கற்றாழையை வீட்டில் இப்படி வைத்தால், பீரோவில் கட்டு கட்டாக பணம் சேரும். மகாலட்சுமியின் பரிபூரணமான ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

கற்றாழை என்று சொன்னதுமே நிறைய பேருக்கு மனதில் பயம் வந்துவிடும். சந்தேகம் எழும். இந்த செடியை வீட்டில் வைக்கலாமா வைக்க கூடாதா. வைத்தால் நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா? என்று. ஒரு விஷயத்தை மட்டும் ஆழமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்யும்போது இதை செய்தால் நமக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்று நம்பிக்கை இருந்தால் மட்டும் அதை செய்யுங்கள். நம்பிக்கை இல்லை இதை செய்தால் வீட்டிற்கு கஷ்டம் வரும் என்று உங்கள் மனதில் தோன்றினால், அந்த விஷயத்தை செய்யாதீங்க. அது எதுவாக இருந்தாலும் சரி.

இன்று இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை எல்லாம் கூட படித்து பாருங்கள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் அடையலாம். நம்பிக்கை இல்லை என்றால் வீட்டில் இந்த விஷயங்களை பின்பற்றி தான் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. மகாலட்சுமியின் அருள் ஆசியை பெறுவதற்கு கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றியும், கற்றாழையை பற்றிய இதுவரை நீங்கள் கேள்விபடாத இன்னொரு அரிய ஆன்மீகம் தகவலையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

மகாலட்சுமியின் பரிபூரண ஆசீர்வாதம் பெற கற்றாழை பரிகாரம்:
வீட்டில் கற்றாழையை வடகிழக்கு மூலையிலும், வடமேற்கு மூலையிலும் வைத்து வளர்த்தால் ரொம்ப ரொம்ப நல்லதுங்க. இந்த இரண்டு திசைகளிலும் கற்றாழைச் செடியை தொட்டியில் வைத்து வளர்க்கலாம். இந்த கற்றாழைச் செடியை சில பேர் கண் திருஷ்டி விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிலை வாசல் படியில் மாட்டுவார்கள். அப்படி நிலை வாசல் படியில் தொங்க விடும்போது இதனுடைய வேர்ப்பகுதி மேல் பக்கமும், பறந்து விரிந்த அந்தக் கற்றாழை கீழே தொங்கும்படியும் இருக்க வேண்டும். கற்றாழையை தலைகீழாக கட்டி கீழே தொங்க விட வேண்டும்.

நாம் தரையில் நடந்து வரும் போது, ஒவ்வொரு முறையும் நம்முடைய தலைக்கு மேல் அந்த கற்றாழை செடி, நம் தலைக்கு மேலே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். உரச வேண்டும் என்று அவசியம் இல்லை. தலையும் அந்த கற்றாழையும் நேருக்கு நேர் ஒரு வினாடி சந்தித்தால் கூட உங்களுக்கு சனி தோஷம் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. சனி பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறைக்க இந்த கற்றாழை நிச்சயம் உதவும். அதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடம்பை பிடித்த கண்ணுக்குத் தெரியாத பீடைகளையும் இந்த கற்றாழை நீக்கிவிடும்.

- Advertisement -

அடுத்தபடியாக இன்னொரு அரிய தகவல். கற்றாழையை பற்றி உங்களுக்காக. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டில் இருக்கும் கற்றாழை செடியிலிருந்து ஒரு சின்ன கற்றாழை துண்டை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதை கழுவி விட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை தனியாக எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு மகாலட்சுமி தாய்க்கு நிவேதனமாக படைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: நம் கையில் எப்போதும் இதை வைத்திருந்தால், நம் கையை விட்டு, நம் வீட்டை விட்டு, லட்சுமி கடாட்சம் வெளியே சென்று விடும். ஏழ்மை நம் வீட்டிற்குள் ஏழேழு ஜென்மத்திற்கும் தங்கி விடும்.

இப்படி நிவேதனம் செய்த இந்த கற்றாழையை மறுநாள் எடுத்து உங்களுடைய உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் உங்கள் உடம்பில் பிடித்த பீடை விலகும். உடம்பை பிரித்த தரித்திரம் விலகும். உடல் சோர்வு நீங்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேல் சொன்ன ஒரு விஷயத்தை நீங்கள் பின்பற்றினால் கூட உங்களுக்கு ஐஸ்வரியம் பெருகும் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -