உங்களுக்கு சக மனிதர்களால் நன்மைகள் பல ஏற்படச் செய்யும் அற்புத மந்திரம்

ketu

இந்த புவியில் தோன்றிய அனைத்து உயிர்களின் மீதும் விண்ணில் உள்ள நவகிரகங்களின் ஆற்றல் எப்போதும் உண்டு. அதிலும் மனம் மற்றும் சிந்தனைத் திறன் கொண்ட மனிதன் மீது இந்த கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அவ்வளவு சாதாரணமானதல்ல. இந்த நவகிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு – கேது கிரக தோஷங்களால் ஒரு மனிதன் படும் பாடு சொல்லி மாளாது. அதிலும் கேது பகவான் சனி பகவானின் அம்சம் நிறைந்தவராக இருப்பதால், ஜாதகத்தில் கேதுவின் நிலை கெட்டிருக்கும் போது மிகுந்த சோதனைகளுக்குள்ளாக வேண்டியிருக்கிறது. அத்தகைய கேது கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகளை போக்கி நன்மைகளை ஏற்படும் கேது மூல மந்திரம் இதோ.

ketu

கேது மூல மந்திரம் :

ஓம் ஹ்ரீம் க்ரூம் க்ருர ரூபிணே கேதவே ஐம்
ஸெள: ஸ்வாஹா

கேது பகவானுக்குரிய ஆற்றல் மிகுந்த மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் 9 அல்லது 27 முறை துதிக்க வேண்டும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரக சந்நிதியில் உள்ள கேதுவின் சிலைக்கு சங்கு பூக்களை வைத்து, உளுந்து சமர்ப்பித்து, இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபடுவதால் பிற உயிரினங்கள் குறிப்பாக பாம்புகளை கொன்றதால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். நெடுநாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் ஏற்படுவதில் இருக்கின்ற தடைகள் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும். பிறருடன் ஏற்பட்டிருக்கும் பகைமைகள் தீரும். அந்நிய நபர்களினால் உதவிகளும், நன்மைகளும் கிடைக்கபெறுவார்கள்.

Rahu Ketu

கேது பரிகாரங்கள்:

- Advertisement -

கேது பகவானின் முழுமையான நல்லருளைப் பெறுவதற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்பெரும்பள்ளம் ஊரில் இருக்கும் அருள்மிகு நாகநாத சுவாமி கோயிலுக்கு ஏதேனும் ஒரு சனிக்கிழமை காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக சென்று சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். பிறகு நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவானுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து, பல வண்ண நிறங்களை கொண்ட வஸ்திரம் சாற்றி, கேது பகவானை வழிபட வேண்டும். இந்த பரிகார வழிபாட்டை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ செய்வது சிறப்பு.

kethu

மேற்கூறிய பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் கோயிலில்களில் இருக்கும் நவக்கிரக சன்னதிக்கு சனிக்கிழமைகளில் காலை 7 லிருந்து 8 மணிக்குள்ளாக சென்று, பல வண்ணப் பூக்களை கேது பகவானுக்கு சமர்ப்பித்து, கொள்ளு நைவேத்தியம் வைத்து, நெய்தீபம் ஏற்றி கேது பகவான் காயத்ரி மந்திரங்களை 108 முறை 1008 முறை துதித்து வருவதால் கேது பகவானின் தோஷம் நீங்கி வாழ்வில் நன்மைகள் உண்டாகும். இந்த பரிகாரத்தை குறைந்தபட்சம் 9 வாரங்கள் முதல் அதிகபட்சம் 27 வாரங்கள் வரை செய்தால் மட்டுமே முழுமையான பலன்களை பெற முடியும்.

ketu

இந்த இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் கோயில்கள் அருகில் வசிக்கும் குரங்குகளுக்கு வெல்லம் கலந்த உணவுகளை உண்ணக் கொடுப்பது கேதுவின் தோஷங்களை போக்கும். கோயில்களுக்கு வெள்ளை மற்றும் கருப்பு நிற வஸ்திரங்களை தானம் செய்யலாம். கடுமையான நோய்களால் பாதிக்கப் பட்டிருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு மருந்துகள் வாங்கிக் கொடுப்பதும், தினமும் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் கருப்பு நிற நாய்க்கு உணவு அளிப்பதும் கேது பகவானின் அருளை பெற்றுத்தரும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

இதையும் படிக்கலாமே:
ஆதி சக்தி மூல மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we Ketu Moola mantra in Tamil. This mantra is also called as Ketu mantras in Tamil or Ketu bhagavan mantra in Tamil or Moola mantras in Tamil or Ketu manthiram in Tamil.