15 நிமிடத்திலேயே கழுத்தில் இருக்கும் கருமை நீங்க இந்த 3 ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணி பாருங்க! உடனடி தீர்வு தரும்.

dark-neck-baking-soda
- Advertisement -

சிலருக்கு முகம் முழுவதும் பளிச்சென்று இருந்தாலும், கழுத்தை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இது போல கண்டிப்பாக நிறைய பேருக்கு இருக்கும். அது மட்டுமல்லாமல் திருமணமான பெண்கள் கழுத்தில் அதிக கனமுள்ள நகைகளை அணியும் பொழுதும் இது போல கருமை தோன்ற ஆரம்பிக்கும். எவ்வளவு அடர்த்தியான கருமை இருந்தாலும், அது 15 நிமிடத்திலேயே சுலபமாக நீக்க இந்த 3 வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஸ்டெப் 1:
கழுத்தின் கருமை நீங்க முதலில் நாம் கழுத்தை சோப் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நாம் என்னதான் சோப்பு போட்டு தேய்த்து தேய்த்து குளித்தாலும் கழுத்தில் இருக்கும் கருமை மட்டும் அவ்வளவு எளிதாக நீங்கி விடாது. இதற்கு காரணம் சோப்பில் இருக்கும் வீரியம் அந்தக் கருமையை போக்கும் அளவிற்கு இல்லை என்பதே ஆகும். எனவே இதற்கு நாம் முதலில் தேர்ந்தெடுக்க இருப்பது சமையல்கட்டில் இருக்கும் சாதாரணமாக நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் சமையல் சோடா தான்.

- Advertisement -

சமையல் சோடா ரொம்பவே வீரியம் நிறைந்தது. எனவே இது கழுத்தில் இருக்கும் கருமையை பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் எளிமையாக நீக்கும் சக்தி கொண்டுள்ளது. பேக்கிங் சோடாவை உடம்பிற்கு பயன்படுத்தலாமா? என்றெல்லாம் யோசிக்கவே தேவையில்லை! அது செயற்கையாக எந்த கெமிக்கல் கலக்காத சோடா உப்பு ஆகும். எனவே பயப்பட வேண்டாம். சோடா உப்பை கொஞ்சம் கெட்டியாக தண்ணீர் சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் கழுத்து பின்புறம் மற்றும் முன்புறத்தில் இருக்கும் கருமை படர்ந்த இடங்களில் எல்லாம் நன்கு தடவி 5 நிமிடம் ஊற விட்டு விடுங்கள். அதன் பின்பு ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது சுத்தமான காட்டன் துண்டு ஒன்றை எடுத்து நன்கு அழுத்தி துடைத்து பாருங்கள். கொஞ்சம் கருமை அதிலேயே வந்துவிடும். அழுக்குகள், இறந்த செல்கள் எல்லாமே ஓரளவு நீங்கிவிடும்.

- Advertisement -

ஸ்டெப் 2:
அதன் பின்னர் 2 டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கடலை மாவுடன், கால் டீஸ்பூன் அளவிற்கு சுத்தமான கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கெட்டியாக பேஸ்ட் போல கலந்து, இதை கருமையான இடத்தில் கழுத்தை சுற்றி நன்கு தடவி கொள்ளுங்கள். பின்பு நன்கு உலர்ந்த பின்பு அழுத்தம் கொடுத்து துடைத்து எடுத்தால் மீதம் இருக்கும் கருமை மற்றும் இறந்த செல்கள், அழுக்குகள், கிருமிகள் எதுவாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.

ஸ்டெப் 3:
கடைசியாக கூர்மையான ஸ்பூன் அல்லது அது போன்ற ஏதாவது ஒரு பொருளைக் கொண்டு லேசாக பிக்மென்ஷன் இருக்கும் இடங்களிலெல்லாம் வழித்து எடுத்தால் கருமை எல்லாம் நீங்கி பளிச்சென மின்னும். பேக்கிங் சோடா, கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு எல்லாம் பயன்படுத்திய பிறகு நன்கு தண்ணீர் கொண்டு துடைத்து எடுத்துவிட்டு அதில் சன் ஸ்க்ரீன் லோஷன் அல்லது மாய்ச்சரைசர் கிரீம் ஏதாவது ஒன்றை தடவிக் கொள்ளுங்கள். அப்போது தான் எரிச்சல் எதுவும் இல்லாமல் இருக்கும். வாரம் ஒருமுறை இது போல நீங்கள் செய்து வந்தால் உங்கள் கழுத்து முகத்தில் நிறத்திற்கு ஒப்பாக அப்படியே இருக்கும் கருமை படராது.

- Advertisement -