சமையலறையில் இந்த 1 பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே போகும் தெரியுமா?

kitchen-lakshmi
- Advertisement -

அதிர்ஷ்டம் என்ற உடன் பலரும் தவறாக புரிந்து கொள்வது என்னவென்றால் உழைப்பின்றி வருவது தான் அதிர்ஷ்டம் என்ற கோணத்தில் எண்ணி விடுகிறார்கள். உண்மையில் அதிர்ஷ்டம் என்பது உழைப்பிற்கு தகுந்த ஊதியம் ஆகவே பார்க்க வேண்டும். உழைப்பின்றி எந்த ஒரு நிலையையும் நம்மால் அடைந்து விட முடியாது. உழைப்பே உயர்வு என்கிற பழமொழிக்கு ஏற்ப உழைத்தால் தான் நமக்கு உயர்வும் கிடைக்கும். ஆனால் எத்தனை பேருக்கு உழைத்த பலன் கிடைத்ததாக திருப்தி அடைகிறார்கள்?

money

நானும் எவ்வளவோ காலமாக எவ்வளவு கஷ்டப்படுகிறேன். ஆனால் எனக்கு மட்டும் நல்ல காலமே பிறக்கவில்லை என்று புலம்புபவர்கள் தான் இன்று ஏராளமானோர் இருக்கின்றோம். கடவுள் செய்யாதது கூட, காலம் செய்யும் என்கிற கூற்று உண்டு. அதனால் தான் எல்லா விஷயங்களையும் நல்ல நேரம் பார்த்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

- Advertisement -

ஜோதிட ரீதியாக காலமும், நேரமும் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும், திடீர் துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். அதிர்ஷ்ட நேரம் வந்து விட்டால் உழைப்பும் தானாகவே நீங்கள் கொடுக்க ஆரம்பித்து விடுவீர்கள். மந்தமாக இருந்த தொழில் சூடு பிடிக்க தொடங்கி விட்டால் மந்தமாக இருந்த நீங்களும் உற்சாகமாக வேலை செய்யத் துவங்கி விடுவீர்கள். ஒரு வேலையை நாம் செய்வதற்கு அதனுடைய பலன் நமக்கு கிடைக்கும் என்றால் தான் அதிக உழைப்பையும் நாம் கொடுக்க முடியும்.

kitchen2

சமையலறையில் இந்த ஒரு பொருளை வைத்தால் மனதிற்கும், கண்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும். சமையலறையில் வளர்க்கக்கூடிய சில செடி வகைகள் உண்டு. அதிக வெயில் தேவையில்லாத மற்றும் அதிக இடமும் தேவைப்படாத நிறைய செடி வகைகள் வாஸ்துவிற்காக வீட்டில் வைக்கப்படுகிறது. அவ்வகையான செடிகளில் ஒன்றையாவது உங்கள் வீட்டு சமையல் அறையில் நீங்கள் வைத்தால் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை நேரடியாக கொண்டு வந்து சேர்க்கும்.

- Advertisement -

சமையலறையின் ஏதாவது ஒரு ஓரத்தில் சிறிய அளவிலான தொட்டியை வைத்து அதில் சிறிய செடி ஒன்றை நட்டு வளர்த்து வாருங்கள். வெந்தயக் கீரை, கடுகு கீரை போன்றவற்றை கூட வளர்க்கலாம். நம் வீட்டு சமையல் அறையில் பசுமையை புகுத்தி விட்டால், வீடே லட்சுமி கடாட்சமாக மாறி விடும். சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் இந்த செடியின் பச்சை பசேலென இருக்கும் நிறமானது நம் கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். அதனை ஒவ்வொரு முறை பார்த்துக் கொண்டே சமைக்கும் பொழுது மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் நீங்கி புத்துணர்வு கொடுக்கும்.

வீட்டில் இருக்கும் பாதி சண்டை சச்சரவுகள் இதன் மூலம் தீர்ந்து விடும். கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் இது 100% பலன் தரும் என்பது மட்டும் உறுதி. அந்தச் செடியை பார்த்துக் கொண்டே சமைப்பவர்களுக்கு மனம் சாந்தமாகவே இருக்கும். இந்தச் செடி தான் வளர்க்க வேண்டும் என்கிற எந்த கட்டுப்பாடும் இல்லை.

- Advertisement -

plant-in-kitchen

உங்களுக்கு பிடித்த என்ன செடி வகையாக இருந்தாலும் அதனை நீங்கள் தாராளமாக வளர்க்கலாம். அதன் பசுமை தன்மை வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை சேர்க்கும் என்பது ஐதீகம் அவ்வளவு தான். அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவி இடையே கூட புரிதல் உண்டாக கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. வாஸ்து படி சமையல் அறையில் கிழக்கு, வடக்கு போன்ற திசைகளில் செடிகளை வளர்ப்பது யோகத்தை தரும்.

இதையும் படிக்கலாமே
இந்த பூஜை செய்தால் 21 தலைமுறைகளுக்கு புண்ணியம் வந்து சேரும் என்கிறது சாஸ்திரம். அப்படி என்ன பூஜை அது? நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -