சாப்பாடு செய்யும் அரிசி இதற்கெல்லாம் கூட பயன்படுமா? உங்கள் வீட்டில் அரிசியை இப்படியும் செய்யலாம் தெரிந்து கொள்ளுங்கள்!

rice-uses

தினமும் நாம் அரிசியை வைத்து தான் சாப்பாடு செய்கிறோம். அரிசி சாப்பாடு செய்வதற்கு மட்டுமல்ல! வேறு சில உபயோகங்களுக்கு கூட வீட்டில் பயன்படுத்த முடியும். எந்த ஒரு பொருளையும் புதிதாக வேறு ஒரு விஷயத்திற்காக எப்படி பயன்படுத்தலாம்? என்பதில் தான் கெட்டிக்காரத்தனம் உள்ளது. சிறுசிறு விஷயங்களில் கூட சமையலறையில் நமக்கு தேவைப் படக்கூடிய பெரிய விஷயங்கள் அடங்கி இருக்கும். அப்படி அரிசியை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

mango-in-rice

நீங்கள் வாங்கிய சில பழங்கள் பழுக்காமல் இருக்கிறதா? குறிப்பாக மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் காயாக இருக்கும் பொழுது விரைவாக பழுக்க வைக்க இந்த குறிப்பை பயன்படுத்தலாம். எப்பொழுதும் வீட்டில் அரிசியை வாங்கி வந்தவுடன் வேறு பாத்திரத்திற்கு மாற்றி வைத்து விடுவது நல்லது. அப்படி நீங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் பழங்களை போட்டு வைத்தால் இரண்டே நாட்களில் பழம் நன்கு பழுத்து விடும். பிறகு அதனை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுடு தண்ணீர், காபி, டீ போன்றவற்றை செய்யும் பொழுது சூடாக இருக்க பிளாஸ்கில் ஊற்றி வைப்போம். அந்த பிளாஸ்கில் சில சமயங்களில் துர்நாற்றம் வீசும். பால் பொருட்கள் நாம் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது என்னதான் தண்ணீர் ஊற்றி கழுவினாலும் அதன் வாசம் மறைவதில்லை. அந்த சமயத்தில் நீங்கள் சாப்பாடு செய்ய அரிசியை ஊற வைத்த தண்ணீரை சிறிதளவு பிளாஸ்கில் ஊற்றி நன்கு ஐந்து நிமிடம் குலுக்கி கீழே ஊற்றி விடவும். பிறகு சாதாரணமாக சோப் போட்டு தண்ணீர் ஊற்றி அலசினால் போதும் பால் வாசனை எதுவுமே வராது.

flask4

நாம் அவசரமாக சமைக்கும் பொழுது உப்பு, புளி போன்ற பொருட்களில் தண்ணீர் கையோடு அப்படியே வைத்து எடுத்து பயன்படுத்தி விடுவோம். இந்த மாதிரியான பொருட்கள் தண்ணீர் படும் பொழுது விரைவாக பூச்சி பூச்சித் தொந்தரவு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே இவற்றில் ஒரு சிறு காட்டன் துணியில் கொஞ்சம் அரிசியை போட்டு மூட்டையாக கட்டி வைத்து விட்டால் போதும். தண்ணீரை அரிசி மூட்டை உறிஞ்சிக் கொண்டு பொருளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்.

உடையாமல் பாதுகாக்க வேண்டிய முட்டை வீட்டில் மொத்தமாக வாங்கி வைத்து அதிகமாக இருக்கிறது என்றால், அதனை பாதுகாப்பான இடத்தில் வைக்கவே பெரும் பாடுபட வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் அரிசியை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அந்த அரிசிக்கு மேல் உங்களிடம் இருக்கும் மூட்டைகளை அழுத்தி வைத்தால் போதும், ஆடாமல் அசையாமல் அப்படியே எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் முட்டையை எப்பொழுதும் நுனிப்பகுதி தான் கீழே வருமாறு கவிழ்த்து வைக்க வேண்டும். அப்போது தான் வெகு நாட்களுக்கு முட்டை அழுகாமல் இருக்கும்.

Egg

நமக்கு அடிக்கடி வரும் தலைவலி, தலை பாரம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு தரும் இந்த அரிசி. இரண்டு கை அளவிற்கு அரிசியை எடுத்து ஒரு காட்டன் துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ளுங்கள். இதன் மீது உங்கள் தலையை வைத்து படுக்கும் பொழுது, அரிசியில் இருந்து வரக்கூடிய உஷ்ணம் தலையில் இருக்கும் நீரை ஈர்த்து தலைவலியை குறைக்க செய்யும். இதனால் தலைபாரம் உடனே நீங்கி நல்ல நிவாரணம் கிடைக்கும். அரிசிக்கு பதிலாக மணலை சூடுபடுத்தி இதே போல மூட்டையாக கட்டி தலையில் ஒத்தடம் கொடுத்தாலும் தலைபாரம் உடனடியாக நீங்கும்.