கேரளத்து பெண்களின் அழகு ரகசியங்களில் இந்த குளியல் பொடியும் ஒன்று! 30 நாட்களில் நீங்களும் ஆகாயத்திலிருந்து இறங்கி வந்த, அழகு தேவதையாக மாறலாம்.

face10

அழகு என்று சொன்னதும் நம்முடைய நினைவுக்கு வருவது கேரளத்து பெண்களின் அழகு தான். இதற்காக மற்ற பெண்களை எல்லாம் அழகு இல்லை என்று சொல்ல வரவில்லை. இருப்பினும் கேரளத்து பெண்களுக்கு அழகு என்பது கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். அந்த கேரளத்து பெண்களின் சரும அழகில் மறைந்துள்ள ஒரு ரகசியத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அவர்களது குளியல் முறை எப்படி இருக்கும்? என்ன பொருளை பயன்படுத்தி அவர்கள் தங்களது மேனியை பளபளப்பாக வைத்துக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோமா?

women

கேரளத்து பெண்கள் குளிப்பதற்கு முன்பாக தங்களுடைய உடம்பு முழுவதும் தேங்காய் எண்ணெயை பூசி கொண்டு 1 மணி நேரம் நன்றாக ஊற வைத்து அதன் பின்பு குளிப்பார்கள். அதன் பின்பு அவர்கள் சோப்பு போட்டு குளித்தாலும் சோப்பை அதிகமாக தங்களுடைய உடலுக்கு பயன் படுத்தமாட்டார்கள். அந்த எண்ணெயின் தன்மை எப்போதுமே அவர்களது உடலில் இருக்கும். இதனால் அவர்களுடைய சருமம் எப்போதுமே வறட்சி அடையாமல் பளபளப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இவர்கள் எப்போதுமே குளிப்பதற்கு சோப்பை தவிர இயற்கையான குளியல் பொடிகளை பயன்படுத்துவார்கள். இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து தங்களுடைய வீட்டிலேயே கூட இந்த பொடியை தயார் செய்து கொள்ளலாம். அழகுக்காக பயன்படுத்தப்படும் குளியல் பொடிகள் பல வகைகளில் உள்ளது. அதில் ஒரு வகை குளியல் பொடியை இன்று நாம் தெரிந்து கொள்வோம்.

pachai_payaru

இந்த குளியல் பொடியை செய்ய தேவையான பொருட்கள். பச்சை பயிறு – 50 கிராம், மைசூர் பருப்பு – 50 கிராம், பாதாம் பருப்பு – 6, சிவப்பு சந்தனம் தூள் – 15 கிராம், ரோஜா இதழ் பொடி – 15 கிராம், கடலை மாவு – 15 கிராம், அரிசி மாவு – 15 கிராம் குங்குமப்பூ – 1 சிட்டிகை.

- Advertisement -

மைசூர் பருப்பு என்பது துவரம்பருப்பு போல சிவப்பு நிறத்தில் கிடைக்கும். ரோஜா இதழ் பொடி கடைகளிலேயே உங்களுக்கு கிடைக்கின்றது. அப்படி இல்லை என்றால் பன்னீர் ரோஜா கிடைத்தால் அதை வாங்கி வீட்டிலேயே நிழலில் உலர வைத்து பொடி செய்து சேர்த்தும் கொள்ளலாம்.

mysore-dal

இந்த குறைந்த அளவில் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டால் உங்கள் வீட்டில் மிக்ஸி ஜாரிலேயே எல்லா பொருட்களையும் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த பொடியை உங்களுக்கு தேவையான அளவு கொரகொரப்பாக அரைத்தும் வைத்துக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் நைசாகவும் மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுடைய இஷ்டம் தான். இந்த பொடியை எப்படி பயன்படுத்துவது.

bath-powder

முதலில் எப்போதும் போல சோப்பு போட்டு அழுக்கு போக தேய்த்து குளித்து விடுங்கள். அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தில் உங்களுக்கு தேவையான அளவு இந்த குளியல் பொடியை போட்டு, தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் எதை வேண்டும் என்றாலும் போட்டு பேஸ்ட் போல கலக்கி வைத்துக் கொள்ளலாம். உங்களுடைய முகம் முதல், பாதம் வரை இந்த குளியல் பொடியை நன்றாகத் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து 5 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு அதன் பின்பு குளித்தால் உங்களுடைய சருமம் வெறும் 3 நாட்களில் ஜொலி ஜொலிக்க மாறுவதை உங்களால் உணர முடியும். இந்த குளியல் பொடியை போட்டு விட்டு அதன் பின்பு சோப்பு போட்டு தேய்த்து குளித்து விட கூடவே கூடாது.

pack

இந்த குளியல் பொடியுடன் சிறிதளவு அலோ வேரா ஜெல் சேர்த்து, நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் பேக் மாதிரியும் போட்டு கொள்ளலாம். உடல் முழுவதும் தடவி தினமும் குளிக்க முடியாதவர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது இந்த முறையில் குளிக்க பாருங்கள். முக அழகுடன் சேர்த்து உடல் முழுவதும் பள பளப்பாக மின்ன இந்த குளியல் பொடி மிகவும் உபயோகமானதாக இருக்கும். உங்களுக்கும் கேரளத்து பெண்களின் பொலிவு கிடைக்க வேண்டும் என்றால், தாராளமாக இந்த குறிப்பை நீங்க ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.