இந்த வருடம் செப்டம்பர் 1க்கு பிறகு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

ketu-peyarchi

இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் அப்படி என்ன நடக்க இருக்கிறது? என்று ரொம்ப யோசிக்க தேவையில்லை. நம்முடைய கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நடைபெற இருக்கும் இந்த கேது பெயர்ச்சியானது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ஆம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி செப்டம்பர் ஒன்றாம் தேதியும் நிகழவிருக்கிறது. இதனடிப்படையில் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான பலன்களை தெரிந்து கொள்வோம். மேலும் இந்த கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் வரக்கூடிய ராசிக்காரர்கள் யார்? யார்? மற்ற ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் உண்டாகலாம்? என்பதைப் பற்றியும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இருக்கும் சூழ்நிலையில் உங்களுக்கு கேது பகவான் எட்டாம் வீட்டில் அமர இருப்பதால் உங்கள் உடல்நிலையில் மிகுந்த அக்கறை செலுத்துவது நல்லது. உங்களின் உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அஷ்டம ஸ்தானத்தில் கேது பகவான் அமர்வதால் நீங்கள் ஒருவருக்கு உதவி செய்வதாக இருந்தால் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குறிப்பாக பணவிஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேது பகவான் ஏழாம் இடத்தில் அமர இருப்பதால் உங்களின் பகைவர்கள் ஒழிந்து போவார்கள். உங்களின் வியாபாரம் மற்றும் தொழில் ரீதியான எதிரிகள் தொல்லைகள் முற்றிலுமாக நீங்கும். முன்பின் தெரியாதவர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய விஷயங்களில் ஈடுபடும் பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை. உங்களின் நீண்டகால கனவுகள் நிறைவேறக் கூடிய காலம் உங்கள் அருகாமையில் இருக்கிறது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கேது பெயர்ச்சியானது நல்ல பலன்களையே தரும். உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் அமர்வதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிகம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரிய தொகையை முதலீடு செய்யும்முன் நம்பிக்கைக்குரியவர்கள் இடம் ஆலோசனை கேட்டுக் கொள்வது நல்லது. எதையும் ஆழமாக யோசிக்காமல் நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவது தான் உங்களுக்கு நல்லது. கடன் தொல்லைகள் படிப்படியாக நீங்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு கேது பகவான் ஐந்தாம் இடத்தில் வந்து அமர இருப்பதால் அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவார். அதிகம் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். இதுவரை இருந்த மந்த நிலை மாறிவிடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் யோகம் பெறலாம். கேது பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர இருப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பொறுமை அவசியம் தேவை.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு நான்காம் இடத்தில் கேது பகவான் வந்து அமர்வதால் உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் வந்து பெயர்ச்சி ஆவதால் சுகபோக வாழ்க்கை அமையும். கடன் பிரச்சினைகள் நீங்குவதற்கான வழி கிடைக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருக்கும். உங்களின் ஆரோக்கியத்திலும், உங்கள் தாயாரின் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்மைகள் உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது ஏற்றம் தரும்.

- Advertisement -

கன்னி
kanniகன்னி ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்தில் கேது பகவான் பெயர் பெயர்ச்சி அடைவதால் சகோதர, சகோதரிகள் உடனான உறவில் விரிசல் ஏற்படலாம். எனவே அவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைபட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் முடிவுக்கு வரும். சொத்துப் பிரச்சனைகள் நீங்கும். பிரிந்து போன உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். தொழில் மற்றும் வியாபார ரீதியாக உங்களின் எதிரிகள் தானாகவே விலகி விடுவார்கள்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு கேது பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார், இதனால் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மூன்றாம் நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்வது நல்லது அல்ல. தேவையற்ற விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. நீங்கள் கோபத்தில் பேசும் வார்த்தைகள் உங்களுக்கு எதிராக திரும்பலாம். எனவே பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. எதிலும் பொறுமையுடன் கையாள்வது பலன் தரும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தெய்வ வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளும், பிரச்சனைகளும் கலந்து ஏற்படும். உங்கள் ஜென்ம ராசியில் கேது பகவான் பெயர்ச்சி ஆவதால் உடல்நிலையில் சில பிரச்சனைகள் வந்து மறையும். எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியாமல் மந்த நிலையை உருவாக்குவார். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் வந்தவழியே பிரச்சனைகளும் சென்றுவிடும். எனவே கவலை கொள்ள தேவை இல்லை. சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதாலும், காக்கைக்கு எள் சாதம் படைத்தாலும் நன்மைகளை பெறலாம்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் ஜென்ம ராசியில் இதுவரை தங்கியிருந்த கேது பகவான் விரய ஸ்தானத்திற்கு சென்று அமரப் போகிறார். எனவே நல்ல பலன்களை வாரி வழங்குவார். நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் நடைபெறும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிட்டும். தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் சாதகமான பலன்கள் உண்டாகும். மந்த நிலை மாறும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு கேது பகவான் லாப ஸ்தானத்தில் வந்து அமர இருப்பதால், உங்களுக்கு யோகமான காலமாக அமையப் போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிட்டும். இதுவரை ஏற்ற, இறக்கமாக இருந்த பொருளாதாரத்தில் இனி நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். இறை வழிபாடுகளில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். இதனால் மனதில் நிம்மதியும் குடிகொள்ளும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் கேது பகவான் பெயர்ச்சி ஆவதால் நன்மை உண்டாகக் கூடிய மாற்றங்களை வாழ்வில் சந்திப்பீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதுவரை நீங்கள் இழந்த பொருட்கள், செல்வம், மரியாதை முதலானவை மீட்டெடுக்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கேது பகவான் உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் அமர்வதால் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் இரட்டிப்பாகும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் கேது பகவான் வந்து அமர இருக்கிறார். இதனால் மனக்குழப்பங்கள் முற்றிலும் நீங்கும். புதிய பாதைகள் கண்களுக்குத் தென்படும். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடம் மகிழ்ச்சியை தரும். எனவே குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சண்டை, சச்சரவுகள் முடிவுக்கு வரும் உங்களுக்கென உள்ளது, உங்களுக்கு கட்டாயம் வந்து சேரும். அதைப்பற்றிய தேவையில்லாத கவலைகளை நீக்கி விடலாம். நீங்கள் மனதில் வைத்திருக்கும் விஷயங்கள் விரைவில் நடைபெறும் யோகமுண்டு. இறை வழிபாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் சமையலறையில் இந்த 3 விஷயங்களை செய்தால் செல்வம் கொழிக்குமாம்! ஜோதிட சூட்சம குறிப்புகள்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Ketu peyarchi palangal in Tamil. Kethu palangal. Ketu peyarchi palan Tamil. Ketu peyarchi palangal. Ketu peyarchi. Ketu peyarchi 2020 date.