மகாலக்ஷ்மியை வசியம் செய்ய பணப்பெட்டியை இப்படி வைத்து கொள்ளுங்கள்

செல்வம் என்பது நிலையற்ற தன்மையுள்ளது. இன்று ஒரு இடத்தில் இருக்கும். நாளை வேறொரு இடத்தில் இருக்கும். எங்கு இருக்க வேண்டும் என்பது லக்ஷ்மி தேவியின் கைகளில் உள்ளது. நம் கையில் ஒன்றும் இல்லை. ஆனால் அந்த தேவியை நம்மால் வசியம் செய்ய முடியும். லக்ஷ்மி தேவிக்கு பிடித்த சில பொருட்களை பணப்பெட்டியில் வைத்து இருந்தால் போதும். அங்கிருந்து நகர மாட்டேன் என்று அடம் பிடிப்பளாம். பணத்தை கண்ட இடத்தில் வைக்காமல் பணபெட்டியில் வைப்பது தான் உங்களின் முதல் வேலையாகும். அதுவே மஹாலக்ஷ்மி வாசம் செய்ய தேவையான முக்கிய விஷயமாகும். அந்த பணப்பெட்டியில் எந்த பொருட்கள் வைத்தால் செல்வம் அதிகரிக்கும் என்ற சூட்சம ரகசியத்தை இந்த பதிவில் காணலாம்.

cash-box

இல்லத்தையும், மனதையும் சுத்தமாக தெய்வீக தன்மையுடன் வைத்திருந்தாலே அவர்களிடன் செல்வம் நிரந்தரமாக இருக்கும். பணத்தை பணமாக, காகிதமாக பார்க்காமல் இந்த பணம் தெய்வம் தந்த மகத்தான சக்தியாக பாருங்கள். அதற்கு மரியாதை செழுத்துங்கள். இந்த பணம் நமக்காக மட்டும் இல்லாமல் நம்மால் பிறருக்கு உதவியும் செய்ய மனம் வர வேண்டும். உதவி என்று கேட்பவர்களுக்கு இல்லை என்று உடனே கூறிவிடாமல் உங்களால் என்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள். அடுத்தவர்களுக்கு நீங்கள் செய்யும் செலவுகள் அனைத்தும் பின்னாளில் உங்களுக்கு நிச்சயம் வரவாகும். கொடுக்கும் தயாள குணம் தான் நம்மிடம் இருக்க வேண்டிய சொத்து.

குணம் இருக்கும் இடத்தில் பணமும் இருக்கும் என்பது போல் மணம் இருக்கும் இடத்திலும் பணம் இருக்குமாம். உங்களது பணப்பெட்டியில் மகாலக்ஷ்மியின் படம் ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். 100 அல்லது 500 ரூபாய் தாள் ஒன்று இருக்க வேண்டும். ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வேண்டும். லக்ஷ்மி படம் பதித்த வெள்ளி காசு இருக்க வேண்டும். செம்பு நாணயம் ஒன்று இருக்க வேண்டும். குண்டுமணி அளவாவது தங்கம் இருக்க வேண்டும். மோதிரம், டாலர், மூக்குத்தி என்று எதையாவது போட்டு வைத்து கொள்ளுங்கள். இவைகளுடன் மாதுளை மர குச்சி, மல்லி செடியின் குச்சி இவற்றை உடைத்து கொள்ளுங்கள். அதையும் பணப்பெட்டியில் சேர்த்து வையுங்கள். பணம் இருக்கோ இல்லை இவையெல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும். இவை அனைத்தும் மகா லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்த பொருட்கள். அவள் வாசம் செய்யும் பொருட்களாக சாஸ்திரத்தில் கருதப்படுவது.

kirambu-elam-pachaikarporam

மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் பொருட்களை வைத்தால் மட்டும் போதாது. அவள் அங்கேயே நிரந்தரமாக தங்க செல்வத்தை ஈர்க்க கூடிய சக்தி பொருத்திய 3 பொருட்கள் வேண்டும். அவை பச்சை கற்பூரம், ஏலம், கிராம்பு ஆகியவை ஆகும். இந்த மூன்று பொருட்களை உங்களால் முடிந்த மட்டும் நுணுக்கி பணப்பெட்டியில் தூவி விட வேண்டும். அவ்வளவு தான் முடிந்தது வேலை. மஹாலக்ஷ்மியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிட்டும்.

- Advertisement -

salt

வெள்ளிக்கிழமை பூஜையை கட்டாயம் தவற விடாமல் செய்யுங்கள். வெள்ளியன்று விளக்கு எரியாத இல்லத்தில் மஹாலக்ஷ்மி வாசம் செய்ய மாட்டாள். பூஜை செய்யும் போது இந்த பணப்பெட்டிக்கும் தூபம் காட்டுங்கள். அதே போல் உங்கள் குடும்பத்தில் ராசியான பெண்கள், பெண் குழந்தைகள் என்று யாராவது இருப்பார்கள். அவர்களின் கைகளால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சுக்ர ஹோரை வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் கல் உப்பை ஒரு டப்பாவில் போட சொல்லுங்கள். நீங்கள் சுயமாக சம்பாதிக்கும் பணத்தை உங்களது பீரோ லாக்கரில் வைக்கும் போது அந்த பணத்தின் மேல் இந்த டப்பவை வையுங்கள். ஒவ்வொரு முறையும் இந்த டப்பாவிற்கு கீழே இருந்து பணத்தை எடுத்து செலவு செய்து வாருங்கள். கல் உப்பில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள் எனவே இவ்வாறு வைத்து வைத்து எடுப்பதால் செல்வம் குறையாது. சேர்ந்து கொண்டே இருக்கும். பணத்தை வைக்கும் போது எப்போதும் மடித்து தான் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற சித்தர்கள் கூறிய இந்த சூட்சமத்தை கையாளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Selvam peruga thanthram Tamil. Veetil selvam sera tips Tamil. Selvam peruga tips Tamil. Panam peruga valigal Tamil.