தண்ணீராக இருக்கும் பாலில் உறை போட்டாலும், கெட்டி தயிர் கிடைக்க வேண்டுமா? அப்ப இந்த ஐடியா உங்களுக்காக.

- Advertisement -

என்னதான் நம்முடைய வீட்டில் திக்காக பாலை காய்ச்சி உறை போட்டாலும் தயிர் கட்டியாக வராது. சில சமயம் நீர்த்து போகும். அப்படி இருக்கும்போது தண்ணீராக இருக்கக்கூடிய பாலில் எப்படி கெட்டி தயிர் எடுப்பது. முடியும், உங்க வீட்ல தண்ணி பால் இருந்தா ஒரு முறை இப்படி உறை ஊற்றி பாருங்கள் சூப்பரான கெட்டி தயிர் நான்கிலிருந்து ஐந்து மணி நேரத்திற்குள் கிடைத்துவிடும். காலையில் உறை போட்டால் மதிய லஞ்சுக்கு சூப்பரான தயிர் சாப்பிடலாம். வாங்க அது என்ன ஐடியான நாம தெரிஞ்சுக்கலாம்.

கால் லிட்டர் அளவு உங்க வீட்ல பால் இருக்கு. டீக்கு காய்ச்சிய பாலோ, அல்லது காபிக்கு காய்ச்சிய பாலிலோ கொஞ்சம் தண்ணீர் ஊற்றி காய வைத்திருப்பீர்கள் அல்லவா. அந்த பாலை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். பால் நன்றாக பொங்கி வரட்டும். அதன் பின்பு அது கை பொறுக்கும் சூடு வரும் வரை ஆற வேண்டும்.

- Advertisement -

கால் லிட்டர் அளவு பாலுக்கு உரை போட சிறிய குறி கரண்டியில், 2 குழி கரண்டி அளவுக்கு தயிர் எடுத்துக்கோங்க. அதே கரண்டியில் ஒரு குழி கரண்டி அளவு கான்பிளவர் மாவை அந்த தயிரில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். கிரீமியாக திக்கான நமக்கு ஒரு பேஸ்ட் கிடைத்திருக்கும். (இதை அப்படியே பாலில் ஊற்றி உறை போட கலந்தால் கட்டி கட்டியாக நிற்கும் சரியாக கலக்க முடியாது.)

ஆகவே இந்த ரொம்பவும் திக்கான தயிர், கான்பிளவர் மாவு சேர்ந்த கலவையில் 1/4 டம்ளர் அளவு பாலை ஊற்றி, மீண்டும் நன்றாக அடித்து கலக்குங்கள். இந்த கிரீமியான தயிரை இப்போது கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் பாலில் ஊற்றி நன்றாக கரைத்து விடுங்கள். ஒரு மண் குடுவையில் உறை போட்ட தயிரை ஊற்றி மூடி போட்டு அப்படியே வச்சிடுங்க.

- Advertisement -

காலையில் 8:00 மணிக்கு இப்படி செய்து வைத்து விட்டால், ஒரு மணிக்கு சாப்பாடு சாப்பிடும் போது சுவையான சூப்பரான கெட்டி தயிர் தயாராக இருக்கும். கான்பிளவர் மாவு சேர்த்தால் தயிரின் சுவை மாறிவிடுமோ என்ற கவலையே வேண்டாம். அருமையான சுவையில் திக்கான தயிர் தயார். உங்க வீட்ல தண்ணியாக பால் இருக்கும் போது இந்த குறிப்பட்ட ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

மண்பானையில் தான் இதை உறை ஊற்ற வேண்டும். மண்பானையில் உறை ஊற்றும் போது தயிர் சரியான அளவில் புளித்து கிடைக்கும். தயிரில் இருக்கும் தேவையற்ற தண்ணீரை அந்த மண்பானை உறிஞ்சிக் கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மண்பானையில் தயிர் செய்தால் அது ஒரு தனி ருசி தான். மண்பானை வீட்டில் இல்லை என்பவர்கள் சாதாரண பாத்திரத்தில் உறை போட்டுக் கொள்ளுங்கள். ஒருமுறை ட்ரை பண்ணி பாத்துட்டு, பிடிச்சிருந்தா இந்த குறிப்பை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தலாம்.

- Advertisement -