சிக்கலான பிரச்சனைக்கு, சுலபமான தீர்வை கொடுக்கும் குருபகவான் வழிபாடு! 13 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்கள் அத்தனையும் நீங்கும்.

guru

சிக்கல்களும் குழப்பங்களும் நிறைந்திருப்பது தான் வாழ்க்கை. சில நேரங்களில் வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படும் போது, சரிவுகள் ஏற்படும் போது நம்முடைய வாழ்க்கை, சரியான பாதையில் தான் செல்கிறதா என்ற குழப்பம் நம்மில் பல பேருக்கு இருக்கும். பிரச்சினை என்பது நம்மோடு முடிந்துவிடுவது அல்ல. நம்முடைய குடும்பத்தையும் பாதிக்கக்கூடியது. குடும்பத்தில் இருப்பவர்களை சரியான முறையில் வழிநடத்தி செல்வதும் குடும்ப தலைவன், குடும்பத் தலைவியின் தலையாய கடமையாக உள்ளது.

sad

வாழ்க்கையில் உங்களுக்கு தீராத சிக்கல்கள் இருந்தாலும், முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தாலும் சரி, உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு, உங்களது குழந்தைகள் அல்லது  கணவன்-மனைவி யாருக்கேனும் தீராத குழப்பங்கள் இருந்தாலும் சரி, அவர்களுக்கான குழப்பத்திலிருந்து தெளிவு பெற, குரு பகவானை வேண்டி என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

அவிழ்க்கவே முடியாத முடிச்சினை போடுபவனும் எம்பெருமானே! அந்தப் முடிச்சை அவிழ்ப்பதற்கு வழி காட்டுவதும் அந்த எம்பெருமானே! அவனின்றி ஒரு அணுவும் அசையாது, என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம். தீராத குழப்பத்திற்கு தீர்வு தரும் குரு பகவானின் வழிபாட்டை பார்த்துவிடலாம்.

thatchinamoorthy

தட்சிணாமூர்த்தி வழிபாடு என்றாலே வியாழக்கிழமை என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். இந்த பரிகார பூஜையும் வியாழக்கிழமை அன்று செய்வது சிறப்பினை தேடித்தரும். உங்களின் வீட்டின் அருகில் தக்ஷிணாமூர்த்தி சன்னதி இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும். அந்த கோவிலில் உள்ள அர்ச்சகரிடம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும், வேதத்தில் இருக்கும் ‘மேதா சுக்தம்’ எனும் மந்திரத்தை சொல்லி தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்றவாறு முன்கூட்டியே சொல்லி விடுங்கள்.

- Advertisement -

இந்த மேதா சுக்த்ம் என்று சொல்லப்படும் மந்திரம், தட்சிணாமூர்த்திக்கும் சொல்லப்படும். சரஸ்வதி தேவிக்கும் சொல்லப்படும். வாழ்க்கையில் நல்ல வழியைக் காட்ட கூடிய தட்சிணாமூர்த்திக்கு இந்த மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யும்போது, நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பலவிதமான குழப்பங்களுக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும்.

madhulai

கோவிலுக்கு செல்லும்போது 2 மாதுளம் பழங்கள், கொண்டைக்கடலை மாலை, முடிந்தால் கொண்டைக்கடலையை வேக வைத்து நிவேதனமாக எடுத்து செல்லலாம். இரண்டு மாதுளம் பழங்களை குரு பகவானின் பாதங்களில் வைத்து, பூஜை செய்து வீட்டிற்கு கொண்டு வந்து பிரசாதமாக நாம் சாப்பிடலாம். இந்தப் பொருட்களையெல்லாம் தட்சிணாமூர்த்திக்கு படைத்து உங்களது பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு, இரண்டு நல்லெண்ணை தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு, தட்சிணாமூர்த்திக்கு முன்பாக அமர்ந்து 10 நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்யுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இருள் விலக இந்த வழிபாட்டு முறை உதவியாக இருக்கும்.

guru

தொடர்ந்து 13 வாரங்கள் வரும் வியாழக் கிழமையில் இந்த பரிகார வழிபாட்டினை செய்து வரலாம். வாழ்க்கையில் அவசரமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும் என்ற தருணத்தில், சிக்கி தவிப்பவர்கள் தொடர்ந்து 13 நாட்கள் இந்த வழிபாட்டை செய்தாலும் நல்ல பலனை பெற முடியும். பரிகாரத்தை தொடங்கும் நாளை மட்டும் வியாழக்கிழமை வைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தினமும் குளிக்கும் முன் இந்த மந்திரத்தை சொல்லி விட்டு தண்ணீரை ஊற்றுங்கள்! பாவத்தை போக்கக்கூடிய கங்கையில், நீராடிய பலன் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.