உங்கள் குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற சித்தர்கள் கூறிய இந்த சூட்சமத்தை கையாளுங்கள்.

brainy-children-siddhar

பெற்றோர்கள் என்றாலே, அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை தங்களுடைய குழந்தைகள் தான். அந்த காலகட்டத்தில் எல்லாம் குழந்தைகள் வளர்ப்பு இவ்வளவு கஷ்டமாக இருந்ததா? என்றால் நிச்சயம் இல்லை. 5 குழந்தை, 6 குழந்தை என்று பெற்றோர்கள் குழந்தைகளை பெற்று, பிரச்சனை இல்லாமல் நல்லபடியாக வளர்த்த காலம் மாறி, ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பதே பெரிய கஷ்டமாகி விட்டது இந்த கால பெற்றோர்களுக்கு. என்ன செய்வது? இதற்கு காரணம் இந்த கால சூழ்நிலையும், தொழில்நுட்பங்களும், மருத்துவமும் தான். எப்படி? அந்த கால சூழ்நிலையில் தாய்மார்கள் எல்லாம் கர்ப்பமாக இருக்கும் போது செல்போன் உபயோகித்தார்களா? தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்திருந்தார்களா? இல்லை. அந்த காலத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண்கள் எல்லாம் குழந்தை நன்றாக வளர வேண்டும், அவர்களது மூளை வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும் என்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டார்களா? இல்லை. இயற்கையான உணவும், இயற்கையான சூழலும், குழந்தை நன்றாக பிறப்பதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் இருக்கும் தாய்மார்களுக்கு இயற்கையான சூழலும், இயற்கையான மருத்துவமும், இயற்கையான உணவும் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணம். இதற்காக நாம் எந்த தாய்மார்களையும் குறை கூற முடியாது. ஏனென்றால் இந்தக் காலகட்டம் அப்படி ஆகிவிட்டது.

pregnant-lady-using-cellphone

ஆக மொத்தத்தில் செய்யும் தவறுகள் அனைத்துமே பெற்றோர்களது கையில்தான் இருக்கின்றது. ஒரு குழந்தை கருவில் எந்த சூழ்நிலையில் வளர்கிறதோ, அந்த சூழ்நிலையில் தான் பிறந்த பிறகும் இருக்கும் என்பது உண்மை. இதையெல்லாம் மறந்து விட்ட பெற்றோர்கள் ‘அந்த காலத்திலெல்லாம் குழந்தைகள் இப்படியா அடம் பிடித்தது, இப்படியா ஃபோன் பார்த்தது, இப்படியா அப்படியா’ என்று அந்தக்கால குழந்தையோடு ஒப்பிட்டு திட்டுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. தப்பெல்லாம் பெற்றோர்கள் நம் பக்கம் உள்ளது.

அடம் பிடிக்கும் குழந்தையை திட்டி அறிவுரை சொல்லி திருத்துவது என்பது வேறு. சதாகாலமும் கரிச்சுக் கொட்டிக் கொண்டே இருப்பது என்பது வேறு. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே அறிவாற்றல் என்பது அதிக திறன் பெற்றதாக இருக்கும். சில குழந்தைகள் சுமாரான அறிவாற்றலை பெற்றதாக இருக்கும். சில குழந்தைகள் மிகவும் மந்தமான அறிவுத்திறனை பெற்றதாக இருக்கும். இப்படியிருக்க மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து ‘அந்த குழந்தையை போல் நம் குழந்தை இல்லையே’ என்ற ஏக்கத்தையும் படவேண்டாம். நம் குழந்தைக்கு என்ன திறன் உள்ளது? என்பதை தெரிந்து கொண்டு அதில் எதை சாதிக்க முடியும். அதற்கான முயற்சிகளை மட்டும் எடுத்தால் போதும். உலகில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அது இறைவன் படைப்பு.

memory

உங்களது குழந்தைகள் உங்களுடைய பேச்சை சரியாக கேட்கவில்லை. அந்த குழந்தையுடைய ஞாபக சக்தி திறன் மிகவும் குறைவாக உள்ளது. படிப்பில் அதிக கவனம் இல்லை. அல்லது சில குழந்தைகளின் குறும்பு மிக அதிகமாக இருக்கும். சமாளிக்கவே முடியாது. சில குழந்தைகள் எல்லாம் அடக்கி ஒரு இடத்தில் உட்கார வைத்து படிக்க வைக்க கூட முடியாத ஒன்றாக இருக்கும். என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அந்த காலத்திலேயே சித்தர்கள் ஒரு வழியை கூறிவிட்டுத் தான் சென்றுள்ளார்கள். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நம்பிக்கை உள்ளவர்கள் உங்களது குழந்தைகளுக்கு இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -

கோமதி சக்கரம். இந்த சக்கரத்தில் போலியானது வாங்கி விட வேண்டாம். உண்மையான கோமதி சக்கரத்தை வாங்கி உங்களது குழந்தைகளின் இரு புருவத்திற்கும் மத்தியில், பொட்டு வைக்கும் இடத்தில் இந்த கோமதி சக்கரத்தை ஒரு மணிநேரம் வைத்துவிட வேண்டும். ஒரு வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த முறையை செயல்படுத்தி பார்க்கலாம். இரண்டு, மூன்று வயது குழந்தைகள் எல்லாம் விழித்திருக்கும்போது இப்படி செய்தால் ஏற்றுக்கொள்ளாது. தூங்கும் சமயத்தில் ஒரு மணிநேரம் நெற்றிப்பொட்டில் நடுவில் இந்த சக்கரத்தை வைத்து விடுங்கள். தவறு ஒன்றும் இல்லை.

gomati-chakra

கொஞ்சம் விவரம் தெரிந்த வளர்ந்த குழந்தைகளாக இருந்தால், மெத்தையில் படுக்க வைத்துவிட்டு நெற்றிப்பொட்டில் மத்தியில் கோமதி சக்கரத்தை வைத்தவாறு ஒரு மணி நேரம் இருக்க வேண்டும். இப்படி தினம்தோறும் செய்து வரலாம். முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் செய்தால் கூட நல்ல பலனைத் தரும்.

கோமதி சக்கரத்தின் சுழல் வடிவம், குழந்தைகளின் மூளை, செயல்படும் தன்மையை சீர்ப்படுத்த முடியும் என்று கூறுகிறது சித்தர்களின் வாக்கு. சில குழந்தைகளுக்கு இருக்கும் அதிவேக திறனை கட்டுப்படுத்தவும், மந்தமான திறமையை தூண்டவும் இந்த கோமதி சக்கரமானது பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு இயற்கையான பொருள். இதை குழந்தைகளது நெற்றிப்பொட்டில் வைப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை. பெற்றோர்கள் சொல்லும் வார்த்தையை காதில் வாங்கிக் கொண்டு செயல்படும் பிள்ளைகள் கிடைப்பது வரம் தானே. இதன் மூலம் மூளையின் ஞாபக சக்தி திறன் அதிகரிக்கப்பட்டு, படித்தது அனைத்தும் மறக்காமல் இருந்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியும். குழந்தைகளின் முன்னேற்றம் சீராக இருக்க இதை பயன்படுத்தி தான் பாருங்களேன். குழந்தைகளின் ஞாபக சக்தி திறன் அதிகரிக்க மாத்திரை வாங்கி கொடுப்பதை விட, கோமதி சக்கரம் ஒரு நல்ல முயற்சி என்றுதான் கூற வேண்டும்.

gomati-chakra

சிலருக்கு மற்றொரு சந்தேகமும் வரும். அந்த காலகட்டத்தில் எல்லாம் குழந்தைகள் பொறுமையோடு தானே இருந்தது. அப்போது எப்படி அந்த காலத்தில் சித்தர்கள் இந்த வழிமுறையை கூறியிருக்க முடியும்? என்று ஒருவித கேள்வியும் எழும்? அதாவது அந்தக் காலத்தில் நூற்றுக்கு ஒரு குழந்தை அடம்பிடிக்கும் குழந்தையாக பிறந்தது. இந்த காலத்தில் நூற்றுக்கு ஒரு குழந்தைதான் அமைதியாக இருக்கின்றது.

இதையும் படிக்கலாமே
எதிர்பாராத பணம் எதிரே வந்து நிற்க வேண்டுமா? இதை செஞ்சுதான் பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kalviyil sirakka Tamil. Gomati chakra benefits in Tamil. Gomati chakram palangal in Tamil. Kalviyil siranthu vilanga.