சிவராத்திரி அன்று செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்

sivan sivalingam
- Advertisement -

உலகையே காத்து ரட்சிக்கும் எம்பெருமான சிவபெருமானுக்குரிய மிக விசேஷமான நாள் எனில் அது இந்த சிவராத்திரி தான். சிவராத்திரி என்பது மாதம் மாதம் வரக்கூடியது தான். ஆனால் இந்த மகா சிவராத்திரி என்பது முழுமையாக சிவன் அருளை நாம் பெற நமக்கு கிடைத்த ஒரு நன்னாள் என்றே சொல்லலாம்.

இந்த தினத்தில் தான் பார்வதி தேவியார் இரவு முழுவதும் உலக மக்களின் வாழ்வுக்காக சிவபெருமானை நோக்கி தவம் இருந்து சிவபெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டதாக சொல்லப்படுகிறது. அப்பேர்ப்பட்ட புனிதமான இந்த தினத்தில் நாமும் சிவபெருமானை வழிபட்டு நம்முடைய வாழ்விலும் வளங்களை பெறலாம்.

- Advertisement -

ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் சிவராத்திரி அன்று நாம் செய்யக்கூடிய செய்யக் கூடாத சில முக்கியமான தகவல்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த தகவல் உங்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும் வாங்க அது என்னவென்று பார்க்கலாம்.

சிவராத்திரியில் செய்ய வேண்டியது செய்யக் கூடாது

சிவராத்திரி அன்று முதலில் செய்யக் கூடாதவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். சிவராத்திரி அன்று நாம் உணவு உண்ணக் கூடாது. இது தான் சிவராத்திரியின் வழிபாட்டில் முக்கிய அம்சம். ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் எளிமையான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் கர்ப்பிணி பெண்கள் உபவாசம் இருக்கக் கூடாது.

- Advertisement -

அடுத்ததாக சிவராத்திரி அன்று உறங்கக் கூடாது. சிவராத்திரி அன்று காலை முதல் மறுநாள் மாலை 6 மணி வரையில் கண்விழித்து சிவபெருமானை நினைத்து வணங்க வேண்டும். அப்படி கண் விழிக்கும் வேளையில் பொழுது போக்குகளில் நேரத்தை செலவழித்து கண் விழிக்க கூடாது. இறை சிந்தனையுடன் கண் விழித்திருப்பது முழுமையான விரத பலனை தரும்.

சிவராத்திரி அன்று செய்ய வேண்டியவற்றை பற்றி பார்க்கலாம். சிவராத்திரி அன்று கட்டாயமாக உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். அது நாளைய தினம் பகல் முழுவதும் இருந்து மறுநாள் காலை 6:00 மணி வரையில் இப்படி இருக்க வேண்டும். அதே போல் சிவராத்திரி அன்று உறங்காமல் கண் விழிக்க வேண்டும். இப்படி சிவபெருமானை நினைத்து உண்ணாமல் உறங்காமல் கண் விழிப்பதே சிவராத்திரி விரதம்.

- Advertisement -

அடுத்து அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு கட்டாயமாக நான் அபிஷேகம் செய்ய வேண்டும். வீட்டில் லிங்க வழிபாடு செய்பவர்கள் அன்றைய தினத்தில் கட்டாயமாக அபிஷேகம் செய்ய வேண்டும். ருத்ராட்சம் வைத்திருந்தாலும் அதற்கும் அபிஷேகம் செய்யலாம் ஒரு வேலை வீட்டில் எதுவும் இல்லை என்றால் ஆலயத்தில் அபிஷேகத்திற்கு ஏதாவது ஒரு பொருளை கட்டாயமாக வாங்கிக் கொடுக்க வேண்டும்.

அடுத்து நாளைய தினத்தில் உங்கள் கையால் ஒரே ஒரு வில்வ இலையாவாது சிவபெருமான் மீது படும் படி காத்துக் கொள்ளுங்கள். இது தான் மிக மிக முக்கியம். வீட்டில் சிவபெருமான் படம் வைத்து வணங்குபவர்கள் கூட படத்திற்கு வைக்கலாம் அல்லது ஆலயத்தில் சிவபெருமானுக்கு வில்வத்தை சேர்த்து அர்ச்சனை செய்யுங்கள்.

அதே போல் இந்த விரதம் இருப்பவர்கள் லிங்கோத்பவர் காலம் என்று சொல்லப்படும் இரவு 11:45 முதல் 12:15 வரையிலான இந்த அரைமணி நேரத்தில் முழுக்க இறை சிந்தனையுடனும் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். அடிமுடி இல்லாதவர் சிவபெருமான் என்று அவர் நிரூபித்த இந்த காலம் தான் மிகவும் முக்கியமானது. இந்த நேர வழிபாடு மிக நல்ல அற்புதமான பலன்களை நமக்குத் தரும்.

ஒரு வேளை எங்களால் விரதமும் இருக்க முடியாது உறங்காமல் கண் விழிக்கவும் முடியாது என்று நினைப்பவர்கள் கூட இந்த லிங்கோத்பவர் காலத்தில் மட்டுமாவது சிவபெருமானை நினைத்து மனமார உருகி வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டு அதன் பிறகு தூங்க செல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: குருவின் அருள் பெற

அதே போல் அன்றைய தினத்தில் ஒரே ஒரு வில்வ இலையாவது வைத்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து விடுங்கள். இதுவே பல கோடி புண்ணியங்களை உங்களுக்கு தேடித் தரும். இந்த மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை மனதார நினைத்து வணங்கி அவருடைய திருவருளால் நல்லதொரு வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -