இவ்வாறு மசாலா அரைத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து, சாம்பார் வைத்து பாருங்கள். மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.

kerala-sambar
- Advertisement -

வீட்டில் எப்போதும் சமைக்கும் சமையலில் அதிகம் இடம் பெறுவது சாம்பார் தான். காலையிலேயே சாம்பார் வைத்து விட்டால் போதும். காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் சேர்த்து சாப்பிடலாம். அதே போல் சைவ உணவு என்றால் பெரும்பாலான வீடுகளில் சாம்பார் தான் செய்வார்கள். ஏதேனும் பண்டிகை என்றாலும், பூஜை சம்பந்தமான விஷயங்கள் என்றாலும் சாம்பாருக்கு தான் முதலிடம். எப்பொழுதும் ஒரே சுவையில் இந்த சாம்பாரை வைப்பது என்பது சற்று போராக தான் இருக்கிறது. எனவே கேரள ஸ்டைலில் வைக்கக் கூடிய இந்த சாம்பாரை ஒரு முறை செய்து பாருங்கள். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – கால் கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, வெண்டைக்காய் – 2, முருங்கைக்காய் – 1, வெள்ளை பூசணிக்காய் – 50 கிராம், சேனைக்கிழங்கு – 2, உருளைக்கிழங்கு – 1, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கடுகு ஒரு ஸ்பூன் உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, தனியா – ஒரு ஸ்பூன், வெந்தயம் – ஒன்றரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, துருவிய தேங்காய் – ஒரு கப், கருவேப்பிலை – ஒரு கொத்து, தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் துவரம்பருப்பை நன்றாக கழுவி 3 டம்ளர் தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் புளியுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து புளிக் கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஒரு ஸ்பூன் தனியா, ஒரு ஸ்பூன் வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், வறுத்து மசாலா மற்றும் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், காய்கறிகள் சேர்த்து அவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவேண்டும். இவை நன்றாக வெந்ததும் அதனுடன் புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

sambar3

பிறகு வேக வைத்துள்ள பருப்பை நன்றாக மசித்து இதனுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் இதனுடன் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு, கொதிக்க வைக்கவேண்டும்.

sambar2

பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் ஒன்றரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் நன்றாக சூடானதும் கடுகு மற்றும் வெந்தயம் போட்டு தாளித்து சாம்பாரில் சேர்த்து விட வேண்டும். இறுதியாக இதனுடன் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான கேரளா ஸ்டைல் சாம்பார் தயாராகிவிடும். ஒருமுறை இவ்வாறு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். வழக்கமாக வைக்கும் சாம்பாரைவிட இதன் சுவை நிச்சயம் வேறுபட்டிருக்கும்.

- Advertisement -