முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையாக செவ்வாய்க்கிழமை திகழ்கிறது. அவருக்கு உகந்த திதியாக சஷ்டி திதி திகழ்கிறது. இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாகவும் அதே சமயம் மாத பிறப்பாகவும் திகழக்கூடியது தான் ஜூலை ஒன்றாம் தேதி. இன்றைய நாளில் மதியம் 1:53 வரை சஷ்டி திதி இருக்கிறது. அதனால் செவ்வாய் கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சஷ்டி திதி அன்று காலையிலேயே முருகப்பெருமானை நாம் இந்த முறையில் வழிபாடு செய்ய நமக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கோடீஸ்வர யோகம் தரும் வழிபாடு
பொதுவாகவே பலரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் முருகப்பெருமாணிக்கு என்று சிறப்பாக வழிபாட்டு முறைகளை செய்வார்கள். இன்னும் சிலரோ முருகப்பெருமானுக்குரிய சிறப்பு வாய்ந்த நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். முருகப்பெருமானின் பக்தர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் இந்த மூன்று நாட்களையும் தவிர விடமாட்டார்கள். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சஷ்டி திதி என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. இதற்காக இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த சஷ்டி திதியில் நாம் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து முருகப் பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்ய அவரின் அருளால் நமக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும்.
இந்த தீபத்தை ஜூலை மாதம் ஒன்றாம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. ஒருவேளை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஏற்ற இயலவில்லை என்பவர்கள் காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் இந்த தீபத்தை ஏற்றலாம். முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். முருகப் பெருமானுக்கு முன்பாக ஒரு தட்டை வைத்து அதில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். இயன்றவர்கள் ஆறு எண்ணிக்கையில் வெற்றிலை தீபம் கூட ஏற்றலாம். துவரம் பருப்பு தீபம் ஏற்றுபவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த தீபத்தையும் ஏற்றலாம். வெற்றிலை தீபம், துவரம் பருப்பு தீபம் என்று ஏற்றாதவர்கள் வெறும் நெய்யை மட்டும் ஊற்றி ஒரே ஒரு தீபத்தை ஏற்றினாலும் முழு பலன் என்பது கிடைக்கும்.
முருக பெருமானுக்கு செவ்வரளி மலர்களை மாலையாக சாற்றுங்கள். ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இனிப்பு பொருட்கள் ஏதும் இல்லை என்னும் பட்சத்தில் சிறிதளவு தேனையாவது வைக்கலாம். பிறகு வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு முருகப் பெருமானின் மந்திரமான “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை 108 முறை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து பாராயணம் செய்ய வேண்டும். இப்படி செய்து முடித்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். அவ்வாறு காட்டும் பொழுது நம்முடைய குலதெய்வம் வீற்றிருக்கக்கூடிய நிலை வாசலுக்கும், நாம் தூப தீப ஆரத்தி காட்ட வேண்டும். இப்படி சஷ்டி திதியோடு சேர்ந்து வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது முருக பெருமானின் அருளால் கோடீஸ்வர யோகம் உண்டாகும். இயன்றவர்கள் அன்றைய தினம் முதல் செலவாக ஏதாவது ஒரு வாசனை நிறைந்த மலரை வாங்குவது கூடுதல் சிறப்பை தரும்.
இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை அதிகரிக்கும் முருகர் மந்திரம்
முருகப்பெருமானின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும், நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் செவ்வாய் கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சஷ்டி திதியில் இந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். அனைத்து நன்மைகளும் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.