கெட்ட கனவு தொல்லை என்பதே இனி உங்களுக்கு இருக்காது. இரவில் நிம்மதியாக தூக்கம் வர தலையணைக்கு அடியில் இந்த பொருளை வைத்துக் கொள்ளுங்கள்.

sleepless
- Advertisement -

இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் இருந்தால் போதும். பகலில் நம்முடைய வேலைகளை ஒழுங்காக செய்து முடித்துவிடலாம். இரவில் நல்ல தூக்கம் இல்லை. கெட்ட கனவு தொல்லை இருக்கும் பட்சத்தில், பகலில் நிச்சயமாக நம்முடைய வேலையை நிம்மதியாக செய்யவே முடியாது. தூக்கம் இல்லாத காரணத்தினால், உடல்சோர்வு ஏற்படும். ஆரோக்கியம் கெட்டுப் போகும். வேலையில் தொய்வு ஏற்படும். வேளையில் தானாக பின்னடைவு ஏற்படும். வாழ்க்கையின் முன்னேற்றம் படிப்படியாக குறையத் தொடங்கும். ஒரு தூக்கத்திற்கு பின்னால் எத்தனை விஷயம் அடங்கி உள்ளது என்று பாருங்கள். மனிதனாக பிறந்த ஒவ்வொருவனுக்கும் நிம்மதியான தூக்கம் எட்டு மணிநேரம் இருந்து விட்டாலே போதும். வாழ்க்கையில் வேறு எந்த சுகமும் தேவை கிடையாது.

ஆனால் கோடி கோடியாக பணத்தை வைத்திருப்பவர்களுக்கு கூட இந்த நிம்மதியான உறக்கம் கிடைப்பது இல்லை. தினமும் கஷ்டப்பட்டு தினமும் உழைத்து நூறு ரூபாய் சம்பாதித்தாலும் அவனுக்கு நிம்மதியான தூக்கம் இருக்கும். சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். படுத்தால் நல்ல தூக்கம் கிடையாது. கெட்ட கனவுகளின் தொந்தரவு வந்து கொண்டே இருக்கின்றது. மனநிம்மதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறீர்கள் என்றால் என்ன பரிகாரம் செய்யலாம்.

- Advertisement -

தூங்க செல்வதற்கு முன்பாக உங்களுடைய முகத்தை தண்ணீருடன், பன்னீர் சேர்த்து கழுவவேண்டும். 1 கப் தண்ணீரில், கொஞ்சமாக பன்னீர் கலந்து வாசமுள்ள அந்த தண்ணீரில் முகத்தை முதலில் கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு குலதெய்வத்தையும் அனுமனையும் மனதார பிரார்த்தனை செய்துகொண்டு உறங்கச் செல்லவேண்டும்.

மனதிற்குள் எந்த பிரச்சினையையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். ஒரு நீல நிற (sky blue) துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த துணியில் சிறிய படிகார கல் 1, வெண் கடுகு 1 ஸ்பூன், வெள்ளைப் பூண்டு 2, இந்த 3 பொருட்களையும் வைத்து சிறிய முடிச்சாக கட்டி தலையணைக்கு அடியில் வைத்து படுத்து கொள்ளவேண்டும். இப்படி செய்தால் நல்ல உறக்கமும் கிடைக்கும். கெட்ட கனவுகளின் தொந்தரவும் நமக்கு வராது.

- Advertisement -

தினமும் தலையணைக்கு அடியில் இந்த முடிச்சை வைத்து தூங்கினால் போதும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை உள்ளே இருக்கும் பொருட்களை மட்டும் கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதிய பொருளை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். துணியை லேசாக தண்ணீரில் அலசி காய வைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படியாகத் தொடர்ந்து 11 நாட்கள் செய்யும்போதே இரவு தூக்கத்தில் உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும்.

ஆனால் பதினோரு நாட்களில் இந்த பரிகாரம் செய்வதை நிறுத்தி விடாதீர்கள். 48 நாட்கள் தொடர்ந்து இதே போல் செய்தால் நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். ஆனால் இரவு 10 மணிக்கு முன்பாக உறங்க சென்று விடவேண்டும். தூங்கும்போது செல்போனை கையில் வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டே இருக்கக்கூடாது. மனதில் தேவையற்ற விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. இறைவனை மட்டும் நினைத்துக் கொண்டு இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்யும்போது நல்ல பலனை பெற முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -