மண்டை தெரியும் அளவிற்கு முடி கொட்டி விட்டதா? அப்படின்னா எதையும் தேடாதீங்க இத மட்டும் செஞ்சு பாருங்க!

hair-fall-oil-aleo-vera
- Advertisement -

சராசரியாக ஒரு நாளைக்கு இவ்வளவு முடி உதிரும் என்று ஒரு கணக்கு உள்ளது அதற்கு மேல் கொத்துக்கொத்தாக கணக்கே இல்லாமல் நாளுக்கு நாள் உதிர்ந்து கொண்டே இருந்தால் உடனடியாக கவனிக்கத்தக்க ஒன்றாக கருதப்பட வேண்டும். முடி தானே உதிர்கிறது என்று நாம் அசால்ட்டாக இருந்தால் அங்கு தான் பிரச்சனையும் ஆரம்பிக்கிறது. ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியாத எந்த நோயையும், முற்றிய பிறகு சுலபமாக குணப்படுத்தி விட முடியாது. அதே போல முடி உதிர்தல் பிரச்சனையையும் ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியாவிட்டால், நாளடைவில் மிகப்பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும். நம் முக அழகையும், தன்னம்பிக்கையையும் கெடுத்துக் கொண்டிருக்கும் இந்த முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிறந்த ஒரு தீர்வாக இருக்கும் மூலிகைப் பொருள் ஒன்று என்ன? அதை எப்படி தலைக்கு பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கற்றாழையில் இருக்கும் மருத்துவ குணங்கள் தலைமுடி உதிர்தல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை கொடுக்கும் அற்புதமான மூலிகையாக இருக்கிறது. இதை சரியாக பயன்படுத்தும் பொழுது தான் அதனுடைய பலன்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும். எனவே கற்றாழையின் ஜெல்லை நேரடியாக தலைக்கு பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். ஒரு முற்றிய கற்றாழை ஒன்றை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு ஏழெட்டு முறை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். அப்போது தான் அதில் இருக்கும் ஒருவிதமான விஷத்தன்மை நீங்கும். அதன் பிறகு அதை மெல்லிய சில்லுகளாக ஐந்தாறு துண்டுகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு தாளிப்பு கரண்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். நீங்கள் பயன்படுத்த இருக்கும் எண்ணெய் ஆர்கானிக் தேங்காய் எண்ணெயாக இருக்க வேண்டும். சுத்தமான தேங்காய் எண்ணெயை விட்டு அதில் நீங்கள் வெட்டி வைத்துள்ள கற்றாழை துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கற்றாழைத் துண்டுகள் தோலுடன் இருந்தால் பரவாயில்லை. இதை அப்படியே அடுப்பில் வைத்து காய்ச்ச கூடாது.

டபுள் பாய்லர் என்கிற முறையில் காய்ச்ச வேண்டும். அதாவது ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை கால் பாகம் அளவிற்கு நிரப்பி கொதிக்க வைக்க வேண்டும். அதன் மீது மூழ்கிவிடாமல் இந்த தாளிப்பு கரண்டியை வையுங்கள். தண்ணீர் கொதித்து ஆவியாகி அதன் பின் தாளிப்பு கரண்டியில் இருக்கும் இந்த தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் கொதிக்க வேண்டும். நேரடியாக கொதிக்காமல் இது போல டபுள் பாய்லர் முறையில் தேங்காய் எண்ணெயை கொதிக்க வைத்து அதில் கற்றாலை ஜெல் சேர்த்தால் அதிலிருந்து வரக்கூடிய சத்துக்கள் நம் மண்டை ஓட்டில் இருக்கும் இறந்த செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுத்து புதிய செல்களாக புதுப்பிக்க செய்யும் ஆற்றல் உண்டாகும்.

- Advertisement -

இதனால் மண்டை தெரியும் அளவிற்கு முடி இருந்தாலும், உங்களுக்கு மீண்டும் எப்போதும் போல முடி கொஞ்சம் கொஞ்சமாக வளரத் துவங்கும். ஒரே அடியாக இதை செய்து விட முடியாது. அவ்வப்போது செய்ய வேண்டிய விஷயம் என்பதால் இதை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும் முடியாது. இன்ஸ்டன்டாக அப்போதைய தேவைக்கு மட்டும் வாரம் இரண்டு முறை தொடர்ந்து இதைப் பயன்படுத்தி பாருங்கள்.

எண்ணெயை கொதிக்க வைத்த பின்பு கற்றாழை ஜெல்லை நசுக்கி அதில் இருக்கும் சாற்றை தேங்காய் எண்ணையில் இறங்க செய்ய வேண்டும். அதன் பிறகு அதை தனியாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தலையில் வேர் பகுதிகளில் நன்கு மசாஜ் செய்து தலை முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு அரை மணி நேரம் கழித்து தலைக்கு அலசினால் தலை பட்டுப் போல மின்னும். வாரம் 2 முறை இவ்வாறு பிரஷ்ஷாக செய்து பாருங்கள், ஒரே மாதத்தில் மண்டை தெரியாத அளவிற்கு முடி வளரத் துவங்கும்.

- Advertisement -