வெட்டாத கத்தி, கத்திரிக்கோல், அருவாமனை, தேங்காய் துருவியை கூட சானம் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. வீட்டிலிருந்தபடியே ஷார்ப்பா மாத்திட சுலபமான டிப்ஸ் உங்களுக்காக!

knife

நம்முடைய வீட்டில் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய கத்தி, கத்திரிக்கோல், அருவாமனை, தேங்காய்த்துருவல் இந்த பொருட்கள் எல்லாம் அடிக்கடி மொக்கை ஆகிவிடும். அதாவது சரியாக வெட்டாமல் இருக்கும். குறிப்பாக காலையில் எழுந்து பால் வெட்டும் கத்திரிக்கோல் முதல், தேங்காய் துருவம் அருவாமனை வரை மொக்கையாக இருந்தால், சமைப்பவர்களுக்கு எரிச்சலூட்டும். சானம் பிடிப்பவர்கள் வீதியில் வந்தால்தான் அதை ஷார்பாக மாற்றமுடியும். அதுவரை இனி நாம் காத்திருக்க தேவையில்லை.

knife1

உங்களுடைய வீட்டில் பீங்கான் சம்பந்தப்பட்ட பிளேட் அல்லது காபி குடிக்கும் கப் எது இருந்தாலும் சரி, அதை கவிழ்த்துப் போட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் கத்தியை அந்த பீங்கானில் வைத்து முன் பக்கமும், பின் பக்கமும் மாற்றி மாற்றி தேய்த்தாலே போதும். வெட்டாத கத்தி சீக்கிரமே கூர்மையானதாக மாறிவிடும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு கத்தியை தேய்த்தாலே போதும்.

உங்கள் வீட்டு கத்திரிக்கோல் சுத்தமாக வெட்டவே மாட்டேங்குதா? நீங்கள் அசைவமாக இருந்தால் உங்கள் வீட்டில் முட்டை சமைப்பவர்களாக இருந்தால், அந்த முட்டை ஓடை கத்தரிக்கோலால் கட் பண்ணி பாருங்கள்! ஒரு முட்டை ஓட்டை கத்திரிக்கோலால் கட் செய்தாலே போதும். உங்களுடைய கத்திரிக்கோல் கூர்மையாக மாறிவிடும். (பச்சை முட்டை ஓடு அல்லது அவித்த முட்டை ஓடு, எந்த முட்டை ஓட்டை வேண்டுமென்றாலும் வெட்டிக் கொள்ளலாம். அது உங்கள் இஷ்டம்.)

aram1

நீங்கள் சைவமாக இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் வீணாக தூக்கி போடும் மாத்திரை கவர்களை கத்தரிக்கோலால் வெட்டி கொண்டே இருந்தால், அந்தக் கத்திரிக்கோல் சீக்கிரமே கூர்மையாக மாறுபடும். வீணாக தூக்கி போடும் மாத்திரை கவர்களை எடுத்து வெறுமனே கத்திரிக்கோலை வைத்து துண்டு துண்டாக வெட்டி போடுங்கள் போதும்.

- Advertisement -

அடுத்தப்படியாக அருவாமனை, தேங்காய்துருவல் இதை எப்படி ஷார்பாக மாட்டுவது? இதற்கு கடையிலிருந்து நாம் ஒரு பொருளை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அது என்ன பொருள் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அந்த காலத்தில் எல்லாம் அரம் என்று ஒரு பொருளை பயன்படுத்துவார்கள். சிலபேர் ரம்பம் என்றும் இதனை சொல்லுவார்கள்.

aram

இந்த அரம் மேல்பக்கம் பார்ப்பதற்கு முள்ளு முள்ளாக இருக்கும். தொட்டால் கைகள் கீரும் அளவிற்கு மேல்பக்கம் அமைந்திருக்கும். இந்த அரத்தைக் கொண்டு அருவாமனையின் வெட்டும் இடத்தினை நன்றாக தேய்த்துக் கொடுத்தால், அருவாமனை சார்பாக மாறிவிடும். இதேபோல்தான் தேங்காயை துருவும் இடத்தில் பல்லு பல்லாக இருக்கும்.

aruvamanai

நீண்ட நாட்களாக நாம் ஒரே தேங்காய் துருவலை பயன்படுத்தி வந்திருந்தால், அந்த தேங்காய் துருவும் இடமும் மொக்கையாக மாறி இருக்கும். அந்த தேங்காய் துருவலின் பல்லு பல்லாக இருக்கும் இடுக்குகளில், இந்த அரத்தை வைத்து தேய்த்துக் கொடுத்தால் போதும். தேங்காய் துருவும் இடமும் கூர்மையாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதோடு மட்டுமல்லாமல் இந்த அரம் இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் கத்தி கத்திரிக்கோல் எல்லாவற்றையும் இந்த அறத்தை கொண்டே உங்கள் கையாலேயே சுலபமாக கூர்மைப்படுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ட்ரை பண்ணி பாருங்க நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.