கைக்கு அடங்காத முடிவளர்ச்சி வேண்டுமா? கேரளத்து பெண்களின் கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு காரணம் இந்த பாரம்பரியமான தலை குளியல் முறை தான்.

hair8
- Advertisement -

கேரளத்து பெண்களுக்கு இருக்கக்கூடிய முடி அழகை பார்க்க இரண்டு கண்கள் போதாது. இரண்டு கையை கொண்டு இறுக்கிப் பிடித்தால் கூட முடியை பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு கட்டுக்கடங்காமல் முடி வளர்ச்சி இருக்கும். இவர்கள் பின்பற்றக்கூடிய பாரம்பரியமான ஒரு குளியல் முறையைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கேரளத்து பெண்கள் இந்த தண்ணீரில் தான் தங்களுடைய முடியை அலசுவார்களாம். இந்த தண்ணீரை வைத்து உங்களுடைய தலை முடியை அலசினால் போதும். முடி அடர்த்தியாக கடகடவென வளர தொடங்கிவிடும்.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 20 லிருந்து 25 செம்பருத்திப்பூ இலை, 5 லிருந்து 7 செம்பருத்திப் பூ, இந்த இரண்டு பொருட்களையும் போட்டு, 1 லிட்டர் தண்ணீர் வரை ஊற்றி, இந்த இரண்டு பொருட்கள் மூழ்கும் அளவிற்கு அப்படியே விட்டு விட வேண்டும். 1 மணி நேரம் செம்பருத்தி பூவும் செம்பருத்தி இலையும் தண்ணீரிலேயே ஊறட்டும்.

- Advertisement -

ஒரு மணி நேரம் கழித்து ஊறிய இந்த இரண்டு பொருட்களையும் உங்கள் கையை வைத்து நன்றாக பிசைந்தால், இந்த இரண்டு பொருட்களில் இருக்கும் சாறு தண்ணீரில் நன்றாக இறங்கும். நுரை நுரையாக பார்ப்பதற்கு கொழகொழப்பாக உங்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதை ஒரு சல்லடையில் அல்லது ஸ்டீல் ஃபில்டரில் நன்றாக வடிகட்டி கொள்ளுங்கள். ஷாம்பு போல கொஞ்சம் தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும். இந்த தண்ணீரோடு நாம் முக்கியமாக சேர்க்க வேண்டிய 1 பொருள் வினிகர். 1 ஸ்பூன் வினிகர் மட்டும் சேர்த்து இந்த தண்ணீரில் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த தண்ணீர் கொழகொழப்பாக தான் இருக்கும். பார்ப்பதற்கு லிக்விட் ஷாம்பு போல. ஒருவேளை உங்களுக்கு வினிகர் சேர்க்க விருப்பமில்லை என்றால், வெந்தயப் பொடி 1 ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த தண்ணீரை வைத்து தலை முடியை எப்படி அலசுவது.

- Advertisement -

உங்களுடைய தலைமுடியை சிக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் வைத்து மண்டையை முதலில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு தயாராக வைத்திருக்கும் இந்த தண்ணீரை உங்களுடைய ஸ்கால்ப்பில் எல்லா இடங்களிலும் படும்படி போட்டுவிட்டு, ஷாம்பு போட்டு கசக்குவது போல முடியை கசக்கி விட வேண்டும். அதன் பின்பு முடியின் நுனி வரை இந்த தண்ணீரை ஊற்றி அப்படியே அலசி தண்ணீரை எல்லாம் புழிந்து தலை முடியை கொண்டை கட்டிக்கொள்ளுங்கள். 10 நிமிடம் வரை இந்த தண்ணீர் தலையில் ஊறினால் போதும்.

அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி தலையை சுத்தமாக அலசி விட வேண்டும். ஷாம்பு சீயக்காய் எல்லாம் போட்டு அலச வேண்டாம். நாம் தயார் செய்த இந்த தண்ணீரை தலையில் போட்டு லேசாக கசக்கும் போது, உங்களுடைய தலையில் இருக்கும் பொடுகு கூட அப்படியே கொட்டிவிடும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் உங்களுடைய தலைமுடியை இப்படியாக இந்த தண்ணீரில் அலசி வந்தால் நிச்சயமாக தலை முடி வளர்வதில் வித்யாசம் தெரியும். தலைமுடி கொட்டுவது குறையும். உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த மெத்தடை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -