கெட்ட நேரத்தில் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள், அதிகம் பாதிப்பை கொடுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் வழி உங்களுக்காக.

thulasi-amman
- Advertisement -

நமக்கு ஜாதக கட்டத்தில் நல்ல நேரம் இருக்கும்போது பிரச்சினையே கிடையாது. வரக்கூடிய துன்பங்களின் மூலம் பெரிய பாதிப்புகள் இல்லாமல் தப்பித்து கொள்ளலாம். அதுவே நமக்கு கெட்ட நேரம் நடந்து கொண்டிருந்தால், சின்ன கஷ்டம் வந்தால் கூட அதை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. அதன் மூலம் பெரிய பெரிய பாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும்‌. நமக்கு வரக்கூடிய கெட்ட நேரத்திலும், பெரிய பாதிப்புகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய இரண்டு சுலபமாக ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bhuma-devi

முதலாவது, உங்களுக்கு தீராத கஷ்டங்கள் இருக்கும்போது இறைவனிடம் இந்த முறையில் கோரிக்கைகளை வைத்து பாருங்கள். அதாவது பூமா தேவியை விட இந்த பூலோகத்தில் பொறுமையாக இருப்பவர்கள் வேறு யாருமே கிடையாது. நம்முடைய நல்லது கெட்டது, நம்முடைய பாரம் இவைகளைத் தாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கக் கூடிய பூமாதேவியிடம் நம்முடைய கஷ்ட காலத்தில் கோரிக்கைகளை வைத்தால் அந்த கஷ்டங்கள் உடனே தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

பூமாதேவியை ஒரு தெய்வமாக நினைத்து வழிபடக்கூடிய வழக்கம் நம்மிடத்தில் பெரும்பாலும் இல்லை. என்றாலும் உங்களுக்கு தீராத கஷ்டம் இருக்கும் போது இப்படி செய்து பாருங்கள். சுத்தமான இடத்தில் இருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மண்ணைக் கொஞ்சம் சுத்தம் செய்துகொள்ளுங்கள். அந்த மண்ணில் கொஞ்சமாக மஞ்சள் தண்ணீரை தெளித்து கொள்ளுங்கள். அதில் இரண்டு துண்டு பச்சை கற்பூரத்தை போட்டு விட்டு, அந்த மண்ணை உங்களுடைய உள்ளங் கைகளில் வைத்துக்கொண்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை பூமா தேவியை நினைத்து சொல்லுங்கள். அந்த கஷ்டங்கள் கூடிய விரைவிலேயே தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

sand

11 நாட்கள் இப்படி பூமா தேவியை நினைத்து பூமியில் இருக்கும் மண்ணை உங்களுடைய கைகளில் வைத்துக்கொண்டு வேண்டிக்கொண்டால், உங்களுடைய கஷ்டங்கள், கஷ்டங்களில் இருக்கும் பாரம் அனைத்துமே படிப்படியாகக் குறையத் தொடங்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். (முதல்நாள் வேண்டுதலுக்கு பயன்படுத்திய மண்ணை தினம்தோறும் பயன்படுத்திக் கொள்ளலாம். பூஜை முடிந்தவுடன் இந்த மண்ணை வீட்டின் வெளிப்புறத்தில் போட்டு விடலாம்.)

- Advertisement -

இரண்டாவதாக, ராகுகாலம், எமகண்டம், கெட்ட நேரம், என்று தினசரி நாட்களில் வரக்கூடிய நேரங்களில், சில நல்ல விஷயங்களை தொடங்கக் கூடாது என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் சில வேலைகளை சில நேரங்களில் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்போம். யாராவது சொல்லி இருப்பார்கள் இப்போது ராகு காலம் எமகண்டம் இந்த வேலையை செய்யாதே என்று.

thulasi

ஆனால் நம்முடைய கட்டாயம், சூழ்நிலை, அந்த நல்ல காரியத்தை செய்தே ஆக வேண்டும். என்ன செய்யலாம். இரண்டு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு விட்டு, துளசி தாயை மனதார வேண்டிக்கொண்டு கிழக்கு பார்த்து நின்று இந்த துளசி தண்ணீரை குடித்து விட்டு, அதன் பின்பு உங்களுடைய நல்ல காரியத்தை தொடங்குங்கள்.

thulasi-theertham

ராகு காலம் எமகண்ட நேரத்தில் நீங்கள் செய்யும் நல்ல காரியம் தடைபடுவதற்கு வாய்ப்பே கிடையாது. முழு நம்பிக்கையோடு செய்தால். மேல் சொன்ன இரண்டு விஷயங்களுமே ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்ட விஷயங்கள். நம்பிக்கையோடு செய்தால் மட்டுமே நல்ல பலனைத் தரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -