4வது டெஸ்டில் இவர் இருக்கவேண்டும். இல்லையெனில் மீண்டும் ஆஸி தோல்வியடையும் – பாண்டிங்

ponting

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மெல்போர்ன் நகரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்திய அணி இந்த இதனை தொடரில் (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியினை கடிந்து அந்த அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

wade

அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியில் தற்போது இடம்பிடித்துள்ள அனைவரும் தங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணியின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளில் நான் கண்ட மிகசிறந்த அணியாக தற்போது உள்ள இந்திய அணி உருவெடுத்துள்ளது. மேலும் அவர்களின் வெற்றி வாய்ப்பும் இந்த தொடரில் அதிகரித்துள்ளது.

அடுத்த டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான மேத்யூ வேட் அணியில் சேர்க்கப்பட வேண்டும். அவர் பிக் பேஷ் போட்டியில் சிறப்பாக ஆடிவருகிறார். அவரை அணியில் இணைத்தால் அணியின் நாடு வரிசை பலமடையும். அதன் மூலம் இந்திய அணிக்கு நெருக்கடி தரமுடியும் என்று நான் கருதுகிறேன். இப்போது உள்ள ஆஸ்திரேலிய அணியை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

wade 1

மேலும் அணியில் முக்கிய வீரர்களான ஸ்மித், வார்னர் போன்றவர்கள் இல்லாததால் அணியை வழிநடத்த ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறி வருகின்றனர். வீரர்கள் தங்களது பொறுப்பினை உணர்ந்து விளையாட வேண்டும். என்றும் ரிக்கி பாண்டிங் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

பும்ரா இந்திய அணியில் விளையாட நானே காரணம் ஏன் தெரியுமா – ஜான் ரைட்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்