கிச்சன் டவல் கிளீன் பண்றது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம நிறைய டவல் வேஸ்ட் பண்ணிட்டோமே!

kitchen-towel-wash
- Advertisement -

நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களையும் துடைப்பதற்கு என்று தனியாக ஒரு டவல் வைத்திருப்போம். சிலர் அவ்வப்பொழுது தேவைப்படும் சமயத்தில் மட்டும் ஏதாவது ஒரு காட்டன் துணியை கிழித்து பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. அதுபோல கிச்சனில் இருக்கக்கூடிய பொருட்களை கையாளவும், சூடான சமையல் பாத்திரங்களை இறக்கி வைப்பதற்கும் தனியே டவல் பயன்படுத்திக் கொள்கிறோம்.

இப்படி பயன்படுத்தும் சிறிய அளவிலான டவல்கள் சிறிது நாட்களிலேயே எண்ணெய் பசையால் அழுக்கு படிந்து போய், நாற்றம் அடிக்க துவங்கிவிடும். இதை தனியாக உட்கார்ந்து துவைத்துக் கொண்டும் இருக்க முடியாது. இதனால் நாம் தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஒரு டவலை வாங்கி வைத்துக் கொள்வோம். இப்படி செய்யாமல் எளிதாக அதை சுத்தம் செய்வது எப்படி? என்கிற வீட்டு குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

- Advertisement -

கிச்சனில் பயன்படுத்தும் டவல்களை தனித்தனியாக வைத்திருப்பது நல்லது. சூடான பாத்திரங்களை இறக்கி வைப்பதற்கு தனியாகவும், எண்ணெய் பசையை துடைப்பதற்கு தனியாகவும் டவலை பயன்படுத்தலாம். அதுபோல கழுவிய பாத்திரங்களை துடைப்பதற்கு அதே டவல்களை பயன்படுத்தாதீர்கள். சிலர் இந்த எல்லா வேலையும் செய்வதற்கு ஒரே துணியை தான் பயன்படுத்துவார்கள்.

இப்படி பயன்படுத்துபவர்கள் தினமும் அதனை துவைக்கவும் வேண்டும். அப்பொழுது தான் மீண்டும் அதை மறுநாள் பயன்படுத்த முடியும். இதுபோல கிச்சன் டவல்களை அதிக அளவில் பயன்படுத்தபவர்கள் எளிதாக சுத்தம் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து தண்ணீரை சுட வையுங்கள்.

- Advertisement -

தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது அதில் ஒரு ஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடர் அல்லது ஒரு பாக்கெட் ஷாம்பூவை கத்தரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் அரை மூடி எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து கொள்ளுங்கள். பின்னர் சிறிய சிறிய டவல்களை அப்படியே போட்டு முக்கி கொள்ளுங்கள். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது தண்ணீர் ஆனது நன்கு சுத்தமாக குளிர்ந்து ஆறி இருக்க வேண்டும். அது வரை ஆற விட்டு விடுங்கள். தண்ணீர் ஆறியதும் டவல்களை கைகளாலேயே தரையில் போட்டு நன்கு துவைத்து, சாதாரணமான ஓடும் தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளலாம். சோப்பு, பிரஷ் எதுவுமே நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.

இதையும் படிக்கலாமே:
அட வாஷிங் மெஷின் கிளீன் பண்றது இவ்ளோ ஈசியா? இது தெரியாம கை வலிக்க துடைச்சி கஷ்டப்பட்டோமே. ஒரே ஒரு முறை இப்படி மட்டும் கிளீன் பண்ணி பாருங்க, பழைய மிஷின் கூட புதுசு மாதிரி மாறிடும்.

டிடர்ஜென்ட் பவுடருடன் எலுமிச்சை பழம் சேர்த்து ஊற வைக்கும் பொழுது எண்ணெய் பிசுக்குகள், அழுக்குகள் போன்றவை அதிலேயே நீங்கிவிடும். அதுவும் நாம் கொதிக்க வைத்த தண்ணீரை பயன்படுத்துவதால் கிருமிகள், அழுக்குகள் அனைத்தும் ரொம்பவே சுலபமாக அந்த தண்ணீரிலேயே நீங்கி விட்டிருக்கும். அதன் பிறகு நீங்கள் சாதாரணமாக துவைத்து, அலசி நன்கு இறுக்கமாக பிழிந்து உதறி நல்ல வெயிலில் காய வைத்து எடுத்து வைத்து விடுங்கள். அவ்வளவுதான், இது போல வாரம் ஒரு முறை செய்து வந்தால் போதும், உங்களுடைய கிச்சன் டவல்களை இனி அடிக்கடி நீங்கள் தூக்கி போட வேண்டிய அவசியமே இருக்காது. மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -