- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்கண்ணுக்குத் தெரிந்த அழுக்கை மட்டும் தான் உங்க வீட்டு டாய்லட்ல சுத்தம் செய்வீங்களா? கண்ணுக்கே தெரியாமல்...

கண்ணுக்குத் தெரிந்த அழுக்கை மட்டும் தான் உங்க வீட்டு டாய்லட்ல சுத்தம் செய்வீங்களா? கண்ணுக்கே தெரியாமல் இந்த இடத்தில் ஒளிந்திருக்கும் கிருமிகளை எப்படி சுத்தம் செய்வது.

- Advertisement -

நம்முடைய வீட்டில் சுகாதாரம் கெடுவதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா. இந்த கழிவறை தான். எந்த ஒரு வீட்டில் கழிவறை அசுத்தமாக இருக்கிறதோ, அந்த வீட்டில் நோய் நொடிகள் நிரந்தரமாக தங்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கட்டாயம் இருக்கும். ஆகவே முதலில் நம்முடைய வீட்டில் சுத்தம் செய்ய வேண்டிய இடம் டாய்லெட். சுத்தம் செய்வது என்றால் மேலே ப்ளீச்சிங் பவுடரை கொட்டி அப்படியே தேய்த்து கழுவி விடுவது கிடையாது. கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மறைந்து இருக்கும் அந்த கிருமிகளை கூட அழிக்க வேண்டும். நம்ம வீட்டு டாய்லெட்டில் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் அழுக்குகளை நீக்குவதற்க்கு ஒரு வீட்டுக்குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்து டாய்லெட்டை சுத்தம் செய்யும் முறை:
பொதுவாக டாய்லெட்டுக்கு மேலே நாம் நன்றாக ஹார்ப்பிக் ப்ளீச்சிங் போட்டு பிரஷ் போட்டு தேய்த்து சுத்தம் செய்து விடுவோம். ஆனால் டாய்லெட்டில், தண்ணீர் ஃப்ளஷ் ஆகி வரும் இடம் இருக்கும் அல்லவா. அந்த இடத்தை நாம் கவனிப்பதே கிடையாது. அந்த இடத்தில் அவ்வளவு கிருமிகள் மறைந்திருக்கும். டாய்லெட் கழுவக்கூடிய பிரஷை அந்த இடத்திற்கு உள்ளே விட்டு கூட நம்மால் கழுவ முடியாது.

- Advertisement -

டாய்லட்டை கண்ணில் பார்க்கும் போது கூட அந்த அழுக்கு நம் கண்ணுக்கு தெரியாது. லேசாக தலையை குனிந்து பார்க்கும் போது தான் அந்த அழுக்கை நம்மால் பார்க்க முடியும். அந்த இடத்தை சுத்தம் செய்ய ஒரு சூப்பரான ஐடியா இருக்குது. அது என்ன ஐடியா என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நன்றாக புளித்த தயிர். நம்முடைய வீட்டில் நிறைய புளித்த தயிரை எடுத்து கீழே கொட்டுவோம். அதை கீழே கொட்டாதிங்க. ஒரு சிறிய கிண்ணத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். புளித்த தயிரே உங்கள் வீட்டில் இல்லை என்றால் கூட தயிரை 5 லிருந்து 7 நாட்கள் வெளியேவே வைத்து புளிக்க வைத்து விடுங்கள். அந்த தயிரில் கொஞ்சமாக ஷாம்பு கலந்துக்கோங்க. இந்த லிக்விடை டாய்லெட்டை சுத்தி உள் பக்கம் வளைவு பகுதியில் தடவ வேண்டும். ஒரு பல் தேய்க்கும் பிரஷ் வைத்து தடவிக் கொள்ளலாம்.

- Advertisement -

பல் தேய்க்கும் பிரஷ் அந்த சின்ன இடுக்குகளில் போனால் அதன் உள்ளே விட்டு தேய்க்கலாம். அப்படி இல்லை என்றால் இப்போது டாய்லெட்டை மூளை முடுக்குகளில் விட்டு சுத்தம் செய்வதற்காகவே பிரத்தியேகமாக பிரஷ்கள் எல்லாம் கடைகளில் விற்கின்றது. இப்படியாக இந்த லிக்விடை அழுக்கான வளைவு பகுதியில்  தடவி விட்டு பத்து நிமிடங்கள் ஊறவைத்து விடுங்கள். பிறகு ஃபிளஷ் செய்யும் போது உள் பக்கம் தண்ணீர் வரக்கூடிய அந்த இடத்தை நன்றாக தேய்த்து சுத்தம் செய்து விடுங்கள்.

நாம் தயார் செய்து வைத்த அந்த புளித்த தயிர் ஷாம்பு கலந்த கலவையை தண்ணீர் ஃப்ளஷ் ஆகும் இடத்தில் நன்றாக பூசி விட்டு பத்து நிமிடம் கழித்து தேய்த்து விட்டு, தண்ணீரை ஃபிளஸ் செய்தாலே போதும். அங்கே இருக்கும் கண்ணுக்குத் தெரிந்த கருப்பு நிற அழுக்கு, கண்ணுக்கு தெரியாத கிருமிகள் எல்லாம் கூட காணாமல் போய்விடும்.

இதையும் படிக்கலாமே: என்னது! கறை படிந்த பாத்ரூமை சுத்தப்படுத்த கல் இருந்தா போதுமா? ஆமாங்க பாத்ரூமை சுத்தப்படுத்த இனி அதிக விலை கொடுத்து எதையும் வாங்க வேண்டாம் இந்த கல் இருந்தா பாத்ரூம் பளிச்சுன்னு புதுசு மாதிரி மாறிடும்.

மாதத்தில் இரண்டு நாள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் உங்கள் டாய்லெட்டில் கண்ணுக்கு தெரியாத கிருமிகளின் மூலம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதே லிக்விடை டாய்லெட்டுக்கு மேல் பக்கம் ஊற்றி 10 நிமிடம் கழித்து தேய்த்து கழுவினாலும் டாய்லெட் சுத்தமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு படிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்