உணவு வகைகளை பொறுத்த வரையில் அந்தந்த ஊருக்கென்று ஒரு பாரம்பரியமான உணவு இருக்கும். விசேஷ நாட்களிலும் முக்கியமான நிகழ்வுகளிலும் கட்டாயமாக செய்யப்படும் உணவுகள் என்று காட்டாயமாக ஒரு சில உணவுகளை வைத்திருப்பார்கள். அந்த வகையில் கேரளாவில் செய்யப்படும் இந்த கிண்ணத்தப்பம் மிகவும் ருசியாக சாப்பிட அத்தனை மிருதுவாகவும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும். இப்படி ஒரு சுவையில் உள்ள கிண்ணத்தை நாம் வீட்டில் மிகவும் எளிமையாக செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1கப், தேங்காய் பால் – 3 கப், சர்க்கரை – 2 கப், ஏலக்காய் – 5, சீரகம் – 1/2 டீஸ்பூன், நெய் – 1டேபிள் ஸ்பூன், முட்டை – 2, ஏலக்காய் – 5 டீஸ்பூன்.
இந்த கிண்ணத்தம் செய்வதற்கு மாவு பச்சரிசி வாங்கிக் கொள்ளுங்கள். இந்த அரிசியில் செய்யும் போது இதன் சுவை இன்னும் நன்றாக இருக்கும். இந்த அரிசியை நன்றாக கழுவி ஆறு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள் ஆறு மணி நேரம் ஊறிய இந்த அரிசியை நன்றாக தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக ஒரு முழு தேங்காய் உடைத்த பிறகு அதன் மேல் உள்ள தோல் எல்லாம் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முதல் பாலை தனியாக வைத்து விடுங்கள். அதே போல் மீதம் இருக்கும் தேங்காயில் இன்னொரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டாவது பாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இது போல் மூன்றாவது முறை தண்ணீர் ஊற்றி அரைத்து மூன்றாவது பாலையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது தண்ணீர் வடித்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து கடைசியாக எடுத்த மூன்றாவது பாலில் இருந்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல நைசான பதத்திற்கு அரைக்க வேண்டும். அரைக்கும் போது இடையே தண்ணீர் போத வில்லை என்றால் மூன்றாவது தேங்காய் பாலை தான் ஏற்ற வேண்டும் தண்ணீர் சேர்க்கக்கூடாது. அரிசி முக்கால் பாகம் அரைப்பட்டவுடன் ஏலக்காவை சேர்த்து அரைக்க வேண்டும். அரிசி முழுவதுமாக அரைப்பட்டவுடன் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி ஒரு சுற்று மட்டும் விட்டு முட்டை இந்த மாவுடன் நன்றாக கலந்த பிறகு மாவை எடுத்து ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்படி வடிகட்டும் போது அரிசி அரைத்ததில் திப்பிகள் தனியாக தங்கி அரிசி தண்ணீர் உங்களுக்கு தனியாக கிடைத்து விடும். இந்த தண்ணீருடன் நீங்கள் ஏற்கனவே எடுத்து வைத்த முதல் மற்றும் இரண்டாவது தேங்காய் பாலை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே சர்க்கரையும் சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை கலந்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து இட்லி பானையை வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு தட்டை வைத்து, இந்த அரைத்த மாவை கேக் பேன் இருந்தால் வசதியாக இருக்கும் இல்லை என்றால் அது போல் உங்கள் வீட்டில் என்ன பாத்திரம் இருக்கிறதோ, அதில் கொஞ்சம் நெய் தடவி நீங்கள் அரைத்து எடுத்த பால்,தேங்காய் பால், சக்கரை சேர்த்த கலவையை ஊற்றய பிறகு மேலே சீரகம் தூவி இட்லி தட்டில் வைத்து 20 நிமிடம் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது வெந்து விட்டதா என்பதை அறிய ஒரு கரண்டிய, கத்தியோ வைத்து உள்ளே குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும் அந்த பதத்தில் வந்தால் இது வந்து விட்டது என்று அர்த்தம்.
இதையும் படிக்கலாமே: சரவண பவன் தக்காளி சட்னி எப்படி ஈசியாக செய்யணும்னு தெரியுமா? சுவையான ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னி எளிதாக செய்வது எப்படி?
அவ்வளவுதாங்க கேரளா பாரம்பரிய உணவான கிண்ணத்தப்பம் தயார். எது கொஞ்சம் அறிய உடன் பனை ஒரு தட்டில் கவிழ்த்து லேசாக தட்டினால் போதும் நல்ல வெள்ளை நிற ஜெல்லி போல வந்து விழும். இந்த உணவை நீங்களும் உங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.