ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, மருந்து வசியம் இவைகளிலிருந்து, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியுமா? ஆன்மீக ரீதியாக ஒரு ரூபாய் செலவு கூட செய்யாமல், 48 நாட்களில் தீர்வு தரும் பரிகாரம்.

amman

நம்மில் நிறைய பேருக்கு மனது பலவீனமாக உள்ளது. ஏதாவது ஒரு கெடுதல் நடந்துவிட்டால், நமக்கு நம்முடைய எதிரிகள் ஏதோ செய்வினை வைத்து விட்டார்கள். சூனியம் வைத்து விட்டார்கள். ஏதோ கெட்ட சக்தியை ஏவி விட்டு விட்டார்கள். அல்லது நமக்கே தெரியாமல், சாப்பிட எதோ நமக்கு மருந்தை கொடுத்து விட்டார்கள். என்ற பயம் நம் மனதிற்குள் வந்துவிடுகிறது. இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டவர்கள், உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆன்மீக ரீதியாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மந்திர தந்திரம் எல்லாம் இதில் ஒன்றுமே கிடையாது. முழு நம்பிக்கையோடு அந்த அம்பாளை வேண்டி செய்ய வேண்டிய பரிகாரம் இது. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் செய்து பலன் பெறவேண்டும். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கெட்ட சக்தியும் கிடையாது. பேய் பிசாசும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நம்பிக்கையோடு 48 நாட்கள் தொடர்ந்து இதை செய்து வருபவர்களுக்கு நிச்சயம் விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சுத்தபத்தமாக இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். உங்களது பூஜை அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஏலக்காய், கொஞ்சமாக விபூதி மட்டும் போதும். ஏலக்காய் தோலை உரித்து விட்டு உள்ளே இருக்கும் விதையை மட்டும் உள்ளங்கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். ஏலக்காய் விதை மேலே ஒரு சிட்டிகை விபூதியை தூவி விடுங்கள்.

kettasathi-1

விபூதி, ஏலக்காய் விதை இவை இரண்டும் இடது உள்ளங்கைகளில் இருக்கவேண்டும். வலது உள்ளங்கையை இடது கையின் மேலே வைத்து மூடி, ‘ஓம் ஸ்ரீஅங்காள தேவியை நமஹ’ என்ற மந்திரத்தை 1008 முறை உச்சரித்து தான் ஆக வேண்டும். அதன் பின்பு உள்ளங்கையில் வைத்திருக்கும் விபூதியையும் ஏலக்காயையும் உங்கள் முன்னால் இருக்கும் கண்ணாடி டம்ளரில் போட்டு கலந்து, உங்கள் உடம்பில் இருக்கும் கெட்ட சக்தி வெளியேறி விடவேண்டும் என்று அங்காள ஈஸ்வரியை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆண்களாக இருந்தால் இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்து விடமுடியும். பெண்கள் தொடர்ந்து 48 நாட்கள் செய்ய முடியாத பட்சத்தில், இடையே வரக்கூடிய அந்த 5 நாட்களை தவிர்த்து விட்டு, 48 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். கட்டாயம் பூஜை அறையில் அமர்ந்து குலதெய்வத்தையும், அங்காள ஈஸ்வரியும், துர்கா தேவி போன்ற உக்கிர அம்மன் தெய்வங்களை மனதார வணங்கி இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

தண்ணீரை குடிக்கும் போது உங்களது குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை உச்சரித்துக் கொள்ளுங்கள். எதிர்மறை சக்தியினால் பிரச்சனை இருக்கின்றது. உங்களுக்கு யாரேனும் மருந்து வைத்து விட்டார்கள் என்றாலும் இதை நீங்களே செய்து கொள்ளலாம்.

உங்களது குழந்தைகளுக்கோ உங்களது கணவருக்கோ உங்களது உற்றார் உறவினர் யாருக்கேனும் இந்த பிரச்சனை இருந்தால் கூட உங்கள் கைகளால் இந்த தண்ணீரை உருவேற்றி அவர்களுக்கு கொடுத்தாலும் 48 நாட்களில் பலனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பலன் அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சிக்கலான பிரச்சனைக்கு, சுலபமான தீர்வை கொடுக்கும் குருபகவான் வழிபாடு! 13 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்கள் அத்தனையும் நீங்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.