கோபத்தால் இழந்தவற்றை மீண்டும் பெற

murugan sivan
- Advertisement -

வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டிய முக்கியமான ஏதாவது ஒன்றை நிச்சயம் இழந்து இருப்பார்கள். சற்று யோசித்துப் பார்த்தால் அதிகமாக அவர்களின் கோவத்தினாலே இது போன்ற முடிவுகளை எடுத்து இருப்பார்கள். கோபம் எல்லோருக்கும் வரக் கூடிய ஒரு சாதாரண விஷயம் தான்.

ஒரு சிலருக்கு இது அதிக அளவில் வரும் கோபம் வந்தால் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு இருப்பார்கள். அப்படியான சூழ்நிலையில் எடுக்கக் கூடிய முடிவு அனைத்தும் தவறானதாகவே இருக்கும் அதன் பிறகு அவர்கள் நிச்சயம் வருந்துவார்கள் ஆனால் எந்த பலனும் கிடையாது. இப்படி கோபத்தினால் அவசரத்தில் ஒரு முடிவெடுத்து அதன் மூலம் நம் வாழ்க்கையில் இழந்தவற்றை திரும்பப் பெறவும் ஆலய வழிபாடு உள்ளதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதற்கெல்லாம் கூட ஆலயம் உள்ளதா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது அப்படி ஒரு திருத்தலம் இருக்கிறது என்றும் அங்கு சென்றால் கோபத்தினால் நாம் இழந்துவற்றை திரும்ப பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. வாருங்கள் அது எந்த ஆலயம் எப்படி வழிபட வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோபத்தால் இழந்தவற்றை திரும்ப பெற

ஒரு மனிதன் அதிகப்படியாக கோபப்பட்டு உணர்ச்சி வசப்படுவதற்கெல்லாம் காரணம் செவ்வாய் கிரகம் என்று சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் இவருடைய நிலை கெட்டுப் போய் இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் இது போன்ற பிரச்சனையில் சிக்கிக் கொள்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இப்படியாகத் தான் பலர் செய்யும் வேலை வாழ்க்கை சொத்து போன்றவற்றை இழந்து நிற்பதை நம்மில் பலரும் பார்த்திருப்போம். ஏன்? அதில் ஒருவர் நாமாக கூட இருக்கலாம். சரி இப்படி கோபத்தால் இழந்தவற்றை திரும்ப பெறுவதற்கான கோவில் எங்கு இருக்கிறது என்று பார்ப்போம்.

இந்த கோவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது. தன்னுடைய பெயரையே ஊரின் பெயராக மாற்றிக் கொண்ட திருமுருகன் பூண்டி அருள்மிகு திருமுருக நாகேஸ்வரர் கோவில் தான் அந்த திருத்தலம். இங்கு சென்று வழிபடும் போது நம்முடைய இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த ஆலயத்தில் கோபத்திற்கே பெயர் போனவரான துர்வாச முனிவர் சிவபெருமானையும் முருகப்பெருமானையும் வழிபட்டு தன்னுடைய கோவத்தினால் ஏற்பட்ட பாவத்தை தீர்த்துக் கொண்டதாக புராண கதைகள் கூறுகிறது. இங்கு ஆலயத்தின் சிவபெருமான் சுயம்புவாக தோன்றியவர். இங்குள்ள முருகப்பெருமானும் வேலும் மயிலும் இல்லாமல் காட்சி தருகிறார்.

தங்களுடைய கோபத்தால் அனைத்தையும் இழந்தவர்கள் இந்த திருத்தலத்திற்கு தங்களுடைய பிறந்த நட்சத்திர நாள் அன்று செல்ல வேண்டும். அப்படி செல்ல முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரை நேரத்தில் சென்று சிவனுக்கும் முருகப்பெருமானுக்கும் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

அதன் பிறகு சுவாமி பேரிலும் தங்களுடைய பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவற்றையெல்லாம் செய்த பிறகு அந்த ஆலயத்தில் அமர்ந்து மனதார சிவபெருமானிடமும் முருகப்பெருமானுடையும் தாங்கள் இழந்தவற்றை திரும்ப பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சிவராத்திரி அன்று செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்

இந்த வழிபாடு நீங்கள் இருந்தவற்றை நிச்சயம் உங்களுக்கு திருப்பித் தரும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கையுடன் இந்த ஆலய வழிபாட்டை செய்து இழந்த அனைத்தையும் திரும்ப பெற்று நலமுடன் வாழ வழி தேடி கொள்ளுங்கள்.

- Advertisement -