சுவையான பூண்டு தொக்கு ஈசியாக இப்படி செஞ்சு பாருங்க இட்லி, தோசை, சாதத்துக்கு அருமையாக இருக்கும்! ஆரோக்கியமான பூண்டு தொக்கு வீட்டில் எளிதாக செய்வது எப்படி?

poondu-garlic-thokku
- Advertisement -

பல்வேறு சட்னி வகைகள் இட்லி, தோசைக்கு செய்து சாப்பிட்டாலும் இது போல வாய்க்கு ருசியாக பூண்டு தொக்கு ஒரு முறை செஞ்சு சாப்பிட்டு பாருங்க, எவ்வளவு இட்லி வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க! தின்ன தின்ன திகட்டாத இந்த பூண்டு தொக்கு சுவையில் அலாதியானதாக இருக்கும். ரொம்பவும் சுலபமாக வீட்டிலேயே எப்படி சுவையான பூண்டு தொக்கு செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பூண்டு தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – கால் கப், தனியா விதைகள் – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பூண்டு – 20 பற்கள், வரமிளகாய் – 12, காஷ்மீரி மிளகாய் – ஐந்து, புளி – சிறு கோலிகுண்டு அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெரிய வெங்காயம் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பூண்டு தொக்கு செய்முறை விளக்கம்:
முதலில் பூண்டு தொக்கு செய்வதற்கு ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மற்ற எல்லா பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் தாராளமாக விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து வறுபடும் பொழுது தனியா விதைகளை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள்.

ஒரு நிமிடம் நன்கு வதக்கியதும் சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்த்து வதக்கி விடுங்கள். இதன் பிறகு தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு லேசாக வதங்கியதும் காரத்திற்கு ஏற்ப வரமிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். காஷ்மீரி மிளகாய் காரம் கொடுக்காது ஆனால் நல்ல நிறம் கொடுக்கும். இது இல்லாதவர்கள் தவிர்த்து விடலாம், அதற்கு பதிலாக கூடுதலாக ரெண்டு வரமிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு சிறு கோலிகுண்டு அளவிற்கு புளியை விதைகள், நாரெல்லாம் நீக்கி சேர்த்து லேசாக வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து நன்கு ஆற விட்டு விடுங்கள். இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்து எடுத்து வந்த இந்த பூண்டு தொக்குடன் ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். இதற்கு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பிறகு உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு பெருங்காயத்தூள், ஒரு கொத்து கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
தாறுமாறு சுவை தரும் தக்காளி துவையல். இது வேற லெவல் டேஸ்ட் போங்க. தக்காளி வச்சு இப்படி கூட ஒரு துவையல் செய்ய முடியுமா?

பின்னர் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை கொஞ்சம் போல சேர்த்து பொன்னிறமாக நன்கு தாளிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் அரைத்து வைத்த பூண்டு சட்னியை இதில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். ஒரு மூன்று நிமிடம் தொடர்ந்து கலந்து விட்டால், பச்சை வாசம் போய் எண்ணெய் தெளிந்து சூப்பரான சுவையில் பூண்டு தொக்கு ரெசிபி தயார்! இதை இட்லி, தோசை மட்டும் அல்லாமல் சூடான சாதத்துடன் இப்படி பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -