- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடீஸ்வர யோகம் கிடைக்க பொங்கல் தினத்தன்று வாங்க வேண்டிய பொருள்

கோடீஸ்வர யோகம் கிடைக்க பொங்கல் தினத்தன்று வாங்க வேண்டிய பொருள்

- Advertisement -

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியை கேள்விப்பட்டு இருக்கிறோம். இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்தில் இருந்து வெளியே வருவதற்கு தை மாதம் நமக்கு நல்ல வழியை காட்டும் என்று கூறத்தான் இந்த பழமொழியை அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். தை மாதத்தின் முதல் நாள் அன்று பொங்கல் திருநாளாகவும் நாம் கொண்டாடுவோம். அன்றைய தினத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபாடு செய்வோம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் எந்த பொருளை வாங்கினால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கோடீஸ்வர யோகம் கிடைக்க பொங்கல்

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதித்து நன்றாக வசதியுடன் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அதனால் தான் பலரும் ஏதாவது ஒரு வேலையை செய்து ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாரித்து விட வேண்டும் என்று நினைப்பார்கள். என்ன தான் நம்முடைய முயற்சியின் காரணமாக நாம் பலவிதமான வேலைகளை செய்தாலும் இறைவனின் அருள் நமக்கு கிடைத்தால் தான் அதில் நம்மால் வெற்றி பெற முடியும். அதனால் பலரும் இறைவழிபாட்டை மேற்கொள்வார்கள் இறை வழிபாட்டோடு சில சூழ்ச்சிவமான காரியங்களை நாம் செய்யும்பொழுது அதன் விளைவாக நமக்கு நன்மைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அந்த வகையில் தாந்திரீக அடிப்படையில் கோடீஸ்வர யோகத்தை பெரும் முறையைப் பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

கோடீஸ்வர யோகம் என்பது அனைவருக்கும் கிடைத்து விடாது. ஒருவருடைய ஜாதக அமைப்பை பொருத்தே அவருக்கு கோடீஸ்வர யோகம் இருக்கிறதா இல்லையா என்பது தெரியும். சாதாரண குடிசையில் இருக்கக்கூடியவர் கூட திடீரென்று ஏதோ ஒரு காரணத்தினால் கோடீஸ்வரனாகி இருக்கிறார்கள். ஜாக்பாட் அடித்துவிட்டது என்றோ, கோடீஸ்வர யோகம் வந்துவிட்டது என்றோ, சுக்கிர திசை அடித்து விட்டது என்றோ இந்த அதிர்ஷ்டத்தை கூறுவது உண்டு. மேலும் கோடீஸ்வர யோகத்தை பெற வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்குரிய முயற்சியையும் நாம் செய்ய வேண்டும். அப்படியே முயற்சியை செய்வதோடு தாந்திரீக அடிப்படையில் பரிகாரங்களையும் செய்தோம் என்றால் ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் கோடீஸ்வர யோகம் என்பது ஏற்படும்.

இந்த தாந்திரீக பரிகாரத்தை தை மாதத்தின் முதல் நாள் ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று தான் செய்ய வேண்டும். இதற்கு நாம் ஒரு பொருளை கடையிலிருந்து வாங்கி வர வேண்டும். அந்த பொருள்தான் வெள்ளி. வெள்ளி என்பது சுக்கிரனின் உலோகமாக கருதப்படுகிறது. வெள்ளியை நாம் அதிக அளவில் வீட்டில் வாங்கி வந்து சேர்ப்பதன் மூலம் சுக்கிர யோகம் என்பது நமக்கு கிடைக்கும். சுக்கிரன் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான பணவரவை தருபவர். மேலும் வசதி வாய்ப்பை தரக்கூடியவராகவும் திகழ்கிறார்.

- Advertisement -

அப்படிப்பட்ட சுக்கிரனுக்குரிய இந்த உலோகமான வெள்ளியை குரு ஹோரையில் வாங்க வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. குரு என்பவர் பெரும்பணத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவர். குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? அதற்கிணங்க குரு ஹோரையில் வெள்ளியை வாங்க வேண்டும்.

பொங்கல் திருநாளன்று குரு ஹோரை என்பது மாலை ஏழு மணியில் இருந்து எட்டு மணிக்குள் வரும். அந்த நேரத்தில் கடைக்குச் சென்று ஒரு சிறிய அளவிலாவது வெள்ளியை வாங்கி வீட்டிற்கு எட்டு மணிக்குள் அதாவது குரு ஹோரை முடிவதற்குள் வந்துவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சுக்கிரனின் யோகமும், குருவின் யோகமும் தை மாதத்தின் முதல் நாளே நமக்கு கிடைக்கும். அதன் மூலம் நமக்கு கோடீஸ்வர யோகம் என்பது உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:தீராத பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க

இந்த நேரத்தில் இந்த ஒரு பொருளை வீட்டிற்கு வாங்கி வந்து வைத்து பாருங்கள் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றமும், பேரதிர்ஷ்டமும், கோடீஸ்வர யோகமும் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்