உளுந்து வடை சாப்பிடணும்னு ஆசைப்பட்ட ஊற வைச்சி அரைச்சு டைம் வேஸ்ட் பண்ணாம இப்படி சட்ன்னு செஞ்சு சாப்பிடுங்க. திடீரென வீட்டிற்கு விருந்தாளி வந்து விட்டால் சமாளிப்பதற்காகவே ஒரு சூப்பர்ரான வடை ரெசிபி.

methu vadai
- Advertisement -

பொதுவாக வீட்டில் விருந்தாளிகள் யாரேனும் வந்து விட்டாலும் அல்லது விசேஷ நாட்கள் என்றாலும் முதலில் செய்வது இல்ல வடையை தான். விசேஷ நாட்களில் இந்த வடையை செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே முடிவு செய்து பருப்பு ஊற வைத்து செய்து விடுவோம். ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென விருந்தாளிகள் வந்து விட்டால் இந்த வடை ரெசிபியை ட்ரை பண்ணலாம். இதை எப்படி சுலபமாக உடனே செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த வடை செய்வதற்கு முதலில் ஒரு பவுலில் ஒரு கப் அரிசி மாவு எடுத்து கொள்ளுங்கள். அடுத்து அரைக்கப் தயிர் எடுத்து அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி நல்ல மோர் பதத்திற்கு அடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த மோரை நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் அரிசி மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அரிசி மாவும், மோரும் நன்றாக கலந்த பிறகு மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து நாம் கலந்து வைத்திருக்கும் இந்த மாவை அதில் ஊற்றி கைவிடாமல் கிண்ட வேண்டும்.

இப்போது மாவு லேசாக கட்டிப்பட ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் ஒரு இன்ச் இஞ்சியை துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் அரை ஸ்பூன் மிளகை ஒன்றும் பாதியுமாக உரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். சீரகம் அரை ஸ்பூன் கொஞ்சமாக கருவேப்பிலை, ஒரு பச்சை மிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து சிறிது நேரம் கை விடாமல் கலந்து விட்டால் மாவு கெட்டிப்பட்டு விடும் கைகளில் கொஞ்சமாக தண்ணீர் தொட்டு மாவை தொட்டு பார்த்தால் கையில் ஒட்டக் கூடாது.இந்தப் பதம் வந்ததும் மாவை அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.

- Advertisement -

இந்த சமயத்தில் ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் அரை ஸ்பூன் உப்பு ஒரு கைப்பிடி கொத்தமல்லி அனைத்தையும் இதில் சேர்த்து மாவை நன்றாக கலந்து விடுங்கள். இவையெல்லாம் மாவு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போது செய்து விடலாம்.

அடுத்ததாக பிசைந்த மாவை ஒரு தட்டில் சின்ன சின்ன வடைகளாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் பேன் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீயிக்கு மாற்றிய பிறகு எடுத்து வைத்திருக்கும் வடைகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து விடுங்கள். சூப்பரான உளுந்து வடை தயார் அதுவும் உளுந்தே சேர்க்காமல்.

இதையும் படிக்கலாமே: 1 கப் கோதுமை மாவு இருந்தா போதும் மெதுமெதுன்னு 10 நிமிடத்தில் அருமையான ஊத்தாப்பம் இப்படியும் செய்யலாமே! எல்லாரும் விரும்பும் ஈஸி ப்ரேக்ஃபாஸ்ட்.

இந்த இன்ஸ்டென்ட் வடை ரெசிபியை நீங்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் செய்து விடலாம். திடீரென வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கூட சட்டு என்று இதை செய்து அசத்தி விடலாம். நீங்களும் ஒரு முறை இப்படி வடை செய்து பாருங்கள்.

- Advertisement -