நல்ல நாள், பண்டிகைகளில் பரிசளிப்பவர்கள் இந்த பொருட்களை மட்டும் பரிசளிக்கக்கூடாது தெரியுமா? தன லட்சுமி அருளை பறிக்கும் பரிசு பொருட்கள் என்னென்ன?

gold-lakshmi-salt
- Advertisement -

பிறந்த நாள், திருமண நாள், விசேஷங்கள், விழாக்கள், பண்டிகைகள் என்று வரும் பொழுது நம்முடைய உறவினர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு பரிசளிப்பதை நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் அன்புடன் பரிசுகளை பரிமாற்றிக் கொள்ளும் பொழுது அந்த உறவு இன்னும் பலப்படுகிறது. இத்தகைய பரிசு பொருட்களில் இந்த சில பொருட்களை நீங்கள் பரிசாக கொடுப்பதன் மூலம் உங்களிடம் இருக்கும் மகாலட்சுமியின் அருள் நீங்கி விடுவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படியான சில முக்கிய பரிசு பொருட்களை பற்றிய அரிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

விநாயகர் மற்றும் மகாலட்சுமியின் சிலைகளை பொதுவாக பரிசளிப்பதை தவிர்க்க வேண்டும். இவை தன வரவை தக்க வைக்கக்கூடிய ஆற்றல் கொண்ட கடவுளராக இருப்பதால் இத்தகைய பொருட்களை பரிசளிப்பதன் மூலம் உங்களிடம் இருக்கும் பண வரவு தடைப்படும் என்று நம்பப்படுகிறது. ஆனால் விநாயகர் மற்றும் லட்சுமி இவை இரண்டு பேரும் ஒருசேர இருக்கும் புகைப்படம் அல்லது ஏதாவது ஒரு பரிசு பொருட்களை மற்றவர்களுக்கு பரிசளிக்க கூடாது. இருவரும் ஒன்றாக இணைந்த இடத்தில் ஐஸ்வர்யம் நிறைந்திருக்கும். எனவே ஐஸ்வரியம் நிறைந்த பொருட்களை மற்றவர்களிடம் பரிசாக கொடுக்கும் பொழுது உங்களுடைய அதிர்ஷ்டமும் அவர்களுக்கு சென்று விடுவதாக ஒரு நம்பிக்கை உண்டு.

- Advertisement -

அடுத்ததாக தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களால் ஆன பரிசு பொருட்களை எல்லோருக்கும் பரிசாக வழங்குவது உண்டு. ஆனால் தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம், பித்தளை என்று ஐந்து உலோகங்கள் கொண்ட பொருட்கள் உங்களிடம் இருந்தால் அதை எவருக்கும் பரிசாக கொடுக்க கூடாது என்று ஆன்மீகம் கூறுகிறது. இந்த சக்தி நிறைந்த பொருள் உங்களிடம் இருக்கும் வரை தான் அதற்கு மதிப்பு! நீங்கள் அதை பரிசாகவோ, தானமாகவோ ஒருவருக்கு கொடுத்தால் உங்களிடம் இருக்கும் அதிர்ஷ்டமும் நீங்கிவிடும்.

எஃகு மற்றும் இரும்பு சம்பந்தப்பட்ட எந்த ஒரு பொருட்களையும் மற்றவர்களுக்கு பரிசாக கொடுக்கக் கூடாது. பரிசு பொருளாக இந்த உலோகங்களை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் எச்சரிக்கிறது. அலுமினிய பொருட்கள் மங்களகரமானது என்றும் கூறுகிறது. அலுமினியத்தால் ஆன பரிசு பொருட்களை ஒருவருக்கு நீங்கள் கொடுக்கும் பொழுது அந்த உறவானது நீண்ட காலங்கள் நீடிக்குமாம்.

- Advertisement -

பரிசாக நீங்கள் ஒருவருக்கு கொடுக்க விரும்பும் பொருள் நீங்கள் புதிதாக வாங்கியதாக இருக்க வேண்டும். நாம் பயன்படுத்திய பொருட்களை இன்னொருவருக்கு பரிசாக கொடுப்பது குடும்பத்திற்கு ஆகாது, துரதிர்ஷ்டத்தை கொடுக்கும். சிலர் அவர்களுக்கு வந்த பரிசு பொருட்களை பயன்படுத்தி பார்த்த பின்பு அதை புதிதாக அப்படியே வைத்திருப்பார்கள். சரி நமக்கு தான் பயன்பட மாட்டேன் என்கிறது, மற்றவர்களுக்கு கொடுப்போம் என்று அதை பேக் பண்ணி கொடுப்பது உண்டு. இது போல செய்யவே கூடாது, பயன்படுத்திய பொருட்களை பரிசளித்தால் துரதிருஷ்டம் வரும்.

சிலர் புதிய வஸ்திரங்களை பரிசளிப்பது உண்டு. பட்டினால் செய்யப்பட்ட புது வஸ்திரங்களை பரிசளித்தால் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். இதனை தவிர்த்து கருப்பு நிறம் சார்ந்த வஸ்திரங்களை ஒருவருக்கு பரிசளித்தால் சனி தோஷம் உண்டாகும். சனியினால் பாதிக்கப்படுபவர்கள், இந்த நிறத்தில் பரிசாக இன்னொருவருக்கு வஸ்திர தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். உப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை புகுந்த வீட்டிற்கு அனுப்பிய மகளுக்கு, தாய் பரிசாக கொடுக்கக் கூடாது. ஏதாவது ஒரு சிறு தொகையை வாங்கிக் கொண்டு இவற்றை கொடுத்து அனுப்புங்கள். மற்றவர்களும் உப்பு, எண்ணெய் போன்றவற்றை தானமாகவோ அல்லது பரிசாகவோ கொடுக்கக் கூடாது. இதுவும் மகாலட்சுமியின் அருளை தடை செய்கிறது.

- Advertisement -