சமையலறையில் இருக்கும் மிக்ஸி, கிரைண்டர், இன்டக்ஷன், கேஸ் ஸ்டவ் ஆகியவற்றில் இருக்கும் விடாப்பிடியான கரைகளை நீக்க இந்த 2 பொருள் போதுமே!

stove-mixi-grainder
- Advertisement -

நாம் நம் வீட்டில் எந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்கா விட்டாலும் கட்டாயம் சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் அறையில் தான் அன்னபூரணி மற்றும் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் சமையலறை எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் வீட்டில் மகாலட்சுமி நிறைந்து இருப்பாள். இதற்கு இந்த 2 பொருட்களை வைத்து எப்படி சுத்தமாக பராமரித்து கொள்வது? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

சமையல்கட்டில் இருக்கும் இந்த மாதிரியான பொருட்களை அடிக்கடி எப்பொழுதும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்கு பிறகும் சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் இன்னும் வேலை மற்றும் நேரம் மிச்சமாகும். அப்படியே விட்டுவிட்டால் நாளடைவில் அழுக்கு மற்றும் தூசுகள் சேர்ந்து விடாப்பிடியான கரையாக மாறிவிடும். சமையல்கட்டில் எப்பொழுதும் எண்ணெய் பொருட்கள் அதிகம் பயன்படுத்துவது உண்டு எனவே தெறிக்கும் எண்ணெய் மூலமாகவும் இந்த மாதிரியான பொருட்கள் எளிதாக அழுக்கு படிய காரணமாக அமைந்து விடுகிறது.

- Advertisement -

குறிப்பாக மிக்ஸி போன்ற பொருட்களில் விடாப்பிடியாக இருக்கும் கரையை நீக்குவது என்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும், ஆனால் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து நாம் சுத்தம் செய்யும் பொழுது மிக மிக எளிதாக அவற்றை சுத்தம் செய்து விட முடியும். அதே போல அதிகபடியான கரை இருக்கும் பொருள் என்றால் அது கேஸ் ஸ்டவ். கேஸ் அடுப்பை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றால் நீங்கள் தினமும் கட்டாயம் தண்ணீரை கொண்டு அதனை துடைத்து எடுக்க வேண்டும்.

gas-stove

என்னதான் நாம் தினமும் துடைத்து எடுத்தாலும் இந்த பொருட்களில் எண்ணெய் பசை இருப்பதால் விரைவாகவே துரு கரை போல பர்னரை சுற்றிலும் படிய ஆரம்பித்துவிடும். மேலும் மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் அதில் படிந்திருக்கும் உணவு பொருட்கள் மூலம் கிருமிகளும் படை எடுக்கத் துவங்கும். மிக்ஸியிலிருந்து சிந்தும் சட்னியை துடைக்காமல் விட்டுவிட்டால் அதில் வந்து உட்காரும் பூச்சிகளும் கிருமிகளை உண்டாக்கி நோய்த்தொற்றை ஏற்படுத்தும் எனவே எளிதாக இவற்றை எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

மிக்ஸி, கிரைண்டர், இன்டக்ஷன் ஸ்டவ், கேஸ் ஸ்டவ் ஆகிய பொருட்களின் மீது படியும் எண்ணெய் பிசுக்கு மற்றும் உணவுப் பொருட்களின் கரை எளிதாக நீங்க ஒரு பவுலில் கொஞ்சம் நீங்கள் பல் தேய்க்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பேக்கிங் சோடா கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு சுத்தம் செய்யும்.

paste

டூத் பேஸ்ட் பல்லை சுத்தப்படுத்துகிறதோ இல்லையோ இந்த மாதிரியான பொருட்களை சுத்தம் செய்ய நல்ல தேர்வாக இருக்கும். பழைய பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு தொட்டு தொட்டு நீங்கள் எந்த இடங்களில் இருக்கும் அழுக்குகளை நீக்க விரும்புகிறீர்களோ அந்த இடங்களில் சற்று அழுத்தித் தேயுங்கள். மூலை முடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை கூட இது மிக சுலபமாக நீக்கி கொடுத்துவிடும். பத்து நிமிடம் தேய்த்தால் போதும் இப்பொருட்கள் அனைத்தும் பளிச்சென மின்ன ஆரம்பித்துவிடும். இதற்காக மெனக்கெட வேண்டிய அவசியம் கூட இல்லை, நீங்களும் முயற்சி செய்து பயனடையலாமே!

- Advertisement -