தனது ரசிகருக்கு சற்றும் யோசிக்காமல் கோலி அளித்த புத்தாண்டு பரிசு ! என்ன கொடுத்தார் தெரியுமா?

koli 2

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து அபார அணி இந்த இதனை தொடரில் (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் சிட்னி நகரில் அடுத்து நடக்க விருக்கும் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணி மெல்போர்ன் நகரில் இருந்து கிளம்பி சிட்னி நகரை அடைந்தது.

india

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் மைதானத்தில் இருந்த இந்திய ராசிகளை சந்தித்து அவர்களுடன் சற்று நேரம் பேசி மகிழ்ந்தார். ரசிகர் அனைவரும் கோலியுடன் செல்பி எடுத்து கொண்டனர். அப்போது ஒரு சிறுவன் கோலியிடம் ஒரு பரிசினை கேட்டான்.

அப்போது கோலி சற்றும் யோசிக்காமல் தான் பயன்படுத்திய காலை பாதுகாக்கும் “லெக்பேட்” களை அந்த சிறுவனுக்கு பரிசளித்தார். இதனால் அந்த சிறுவன் மகிழிச்சியின் உச்சத்தில் திளைத்தான். பிறகு அனைவரிடம் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார் .

koli

தனது ரசிகர்களுக்காக அடிக்கடி நேரம் ஒதுக்கும் கோலி அவர்களை சிறப்பிக்கவும் தவறுவதில்லை. இதனை கோலி ரசிகர்கள் கொண்டாடி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்திய அணி சிட்னி நகரில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிக்கலாமே :

4வது டெஸ்டில் இவர் இருக்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் ஆஸி தோல்வியடையும் – பாண்டிங்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்