கேரளத்து மண்வாசனை மாறாத கடலை கறி இப்படித்தான் செய்யணும். கேரளாவுக்கே போய் ஆப்பத்தோடு, கடலை கறி சாப்பிட்ட திருப்தி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

kadalai-curry
- Advertisement -

கேரளாவில் செய்யக்கூடிய கருப்பு கொண்டை கடலை கறி எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்றைய ரெசிபி. புட்டு, ஆப்பம், இடியாப்பம், நம்ம ஊர் சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை இவைகளுக்கு அற்புதமான ஆரோக்கியம் தரும் ஒரு சைடு டிஷ் இது. கேரளத்து மண்வாசனை மாறாமல் அருமையான ஒரு ரெசிபிங்க. இதை மிஸ் பண்ணவே பண்ணாதீங்க. ஒரே ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீடு முழுவதும் இந்த கொண்டைக்கடலை கறி வாசம் வீசும். இவ்வளவு அழகான ரெசிபியை சாப்பிடாத வாயும் வயிறும் கொடுத்து வைக்காதது தான். சரி நாம ரெசிபியை பார்க்கலாம் வாங்க.

செய்முறை

முதலில் 1 பெரிய கப் அளவு கருப்பு கொண்டை கடலையை 8 மணி நேரத்திற்கு முன்பாகவே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 300 கிராம் அளவு கொண்டை கடலைக்கு பின் சொல்ல கூடிய அளவுகள் சரியாக இருக்கும்.

- Advertisement -

ஊறவைத்த கொண்டைக்கடலையை, தண்ணீரை வடித்து விட்டு, நல்ல தண்ணீரை போட்டு ஒரு முறை கழுவி ஒரு குக்கரில் போட்டுக்கொள்ள வேண்டும். குக்கரில் போட்ட கொண்டை கடலையோடு மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, நறுக்கிய தக்காளி பழம் – 2 கொண்டை கடலுக்கு தேவையான அளவு – உப்பு, போட்டு கடலை மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி மூடி போட்டு 3 விசில் விட்டால் கடலை பக்குவமாக வெந்து கிடைத்து விடும். இது அப்படியே இருக்கட்டும்.

இப்போது இதற்கான ஒரு ஸ்பெஷல் அறவையை அரைக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி, சோம்பு – 1 ஸ்பூன், தோல் உரித்த பூண்டு பல் – 5, தோல் சீவியை 3 இன்ச் இஞ்சி – துண்டுகள் நறுக்கியது, பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, துருவிய தேங்காய் – 1 கப் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேங்காய் அந்த எண்ணெயில் நன்றாக வதங்கி நிறம் மாறி வந்தவுடன், வர மல்லி தூள் – 2 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், போட்டு வதக்கி, உடனடியாக அடுப்பை அணைத்து, இதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுது போல அரைத்து தனியாக அப்படியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது கடலை கறியை தாளித்து விட வேண்டும். அடுப்பில் ஒரு பெரிய கடாயை வைத்து, அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, தோல் உரித்த பூண்டு பல் – 5 பொடியாக நறுக்கியது, போட்டு இரண்டு நிமிடம் போல வதக்கி விட்டு, மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 கைப்பிடி அளவு போட்டு, வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் குக்கரில் வேக வைத்திருக்கும் கொண்டை கடலையை ஊற்றி விடுங்கள்.

மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு விடுங்கள். இப்போது குழம்புக்கு தேவையான அளவு – உப்பு போட்டு, ஒரு மூடி போட்டு 15 நிமிடம் பச்சை வாடை போக கொதிக்க வைக்க வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இந்த குழம்பு கொஞ்சம் கிரேவி பதத்தில் நமக்கு கிடைக்க வேண்டும்.

- Advertisement -

15 நிமிடம் கொதித்து வந்ததும் இறுதியாக 1/2 கப் அளவு தேங்காய் பாலை ஊற்றி ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் இறுதியாக இதற்கு ஒரு மணக்க மணக்க தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு தாளிப்பு கடாயை வைத்து 1 ஸ்பூன் – தேங்காய் எண்ணெயில், கருவாப்பிலை – 2 கொத்து, மிகப் பொடியாக நறுக்கிய தேங்காய் பல் – 1/2 கைப்பிடி போட்டு வறுத்து இதை அப்படியே தயாராக இருக்கும் கொண்டைக்கடலை கறியில் கொட்டி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: நாண் சாப்பிட இனி ஹோட்டலுக்கு போக வேண்டிய அவசியமே இல்லைங்க. ரொம்ப சிம்பிளா பர்பெக்ட்டான ஹோட்டல் ஸ்டைல் நாண் வீட்டிலேயே செய்திடலாம்

இதன் மேலே இரண்டு கொத்து கருவாப்பிலையை பச்சையாகவே போட்டு ஒரு மூடி போட்டு விட்டு, ஐந்து நிமிடம் கழித்து திறந்து சுவைத்து பாருங்கள். இதனுடைய மனமும் ருசியும் அப்பப்ப சொல்வதற்கு வார்த்தை இல்லை.  நல்ல ஆரோக்கியமும் கூட. உங்களுக்கு இந்த அழகான ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -