வீட்டிலேயே சுவையான K F C சிக்கன் செய்யும் முறை

kfc

பொதுவாக அசைவ பிரியர்கள் சிக்கன் என்றாலே K F C சென்று சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அது போன்ற சிக்கனை நாம் வீட்டிலே எளிமையாக சமைக்கலாம். அது பற்றி இந்த பதிவில் காண்போம்.

kfc_1

K F C சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன் லெக் பீஸ் – 4
பூண்டு பேஸ்ட் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
தயிர் – தேவையான அளவு
மைதா – 100 கிராம்
மிளகுத்தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – சிறிதளவு
முட்டை – 1
கார்ன் மீல்ஸ் – 100 கிராம்

K F C சிக்கன் செய்முறை:

ஒரு பவுலில் தயிரை ஊற்றி அதில் தண்ணீர் சேர்த்து மோர் போன்று தயார் செய்து அதில் மைதாவினை சேர்த்து அதனுடன் பூண்டு பேஸ்ட் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும். அதில் சிக்கனை போட்டு அதனை அப்படியே 2 மணிநேரம் வரை அப்படியே வைக்கவும்.

kfc_2

- Advertisement -

பிறகு ஒரு தட்டில் மைதா, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கார்ன் மீல்ஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு மற்றொரு பவுலில் முட்டையை உடைத்து நன்றாக கலக்கவும். பிறகு ஊற வைத்த சிக்கனை இந்த முட்டையில் நனைத்து கலந்து வைத்து மாவில் உருட்டி மீண்டும் முட்டையில் நனைத்து அதனை வேறொரு தட்டில் வைக்கவும். இவ்வாறாக அனைத்து சிக்கனையும் மேற்கூறியபடி தயார் செய்து வைக்கவும்.

kfc_3

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தயார் செய்த சிக்கனை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான K F C சிக்கன் தயார்.

kfc_4

சமைக்க ஆகும் நேரம் – 2 மணிநேரம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 2

இதையும் படிக்கலாமே:
சுவையான முட்டை கட்லட் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have K F C chicken recipe in Tamil. It is also called as K F C chicken seimurai or K F C chicken seivathu eppadi in Tamil.