கற்றாழை செடியில் பூ பூத்தால் நல்லதா? கெட்டதா? அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் அலச இருக்கிறோம்.

கற்றாழை செடியில் பூ பூப்பது என்பது எப்போதாவது நடக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. பெரும்பாலும் முற்றிய பெரிய வகை கற்றாழைகள் பூ பூத்து அழகாக காட்சி தருகின்றன ஆனால் சிறிய வகை கற்றாழையில் பூக்கள் அவ்வளவாக பூப்பது கிடையாது. எல்லா வகையான கற்றாழை செடிகளும் பூ பூக்கும் என்று கூறி விட முடியாது. சில கற்றாழைகள் அடிக்கடி பூக்களை பூத்து தள்ளும். ஆனால் சில கற்றாழைகள் சுத்தமாக பூவே பூக்காமல் வருட கணக்கில் கூட இருக்கும்.

- Advertisement -

வீட்டு வாசலில் இருபுறமும் கற்றாழை செடிகள் இருப்பது ரொம்பவும் அதிர்ஷ்டகரமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதனால் தான் எல்லோருடைய வீட்டிலும் முன்பக்கமாக கற்றாழை செடிகளை வளர்த்து வருகிறார்கள். அது போல கற்றாழையை திசைகள் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். அது அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் அள்ளிக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

கற்றாழையில் பூக்கும் பூக்களை கொண்டு சட்னி, துவையல், பொரியல் போன்றவை செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் இந்த கற்றாழை பூ மற்றும் கற்றாழை செடி வீட்டில் இருப்பது எப்போதும் அதிர்ஷ்டம் தான்! ஆனால் ஒரு சில வீடுகளில் திடீரென கற்றாழை பூ பூக்கும் பொழுது வீட்டில் துர் சம்பவங்கள் அல்லது ஏதாவது பிரச்சனைகள் நடப்பதாக கூறுகின்றனர். எப்போதெல்லாம் கற்றாழை பூ பூக்கிறதோ அப்போதெல்லாம் வீட்டில் பெரும் கஷ்டமும், துன்பமும் வருவதாக சொல்லப்படுவதும் உண்டு ஆனால் எல்லோருடைய வீடுகளிலும் அப்படி கிடையாது. சிலருடைய வீடுகளில் கற்றாழை பூ பூக்கும் போது மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் வந்து சேருவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

- Advertisement -

கற்றாழையில் பூ பூக்கும் தருணத்தில் வீட்டில் சுபகாரியங்களும், நல்ல விஷயங்களும் நடக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். குடும்பத்தின் மகிழ்ச்சி பெருகும். சண்டை, சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் என்றெல்லாம் கூறப்படுவதும் உண்டு. இப்படி கற்றாலையில் பூப்பதை அதிர்ஷ்டமாக கருதி வரும் பொழுது, சிலர் மட்டும் இப்படி கூறுவது ஏன்? என்று தெரிவதில்லை!

கற்றாழை செடியை ஒரே இடத்தில் புதர் போல வளர்க்கக்கூடாது. அவ்வபோது இதை வெட்டி எடுத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கற்றாழையில் இருக்கும் சதை பற்று உடலுக்கு வெளியே மட்டும் அல்லாமல், உடலுக்கு உள்ளேயும் ஆரோக்கியத்தையும், மெனுமினுப்பையும் அள்ளிக் கொடுக்கிறது. சருமத்தை இளமையாக மாற்றுவதற்கும், அடர்த்தியான கூந்தலை பெறுவதற்கும் வெளிப்புறமும், வயிற்றை குளிர்ச்சியாக்கி உடம்பில் இருக்கும் நச்சுக்களுக்கு எதிராக உடம்பிற்கு உள்ளேயும், கற்றாழை ஜெல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடிக்கடி கற்றாழை ஜூஸ் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டு எனவே கற்றாழையை எந்த அளவிற்கு உங்களால் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் வளர்த்து அதிர்ஷ்ட பலன்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

- Advertisement -