வாழ்வில் அனைத்து யோகங்களையும் பெற உதவும் கிருத்திகை மந்திரம்

Lord-Murugan-1

நமக்கு கிடைத்த இந்த வாழ்கையை சிறப்பாக்கிக் கொள்ள நமக்கு நோய்கள் அணுகாத உடலாரோக்கியமும், நினைத்த போது நாம் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு நல்ல செல்வ நிலையும் வேண்டும். ஒரு சிலரை தவிர, எல்லோருக்கும் இது போன்ற ஒரு யோகமான வாழ்வு அமைவதில்லை. அப்படி யோக வாழ்வு அமையாதவர்களும், அதைப் பெறுவதற்கு முருகப் பெருமானை, அவருக்குரிய கிருத்திகை நட்சத்திர தினத்தன்று வழிபட கூற வேண்டிய மந்திரம் இது.

Lord Murugan Vel

மந்திரம்:
“ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி|
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்||”

இம்மந்திரத்தை கிருத்திகை நட்சத்திரத்தன்று, காலையிலோ அல்லது மாலையிலோ, முருகன் கோவிலுக்கு சென்று, முருகனுக்கு தீபாராதனை காட்டும் சமயத்தில் இம்மந்திரத்தை 9 அல்லது 27 எண்ணிக்கையில் கூறி வழிபட்டு, அந்த கோவிலில் 9 முறை பிரதிட்சணம் வர வேண்டும். இப்படி ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் செய்து வந்தால், அந்த முருகப் பெருமானின் அருள் நமக்கு கிடைத்து, நம் கர்மவினைகள் அனைத்தும் நீங்கி, அனைத்து யோகங்களையும் பெற்று நமது எதிர்கால வாழ்வு சிறக்கும்.

இதையும் படிக்கலாமே:
மன குழப்பம் தீர உதவும் மந்திரம்

English Overview:
Here we have Kiruthigai natchathiram mantra in Tamil. This mantra needs to be chanted on Kiruthigai day. One who chant this mantra can get grace of Lord Muruga.